- Advertisement -

பெருமாள் மகாலட்சுமி வீட்டிற்குள் வர பரிகாரம்

- Advertisement -

நாளை வைகாசி 1. விஷ்ணுபதி புண்ணிய காலம். இந்த நேரத்தில் பெருமாளை வழிபாடு செய்தால் கோடான கோடி புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. செய்த பாவங்களில் இருந்து விமோசனம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. கஷ்டப்படும் நம்முடைய தலையெழுத்து மாறும் என்பதும் நம்பிக்கை. நாளைய தினம் விஷ்ணுபதி புண்ணிய கால வழிபாட்டை எந்த நேரத்தில் செய்வது, பெருமாள் வழிபாட்டை முடித்துவிட்டு வீடு திரும்பும் போது வீட்டிற்கு வாங்கி வர வேண்டிய முக்கியமான ஐந்து பொருட்கள் என்னென்ன.

விஷ்ணு பத்தி புண்ணிய காலம். வைகாசி 1ஆம் தேதி, அதாவது நாளைய தினம் நள்ளிரவு 1:00 மணிக்கே துவங்கி, காலை 10:30 மணி வரை விஷ்ணு உற்பத்தி புண்ணிய காலம் இருக்கும். இந்த விஷ்ணுபதி புண்ணியகால வழிபாட்டை பிரம்ம முகூர்த்த நேரத்தில், பெருமாள் கோவிலில் மேற்கொள்வது மிகவும் சிறப்பு. ஒன்றுமே இல்லை. விஷ்ணுபதி புண்ணிய காலத்தில், பெருமாளை 27 முறை வலம் வர வேண்டும்.

- Advertisement -

கொடிமரத்தோடு சேர்த்து உங்கள் வேண்டுதலை சொல்லி பெருமாளை 27 முறை சுற்றி வந்தால், உங்களுடைய வேண்டுதல் பலிக்கும் என்பது நம்பிக்கை. இந்த வழிபாட்டை பெருமாள் கோவிலில் முடித்துவிட்டு, கட்டாயம் தாயாரையும் வழிபாடு செய்து விட்டு நேராக வீட்டிற்கு வரவேண்டும்.

வீட்டிற்கு வரும்போது வெற்றிலை பாக்கு, மஞ்சள் குங்குமம், மல்லிகைப்பூ, முடிந்தால் தாமரைப்பூ, வாழைப்பழம், டைமண்ட் கல்கண்டு, கல் உப்பு இந்த பொருட்களை எல்லாம் வாங்கி வந்து பூஜையறையில் வைத்துவிட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றி, உங்கள் கோரிக்கையை ஒரு முறை உங்கள் வீட்டு பூஜை அறையிலும், பெருமாளிடம் வைத்து வேண்டிக் கொண்டால், நிச்சயமாக நீங்கள் வைத்த வேண்டுதல் நிறைவேறும்.

- Advertisement -

இந்த விஷ்ணு பதி புண்ணிய காலத்தில் பெருமாளிடம் என்ன வேண்டுதல் வைத்தீர்களோ, அது அடுத்த வரக்கூடிய விஷ்ணுபதி புண்ணியகால நாளுக்குள் பலிக்கும் என்பதுதான் இந்த பரிகாரத்தில் மறைந்திருக்கும் சூட்சமம். இந்த விஷ்ணு பத்தி புண்ணிய காலத்தில் மங்களகரமான பொருட்களை வீட்டிற்கு வாங்கி வரும்போது, அந்த பொருட்களின் ரூபத்தில் மகாலட்சுமியும் பெருமாளும் உங்கள் வீட்டிற்குள் நுழைந்து விடுவார்கள்.

இதையும் படிக்கலாமே: வைகாசி 1. விஷ்ணுபதி புண்ணிய காலம் 2025

வைகாசி 1, ஆவணி 1, கார்த்திகை 1, மாசி 1. அடுத்தது ஆவணி மாதம் இந்த விஷ்ணுபதி புண்ணிய காலம் வரும். ஒரு வருடத்தில் வரக்கூடிய 4 விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் எவரொருவர் தவறாமல் விஷ்ணு பகவானை வழிபாடு செய்கிறீர்களோ, அவர்களுடைய தலையெழுத்து நிச்சயம் மாறும். இது நிதர்சனமான உண்மை. உங்களுக்கு இதில் நம்பிக்கை இருந்தால், இந்த வழிபாட்டு முறையை பின்பற்றி பலன் பெறவும்.

- Advertisement -
Published by