இல்லத்தரசிகளுக்கு தேவைப்படக்கூடிய பயனுள்ள 5 வீட்டு குறிப்புகள்

dosai
- Advertisement -

தோசை கல்லில் ஐஸ் கட்டி போட்டால் என்ன நடக்கும். காலையில் இல்லத்தரசிகளுக்கு இருக்கக்கூடிய அவசர அவசரமான வேலையில் இந்த தோசை ஊற்றுவதும் ஒன்று. ஆனால் அவசரமாக தோசை வார்க்கும் போது தான், அந்த தோசை சரியாக வராது. தோசை, கல்லிலேயே ஒட்டிக் கொள்ளும். தோசை கல்லுக்கும் இல்லத்தரசிக்கும் ஓயாத சண்டைதான் வரும். இந்த பிரச்சனையிலிருந்து தப்பிக்க என்ன செய்வது. இதோ பயனுள்ள வீட்டு குறிப்பு உங்களுக்காக.

Tip 1

அவசரத்துக்கு தோசை கல்லில் ஊற்றிய தோசை சரியாக வரவில்லையா. ஃப்ரீசரில் இருந்து ஒரு ஐஸ் கட்டியை எடுங்க, அந்த தோசை கல்லின் நடுப்பக்கம், ஓரம் எல்லா இடத்திலும் அந்த ஐஸ் கட்டியை வைத்து நன்றாக தேய்த்துக் கொடுங்கள். பிறகு அந்த தோசை கல்லில் தோசை வார்த்தால், தோசை ஹோட்டல் ஸ்டைலில் மொறு மொறுப்பாக சிவந்து சூப்பராக வரும். ஒரு ஐஸ் கியூப் அல்லது இரண்டு ஐஸ் கியூப் எடுத்து தோசை கல்லில் தேய்க்கலாம் அது உங்கள் விருப்பம் தான்.

- Advertisement -

Tip 2

அட ஃப்ரீசரில் ஐஸ் கட்டி வைக்க இடம் இல்லை. ஃப்ரீசர் முழுவதும் ஐஸ் கட்டி மலை போல் குவிந்து இருக்கிறது. இதை கரைக்க ஏதாவது வழி இருக்கா. இருக்குதுங்க, அடிக்கடி ஃப்ரீசரில் தூள் உப்பை தூவி விட்டுக் கொண்டே இருந்தால் ஐஸ் கட்டி சீக்கிரம் கரையும்.

மீண்டும் மீண்டும் ஐஸ் கட்டிகள் ஃப்ரீசரில் படியாது. ஒரு உருளைக்கிழங்கை எடுத்து இரண்டாக வெட்டிக் கொள்ளுங்கள். அதன் நடுவே தூள் உப்பை தொட்டு இந்த பிரீசர் முழுவதும் தேய்த்துக் கொடுத்தால் ஐஸ் கட்டி மீண்டும் மீண்டும் பிடிக்கவே பிடிக்காது. இரண்டு வாரத்திற்கு ஒரு முறை இந்த டிப்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -

Tip 3

அழுக்கு துணி போட்டு வைத்திருக்கும் கூடையில் துர்நாற்றமும், கொசு, எரும்பு தொல்லை தாங்க முடியவில்லையா. அழுக்குத் துணிக்கு அடியில் ஒரு கட்டி கற்பூரம். அழுக்குத் துணிக்கு மேலே ஒரு கட்டி கற்பூரம் போட்டு வையுங்க. அழுக்கு துணியில் இருந்து வாடையும் அடிக்காது அதில் கொசுவும் தங்காது.

Tip 4

இந்த வெயில் காலத்தில் வெள்ளை சட்டையில், காலரில் ரொம்ப அழுக்கு சேருதா. வியர்வையின் மூலம் சட்டை காலர் ரொம்பவும் அழுக்காக தான் செய்யும். அந்த காலரை இரண்டாக மடிக்க கூடிய அந்த கோடு பகுதியில் தான் அதிகமாக அழுக்கு படியும். காயம் பட்டால் அதன் மேலே ஒட்டுவதற்கு பேப்பர் பேண்டைட் (paper bandage tape) கடைகளில் விற்கும்.

- Advertisement -

அந்த பேண்டைட் வாங்கி கையில் கிழித்தாலே சுலபமாக கிழிக்க முடியும். அப்படி ஒரு பேண்டைட் வாங்கிக்கோங்க. உங்க வீட்டில் இருக்கும் வெள்ளை சட்டையின் காலர் பகுதியில் மடிக்க கூடிய அந்த இடத்தில், உள் பக்கம் இந்த பேண்டைட் டேப்பை ஒட்டிவிட்டால், காலர் பகுதி அழுக்காகாது. இந்த பேண்டை ஒட்டுவதும் பிரிப்பதும் ரொம்ப ரொம்ப சுலபமாக இருக்கும். இந்த பேண்டைடின் மூலம் உங்களுடைய சருமத்துக்கு எந்த இரிடேஷனும் இருக்காது. தேவைப்படுபவர்கள் இதையும் முயற்சி செய்து பாருங்கள்.

Tip 5

பொதுவாகவே குழந்தைகளுக்கு டப்பாவில் வேகவைத்த முட்டையை போட்டு பள்ளிக்கூடத்திற்கு அனுப்பவோம். அவர்கள் மீண்டும் அந்த முட்டை டப்பாவை வீட்டிற்கு கொண்டு வந்த உடன் அதை என்னதான் கழுவினாலும் அந்த டப்பாவுக்கு உள்ளே இருக்கும் வாடை போகாது. சுத்தம் செய்த அந்த டப்பாவுக்கு உள்ளே கொஞ்சம இரண்டு சொட்டு நல்லெண்ணெயை தேய்த்து வைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: பாத்ரூமை சுத்தம் செய்ய எளிய வீட்டு குறிப்பு

ஒரு மணி நேரம் கழித்து சோப்பு லிக்விட் ஊற்றி மீண்டும் அந்த பாத்திரத்தை தேய்த்து விட்டால் போதும். அந்த முட்டை வாடை அந்த பாத்திரத்தில் இருந்து முழுமையாக நீங்கிவிடும். இதுபோல எந்த அசைவம் சமைத்த பாத்திரமாக இருந்தாலும் சரி, இஞ்சி பூண்டு வாடை வீசும் பாத்திரம் ஆக இருந்தாலும் சரி, அந்த வாடையை நீக்க இந்த டிப்சை பயன்படுத்தலாம்.

- Advertisement -