நாம் ஒவ்வொருவரும் எந்த அளவிற்கு பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அந்த அளவிற்கு நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்போம். உடல் ஆரோக்கியம் சரியாக இருந்தால் தான் நம்மால் அதிக அளவில் பணத்தை சம்பாதிக்க முடியும். அதே சமயம் பணத்தை எவ்வளவுதான் சம்பாதித்தாலும் உடல் ஆரோக்கியம் இல்லாத பட்சத்தில் உடல் ஆரோக்கியத்திற்காகவே அதிக அளவில் செலவுகள் செய்து சம்பாதித்த பணத்தை இழக்க வேண்டிய சூழ்நிலை கூட உண்டாகிவிடும்.
இப்படி எதுவாக இருந்தாலும் நாம் எதை சம்பாதித்தாலும் நம்முடைய உடல் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியம். நம்முடைய உடலை ஒழுங்காக பராமரிக்காததால் தான் நோய் ஏற்படும் என்று கூற இயலாது. நம்மிடமும் நம் வீட்டிலும் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றலாலும் உடல் பாதிப்புகள் என்பது ஏற்படக்கூடும். அப்படி ஏற்படக்கூடிய உடல் பாதிப்புகளை நம்மால் எந்த மருத்துவரிடம் சென்று பார்த்தாலும் சரி செய்ய முடியாது. அந்த உடல் பாதிப்புகளை நீக்கவும் எதிர்மறை ஆற்றல்களை விலக்கவும் வீட்டில் ஏற்ற வேண்டிய ஒரு தீபத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
நோய்களும் எதிர்மறை ஆற்றல்களும் நீங்க
ஒருவருக்கு திடீரென்று உடல்நலம் சரியில்லாமல் போகிறது. அவர் அருகில் இருக்கக்கூடிய மருத்துவரை சென்று பார்க்கிறார். இருக்கக்கூடிய அனைத்து விதமான பரிசோதனை செய்தும் அவை அனைத்தும் சரியாக இருந்தும் உடல் நலத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கிறது என்னும் பட்சத்தில் அவருக்கு எதிர்மறை ஆற்றலால் பாதிப்பு ஏற்பட்டு இருக்கும் என்று அர்த்தம். இதோடு மட்டுமல்லாமல் இன்னும் சிலர் வீட்டில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டு கொண்டே இருக்கும். அந்த வீட்டில் மருத்துவ செலவுகள் அதிகரித்துக் கொண்டே இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கும் எதிர்மறை ஆற்றலால் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று கூறலாம்.
இதோடு மட்டுமல்லாமல் இரவில் உறங்கும் பொழுது அமானுஸ்யமான விஷயங்களை இருப்பது போல் தோன்றுவதும், கெட்ட கனவுகள் ஏற்படுவதும் எதிர்மறை ஆற்றல்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை. இவை அனைத்தையும் நீக்குவதற்கு செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி பார்ப்போம்.
இந்த பரிகாரத்தை இரவு படுக்கச் செல்வதற்கு முன்புதான் செய்ய வேண்டும். இதற்கு நாம் ஒரே ஒரு அகல் விளக்கை வாங்கிக் கொள்ள வேண்டும். அந்த அகல் விளக்கில் தீபம் ஏற்றுவதற்கு சுத்தமான கடுகு எண்ணெயை வாங்கிக் கொள்ளுங்கள். இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக வீட்டில் இருக்கக் கூடிய எல்லா விளக்குகளையும் அணைத்து விட வேண்டும். ஜீரோ வாட்ஸ் பல்பு கூட எரியக் கூடாது. வெளிச்சமே சுத்தமாக இருக்கக் கூடாது.
விளக்கை அணைப்பதற்கு முன்பாகவே ஒரு சிறிய தட்டில் அகல் விளக்கை வைத்து அதில் கடுகு எண்ணெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். விளக்கை அணைத்ததும் ஹாலில் இந்த அகல் விளக்கை வைத்து தீபம் ஏற்றுங்கள். இது இரவு முழுவதும் எறியட்டும். பெரிய அகல் விளக்காக வைத்து ஏற்றினாலும் பரவாயில்லை, சிறியாக விளக்காக வைத்து ஏற்றினாலும் பரவாயில்லை. அதன் எண்ணெய் தீர்ந்து அதுவே மலையேறும் வரை எரிந்து கொண்டே இருக்கட்டும்.
நாம் வந்து படுத்து உறங்கிவிட வேண்டும். இப்படி கடுகு எண்ணெயில் நாம் தீபம் ஏற்றும் பொழுது அந்த தீப வெளிச்சமானது வீட்டில் இருக்கக்கூடிய அனைத்து விதமான எதிர்மறை ஆற்றல்களையும் நீக்கக் கூடிய ஒன்றாக திகழ்கிறது. அதனால் ஏற்பட்ட உடல் பாதிப்புகளும் நீங்கும். தேவையற்ற மன குழப்பம் சண்டைகள் போன்றவை ஏற்படாது. நிம்மதியான உறக்கம் ஏற்படும்.
இதையும் படிக்கலாமே:வாழ்க்கை போராட்டம் தீர வாராஹி வழிபாடு
மிகவும் எளிமையான இந்த தீப வழிபாட்டை முழு நம்பிக்கையுடன் ஏற்றி வருபவர்களுக்கு அவர்கள் வீட்டில் இருக்கக்கூடிய அனைத்து விதமான தீய சக்திகளும், எதிர்மறை ஆற்றல்களும் நீங்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.