- Advertisement -
சுவாரஸ்ய தகவல்கள்

பெண் சாபம் ஏற்பட காரணம் என்னென்ன ? அதற்க்கு பரிகாரம் என்ன ?

நாம் நம்முடைய வாழ்வில் படும் துன்பங்கள் பலவற்றிற்கு முக்கிய காரணம் நாம் பெற்ற சாபமே. சாபத்தின் காரணமாகவும் பாவத்தின் காரணமாகவுமே நமது ஜாதகத்தில் தோஷங்கள் ஏற்படுகின்றன. சாபத்தில் மொத்தம் 13 வகை இருந்தாலும், இவ்வுலகில் புனிதமான ஒரு பிறவியாக கருதப்படும் பெண்களின் சாபத்திற்கு வலிமை அதிகம். அத்தகைய சாபம் குறித்தும் அதன் பரிகாரம் குறித்தும் இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

குலதெய்வ சாபம், கோ சாபம், ரிஷி சாபம் இப்படி பல சாபங்கள் இருந்தாலும் இதெல்லாம் நம் குடும்பத்தில் அல்லாதவர்கள் மூலம் ஏற்படும் சாபமாகும். ஆனால் நம் குடும்பத்தில் உள்ளவர்கள் மூலமே ஏற்படக்கூடிய சாபமாக இருக்கிறது பெண் சாபம்.

- Advertisement -

பெண் சாபத்திற்கான காரணங்கள்:

பெண்களை வீட்டின் மகா லட்சுமியாக கருதும் வழக்கம் நம் மண்ணில் உண்டு. ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் அவர்கள் திருமணமாகி புகுந்த வீட்டிற்கு செல்கின்றனர். அதன் பிறகும் அவர்களுக்கு தன் தாய் வீட்டில் உள்ள அனைவரின் மேலும் அளவுகடந்த அன்பு இருக்கும். அத்தகைய அன்பை உதாசீனம் செய்வது போல அவள் அண்ணனோ தம்பியோ நடந்து கொண்டால் அவள் மனம் நொந்து சில வார்த்தைகளை கூறிவிடுவாள். அப்படி கூறும் வார்த்தைகள் அனைத்தும் நிச்சயம் சாபமாக மாறும். தான் பெற்ற மகளை போல தன் அக்கா தங்கையை பார்த்துக்கொள்ளும் ஆண் மகனுக்கு வாழ்வில் எந்த பிரச்சனை வந்தாலும் விலகிவிடும் என்பது நம்பிக்கை.

- Advertisement -

திருமணமான பிறகு ஒரு கணவன் தன் மனைவியை கொடுமை படுத்துவது, அவளை கைவிட்டு வேறு பெண்ணை மணப்பது போன்ற செயல்கள் மூலம் அவனுக்கு நிச்சயம் பெண் சாபம் கிடைக்கும். தாயை போல தன் மனைவியையும் நேசிப்பதே ஒரு ஆண்மகனுக்கு அழகு.

எந்த ஒரு பெண்ணிற்கும் நம்பிக்கை துரோகம் செய்து ஏமாற்றுவதன் காரணமாக அவள் மனம் நொந்து சாபம் அளித்தால் அந்த சாபமானது நிச்சயம் பலிக்கும்.

- Advertisement -

என்னதான் ஒரு தாய்க்கு கருணை உள்ளம் இருந்தாலும், வயதான காலத்தில் தன் கணவனை இழந்து ஆதரவற்று நிற்கும் தாயை எவன் ஒருவன் கவனித்துக்கொள்ளாமல் இருக்கிறானோ அவனுக்கும் ஒரு தாயின் சாபம் நிச்சயம் கிடைக்கும்.

இப்படி பெண்களால் பலவகையில் சாபங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இப்படி ஏற்படும் சாபமானது ஒரு தனி நபரை மட்டும் அல்லாமல் தன்னுடைய பரம்பரையையே பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

பெண் சாப பரிகாரம் :

பெண் சாபத்தில் இருந்து விடுபட எண்ணுவோர் பைரவரை வழிபடுவதே சிறந்த பரிகாரம். பைரவரின் அவதார நாளான கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி திதி அன்று வரும் பைரவாஷ்டமி தினத்தில் பைரவருக்கு அபிஷேகம் செய்து வடமாலை சார்த்தி வழிபட வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
கைப்பிடி அரிசி மூலம் கட்டப்பட்ட வினோதமான கோவில் பற்றி தெரியுமா ?

சாபம் அளித்த பெண்ணின் வயது தெரிந்தால் அந்த வயதை ஒத்த பெண்ணிற்கு புடவை, வளையல் போன்றவற்றை தானம் செய்து அவள் பணத்தை குளிர வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் பெண் சாபம் நீங்கும்.

- Advertisement -