
ஆடி மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு நாட்களுமே விசேஷகரமான நாட்களாக திகழ்கிறது. அந்த வகையில் நாளைய தினம் தேய்பிறை பிரதோஷம் என்பது வருகிறது. பிரதோஷம் என்றாலே அது சிவபெருமானுக்குரியது என்று அனைவருக்கும் தெரியும். அந்த பிரதோஷ நேரத்தில் சிவபெருமானை நாம் வழிபட்டால் இந்த பிரபஞ்சத்தில் இருக்கக்கூடிய அனைத்து விதமான தெய்வங்களையும் வழிபட்டதற்கு சமம் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட பிரதோஷ நாளில் சிவபெருமானை நாம் எந்த முறையில் வழிபட்டால் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பிரதோஷம் தோன்றிய கதை அனைவருக்கும் தெரிந்ததுதான். பிரதோஷம் என்றாலே பிற தோஷங்கள் என்று அர்த்தம். பிரதோஷ நேரத்தில் சிவபெருமானை நாம் வழிபட்டால் நமக்கு இருக்கக்கூடிய தோஷங்கள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது. அதுவும் ஆடி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை பிரதோஷ நாளன்று நாம் சிவபெருமானை வழிபாடு செய்யும்பொழுது நமக்கு பல நன்மைகள் உண்டாகும் என்றும் கூறப்படுகிறது. வீட்டிலேயே செய்யக்கூடிய முக்கியமான அதே சமயம் எளிமையான வழிபாட்டை பார்ப்போம்.
இந்த வழிபாட்டை நாளைய தினம் பிரம்ம முகூர்த்த நேரத்திலோ அல்லது காலை 7:30 மணியிலிருந்து 11:45 மணிக்குள் மாலையில் பிரதோஷ நேரத்தில் அல்லது 6:00 மணியிலிருந்து 9:00 மணிக்குள் இந்த வழிபாட்டை நாம் செய்யலாம். நம் வீட்டில் சிவபெருமானின் சிலையோ அல்லது லிங்கமோ இருக்கும் பட்சத்தில் கண்டிப்பான முறையில் நாளைய தினம் அவருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்ய வேண்டும்.
எந்த பொருளை வைத்து அபிஷேகம் செய்கிறீர்கள் என்பது உங்களுடைய விருப்பம். அந்த அபிஷேகப் பொருட்களில் மிகவும் முக்கியமான ஒரு பொருள் இருக்கிறது. அந்த பொருளை கண்டிப்பான முறையில் நாளைய தினம் அபிஷேகம் செய்ய வேண்டும். அந்த பொருள் தான் இளநீர். இளநீர் கிடைக்காத பட்சத்தில் தேங்காய் தண்ணீரை வைத்து கூட நாம் அபிஷேகம் செய்யலாம். தேங்காய் தண்ணீரை வைத்து அபிஷேகம் செய்யலாம் என்று நினைப்பவர்கள் தேங்காயை உடைக்கும் பொழுது தேங்காய் தண்ணீர் உங்கள் கைகளில் படாத அளவிற்கு பார்த்து உடைத்துக் கொள்ள வேண்டும்.
தேங்காய் என்பது மிகவும் பரிசுத்தமான ஒன்றாக கருதப்படுகிறது. அதில் இருக்க கூடிய தண்ணீர் ஆனது அதைவிட மிகவும் பரிசுத்தமானது. அப்படிப்பட்ட அந்த பரிசுத்தமான தண்ணீரால் சிவபெருமானுக்கு நாம் அபிஷேகம் செய்தோம் என்றால் நம்முடைய பாவங்கள் அனைத்தும் நீங்கி பரிசுத்தமாக மாறிவிடுவோம் என்றும் கூறப்படுகிறது. இதோடு மட்டுமல்லாமல் நாளைய தினம் வியாழக்கிழமை என்பதால் சுண்டல் வகைகளை நெய்வேத்தியமாக வைத்து வழிபட வேண்டும்.
அடுத்ததாக அவருடைய மந்திரமான “ஹர ஹர மகாதேவாய நமஹ” என்னும் மந்திரத்தை 108 முறை கூறி வழிபாடு செய்ய வேண்டும். இதோடு மட்டுமல்லாமல் நாளைய தினம் பிரதோஷ நேரத்தில் அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு சென்று சிவ தரிசனம் செய்துவிட்டு தங்களால் இயன்ற அளவு பிறருக்கு அன்னதானம் செய்வதன் மூலம் நாம் தெரிந்து செய்த பாவமாக இருந்தாலும் தெரியாமல் செய்த பாவமாக இருந்தாலும் அவை அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே:நோய்களும் எதிர்மறை ஆற்றல்களும் நீங்க தீப வழிபாடு
மிகவும் அற்புதமான இந்த சிவ வழிபாட்டை நாளைய தினம் செய்து நம்முடைய பாவங்களை நீக்கி நிம்மதியான வாழ்க்கையை வாழ்வோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.