- Advertisement -

நீங்கள் காதலித்தவரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள எந்தக் கடவுளை வழிபட வேண்டும் தெரியுமா? இவரை வழிபட்டால் உங்கள் காதல் உடனே ஜெயிக்கும்.

ஆசை ஆசையாக காதலிப்பவர்கள் திருமண பந்தத்தில் இணைய பெற்றோர்களின் சம்மதத்தை நாடி செல்லும் பொழுது தான் பிரச்சனைகள் உருவாகிறது. பெற்றோர்களின் சம்மதம் இல்லாமல் நடக்கும் திருமணங்கள் பெரும்பாலும் சோகத்திலேயே ஆரம்பிக்கிறது. ஒரு திருமணம் தொடங்கும் பொழுதே சோகத்துடன் தொடங்குவது நல்லதா? இப்போது இருக்கும் காலகட்டத்தில் அனைத்து பெற்றவர்களும் ஓரளவுக்கு தங்களுடைய பிள்ளைகளை புரிந்து கொள்கிறார்கள். ஆனால் சிலர் புரிந்து கொள்ளாமல் ஜாதி, மதம், கோட்பாடு என்று அவர்கள் சம்மதம் இல்லாமலேயே திருமணம் செய்து கொள்ளும் நிர்பந்தத்திற்கு பிள்ளைகளை ஆளாக்கி விடுகிறார்கள். இதனால் பாதிக்கப்படுவது பெற்றோர்கள் மட்டுமல்ல பிள்ளைகளும் தான் என்பதை முதலில் உணர வேண்டும்.

பெற்றோர்கள் சம்மதம் வாங்கிய பிறகு தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று எவ்வளவோ ஜோடிகள் இன்றும் பல போராட்டங்களை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். என்னதான் இருந்தாலும் இவ்வளவு காலம் கஷ்டப்பட்டு பெற்று, வளர்த்தவர்களுக்கு அவர்கள் கொடுக்கும் ஒரே ஒரு மரியாதை இதுவாகத்தான் இருக்கும். பெற்றோர்கள் சம்மதத்தை பெற்றுக் கொண்டு தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைக்கும் இளம் ஜோடிகள் எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்? ஏன்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

- Advertisement -

மயிலாடுதுறையிலிருந்து பத்து கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது குத்தாலம். இங்குள்ள உத்தவேதீஸ்வரர் திருக்கோயில் மிகவும் பிரசித்திப் பெற்று வருகிறது. அக்கோவில் அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவரும் பாடல்கள் பாடி உள்ளதாக புராணங்கள் தெரிவிக்கிறது. மிகவும் சக்தி வாய்ந்த கோவிலாக இந்த கோவில் இதுவரை இருந்து வருகிறது. இங்கு வேண்டும் வேண்டுதல்கள் அனைத்தும் அப்படியே பலிப்பதாக அங்கிருக்கும் பக்தர்கள் நம்பி வருகின்றனர். இந்த ஸ்தல புராணம் சிவபெருமானும் பார்வதியையும் நோக்கி அமைந்துள்ளது.

பரத மாமுனிவர் அன்னை பார்வதி தேவி தன்னுடைய மகளாக பிறக்க வேண்டும் என்று விரும்பினார். இதற்காக சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தார். இவருடைய தவத்தை மெச்சிய சிவபெருமான் யாக குண்டத்தில் பார்வதி தேவியை குழந்தையாக பிறக்க செய்கிறார். சிவபெருமானின் மேல் கொண்ட அதீத பக்தியின் காரணமாக அந்த குழந்தை வளர்ந்தபின் காதல் கொள்கிறாள். சிவபெருமானையே கணவனாக நினைத்து மணலில் சிவபெருமானின் உருவத்தை உருவாக்குகிறாள். இதனால் மனம் உருகிய சிவபெருமான் அங்கு காட்சி கொடுத்து தன்னுடன் வருமாறு அழைக்கிறார்.

- Advertisement -

ஆனால் பார்வதிதேவியோ பெற்றோரின் சம்மதம் இன்றி என்னால் தங்களுடன் வர முடியாது. அவர்களுடைய சம்மதத்தை பெற்றுக் கொண்டு தான் உங்களுடன் வருவேன் என்று கூறுகிறாள். இதனை ஆமோதித்த சிவபெருமான் அங்கிருந்து மறைந்து விடுகிறார். இதனால் மனம் உடைந்து போன பார்வதிதேவி தன்னையே வருத்திக் கொள்கிறாள். இதனை அறிந்த சிவபெருமான் நந்தி பகவானை அனுப்பி பரத மாமுனிவரிடம் பெண் கேட்கிறார். பரத மாமுனிவர் இதற்கு ஒப்புக்கொள்ளவே குத்தாலத்தில் கோலாகலமாக அவர்களின் திருமணம் நடைபெற்றது.

அந்த இடத்தில் தான் இந்த கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள மூலவர் உத்தவேதீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். பெற்றோரின் சம்மதம் கொண்டு திருமணம் நடைபெற விரும்புபவர்கள் இவரை வணங்கினால் நிச்சயம் உங்களுடைய காதல் அனைவரின் சம்மதத்துடனும் திருமண பந்தத்தில் இணையும் என்பது ஐதீகம். இந்த கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே உத்தவேதீஸ்வரரை மனதார நினைத்து பிரார்த்தனை செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
தெரியாமல் கூட யாரிடமும் கேட்கக்கூடாத 4 கேள்விகள் என்ன தெரியுமா? கேட்டால் அப்புறம் அவ்வளவு தான்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -