- Advertisement -

வராத பணம் வர பரிகாரம்

- Advertisement -

நாம் ஒருவருக்கு கடனாகவோ அல்லது கைமாத்தாகவோ கொடுத்த பணம், இழந்த பணம், இழந்த செல்வங்கள், சொத்துக்கள் போன்றவை திரும்ப கிடைப்பதற்கு வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய பரிகாரம் பற்றிய தாந்திரீக மற்றும் ஆன்மீகம் சார்ந்த தகவலை தான் இந்த பதிவின் மூலம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

பணம் வாங்கியவர்களை விட பணம் கொடுத்தவர்கள் தான் இன்று அதிகம் அல்லாட வேண்டி இருக்கிறது. பணத்தையும் வாங்கி வைத்துக் கொண்டு, நம்மை அலையவும் வைப்பவர்கள் இன்று பெருகி வருகின்றனர். அதிக வட்டிக்கு கடன் கொடுப்பதும் தவறுதான், வாங்கிய கடனை கொடுக்காமல் ஏமாற்றுவதும் தவறுதான். ஒருவர் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணம் என்றும் வீண் போவதில்லை.

- Advertisement -

நீங்கள் இழந்த பணம், உங்களுக்கு வரவேண்டிய பணம், செல்வங்கள், சொத்துக்கள் போன்றவை திரும்ப கிடைப்பதற்கு வீட்டிலேயே எளிய பரிகாரத்தை செய்யலாம். பொதுவாக வீட்டில் காமாட்சி அம்மன் விளக்கை பூஜை அறையில் ஏற்றி வழிபடுகின்றோம். குத்துவிளக்கு மகாலட்சுமியின் அருட்கடாட்சத்தை நமக்கு அள்ளி வழங்கக் கூடியது. குத்துவிளக்கு ஏற்றி வைப்பவர்கள் இல்லத்தில் ஒரு பொழுதும் புலம்பல் சத்தம் கேட்பதில்லை.

குத்துவிளக்கு மகிழ்ச்சியையும், பண வரவையும் கொடுக்கக்கூடியது. குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள், பிரச்சனைகள் இருந்தால், கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இல்லை என்றால், வீட்டில் நிம்மதி இல்லை என்றால் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை தோறும் குத்துவிளக்கு ஏற்றிப் பாருங்கள். குத்துவிளக்கு ஏற்றுபவர்கள் நன்கு பெரிய விளக்காக ஏற்றுங்கள். மகாலட்சுமிக்கு இருபுறமும் குத்துவிளக்கு வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரியிட்டு தீபம் ஏற்றி வந்தால் சகல சந்தோஷங்களும், சௌபாக்கியங்களும் கிட்டும் என்பது ஐதீகம்.

- Advertisement -

வராத பணம் வரவும், கொடுத்த பணம் திரும்ப கிடைக்கவும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையில் குத்து விளக்கை ஏற்றி வழிபடலாம், மேலும் ஒரு வெள்ளை துணியில் பரிகாரப் பொருட்களை போட்டு அதை கன்னி மூலையில் வைக்க வேண்டும். இந்த பரிகாரத்திற்கு தேவையான மூன்று பொருட்கள் உண்டு. முதலில் கருப்பு எள் எடுத்துக் கொள்ளுங்கள். கருப்பு எள் சனி பகவானுக்கு உகந்தது, கடன்களை தீர்க்கக் கூடியது, பிறவி கர்மங்களையும் அழிக்க வல்ல சக்தி கொண்டது.

இந்த கருப்பு எள்ளுடன், சம அளவிற்கு வெந்தயம் சேர்த்துக் கொள்ளுங்கள். வெந்தயம் பண வரவை ஈர்க்கக்கூடியது. நமக்கு சேர வேண்டிய பணத்தை நம்மிடம் கொண்டு சேர்க்கக்கூடியது. பின் இவற்றுடன் கொஞ்சம் கல் உப்பை சேர்க்க வேண்டும். கல் உப்பு பணத்தை தக்க வைத்துக் கொள்ள உதவும். மகாலட்சுமியின் அம்சம் நிறைந்தது கல் உப்பு. இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக சேர்த்து இடித்து வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
சனிப்பெயர்ச்சி பலன் 2025 – 2027

இடித்த இந்த பவுடரை எடுத்து வைத்துள்ள வெள்ளைத் துணியில் போட்டு ஒரு முடிச்சாக கட்டி பூஜை அறையில் வையுங்கள். பின் குத்துவிளக்கு ஏற்றி மகாலட்சுமிக்கு பூஜை செய்த பின்பு வீட்டில் கன்னி மூலையில் இதை வைக்க வேண்டும். அதாவது தென்மேற்கில் வைக்க வேண்டும். யாருடைய கைகளுக்கும் எட்டாதவாறு வைத்து விடுங்கள். 48 நாட்களுக்கு ஒரு முறை இந்த பொருட்களை வேறு துணியில் தயார் செய்து மாற்றி வைக்க வேண்டும். பழைய பொருட்களை மரத்தடியில் போட்டு விடுங்கள். இப்படி செய்து வந்தால் வராத பணம், வந்து சேர வேண்டிய பணம், மற்றவர்கள் கொடுக்க வேண்டிய பணம், இழந்த செல்வங்கள், சொத்துக்கள் எதுவாகினும் உங்களை அதுவாகவே தேடி வந்துவிடும்.

சற்று முன்