கைப்பிடி அரிசி மூலம் கட்டப்பட்ட வினோதமான கோவில் பற்றி தெரியுமா ?

temple

கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பார்கள் நம் முன்னோர்கள். ஆதிகாலத்தில் இருந்து தமிழர்கள் கோயிலிற்கு அதிமுக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள் என்பதற்கு பல சான்றுகள் நம் வரலாற்றில் உள்ளன. அந்த வகையில் ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கை பிடி அரிசி கொண்டு கட்டிய ஒரு அற்புதமான கோவிலை பற்றி இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

veyil ukandha amman

சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் விருதுநகர் மாவட்டத்தில் வாழ்ந்த மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கட்டிய கோவிலே வெயில் உகந்த அம்மன் கோவில். 1838 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கோவிலிருக்கு பின் ஒரு சுவாரசியமான நிகழ்வு உள்ளது.

அந்த காலத்தில் தற்போது அந்த கோவில் இருக்கும் பகுதியை சுற்றி வசித்த ஒவ்வொரு குடும்பத்தை சார்ந்தவர்களும் தினமும் சமைப்பதற்கு முன்பாக ஒரு பிடி அரிசியை ஏதாவது ஒரு பாத்திரத்தில் எடுத்து வைப்பது வழக்கம். பின் வாரம் ஒருமுறை அனைத்து வீடுகளுக்கும் சென்று அந்த அரசி சேகரிக்கப்படும். பின் அது விற்கப்பட்டு அதில் கிடைக்கும் பணத்தின் மூலம் ஏதாவது நல்ல காரியங்களை செய்வதை அந்த மக்கள் வழக்கமாக வைத்திருந்தனர்.

veyil ukandha amman

இப்படி சேர்க்கப்பட்ட அரிசியின் மூலம் கட்டப்பட்டது தான் வெயில் உகந்த அம்மன் கோவில். வெயில் உகந்த அம்மனுக்கு வேலுகந்த அம்மன் என்றொரு பெயரும் உண்டாம். அசுரர்களை வதைக்க முருகப்பெருமான் சென்றபோது அம்மன் தன் சக்தியை கொண்டு ஒரு வேலை உருவாக்கி முருகப்பெருமானுக்கு அளித்தார். முருகனுக்கு உகந்த வேலை கொடுத்ததால் வேலுகந்த அம்மன் என்று பெயர்பெற்றாள் அம்மன். அதன் பின் காலப்போக்கில் அந்த பெயர் வெயில் உகந்த அம்மனாக மாறியது என்றும் சிலர் கூறுவதுண்டு.

amman temple

இதையும் படிக்கலாமே:
ருத்திராட்சத்தை முறையாக அணிவது எப்படி தெரியுமா ?

ஊர் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நல்ல காரியங்கள் பல செய்ய தங்களால் இயன்றதை கொடுத்தாலே ஊர் செழுமை பெரும். அந்த ஊர் உலகத்தாரால் பேசப்படும் என்பதற்கு சிறந்த சான்றாக விளங்குகிறது வெயில் உகந்த அம்மன் கோவில்.