தெரியாமல் கூட யாரிடமும் கேட்கக்கூடாத 4 கேள்விகள் என்ன தெரியுமா? கேட்டால் அப்புறம் அவ்வளவு தான்!

cash-question
- Advertisement -

சில கேள்விகளை இடம், பொருள், ஏவல் பார்த்து தான் கேட்க வேண்டும். நாம பாட்டுக்கு எதையாவது கேட்டுட்டு அப்புறம் அவர்கள் படும் அவஸ்தை நம்மால் உணரவே முடியாது. அப்படியான சில கேள்விகளை தெரிந்தே கேட்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களை என்னவென்று சொல்வது? கேள்விகள் கேட்பது சுலபமான ஒன்று. வாய் இருந்தால் யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம். ஆனால் அதன் பதிலை சொல்வது மிக மிகக் கடினமான ஒன்று. அப்படியிருக்க கேள்விகளைக் கூட கணையாக தொடுப்பது, உங்களுடைய நன்னடத்தையை நீங்களே கேள்வி கேட்பதற்கு சமமாகும் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அவ்வகையில் இந்த 4 கேள்விகள் தெரியாமல் கூட யாரிடமும் கேட்டு விடாதீர்கள்.

marraige-couple

கேள்வி 1:
‘உங்களுக்கு விசேஷம் ஏதும் இன்னும் இல்லையா?’ இந்த ஒரு கேள்வியை புதுமணத் தம்பதிகளிடம் சுலபமாக எல்லோரும் கேட்டு விடுகிறார்கள். ஆனால் அந்தக் கேள்வி எவ்வளவு காயப்படுத்தும் என்பதை அந்த இடத்தில் இருந்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும். இதையும் வேண்டுமென்றே மாமியார், மருமகள் இடம் கேட்பதும் கொடுமையான விஷயம் தான். குழந்தை இல்லை என்றால் அதற்கு முழு காரணமும் பெண்கள் மட்டுமே என்று நினைப்பது எந்த விதத்தில் நியாயம்? என்பதும் வாதத்திற்கு உரியது தான்.

- Advertisement -

கேள்வி 2:
‘நீங்க எவ்வளவு சம்பளம் வாங்குறீங்க?’ இந்த ஒரு கேள்வியையும் யாரிடமும் கேட்கக் கூடாது. அது ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் சரி. ஒருவர் வாங்கும் சம்பளத்தை நாம் கேட்பது தவறாகும். அதை சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தால் அவர்களாகவே கூறியிருப்பார்கள். நாமாகவே வம்புக்கு இழுத்து கேட்பது தேவையில்லாத ஒரு கேள்வி தான். அவர்கள் வாங்கும் சம்பளத்தில் இருந்து உங்களுக்கு பாதி கொடுக்கப் போகிறார்களா என்ன?

money

கேள்வி 3:
வீட்டிற்கு வரும் விருந்தாளிகளிடத்தில், ‘சாப்பாடு ஆச்சா?’ என்கிற இந்த கேள்வியும் தவறானது ஆகும். தமிழர்களின் பெருமையில் விருந்தோம்பலும் குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கிறது. அந்த காலத்திலெல்லாம் திண்ணைகள் கட்டி வைத்தது, வழி போக்கர்களுக்கு பசி என்று வந்தால் உணவளிக்க தான். ஆனால் இப்பொழுது நெருங்கிய உறவினர்களுக்கு கூட சாப்பாடு போடுவதில் தயக்கம் காட்டி வருகிறோம்.

- Advertisement -

வீட்டிற்கு வந்தவுடன் சாப்பிடுகிறீர்களா? என்று கூட கேட்க கூடாது. இதோ சாப்பாடு போட்டு எடுத்து வருகிறேன், சாப்பிடுங்கள் என்று தான் கூற வேண்டும். இது தான் தமிழர் பாரம்பரிய முறையாகும். ‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை’, என்கிற பழமொழி ஒரு மனிதனை கர்ம வினையில் இருந்து எளிதாக நீக்கி விடுகிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும்? ஒரு வேளை சாப்பாடு நீங்கள் மற்றவர்களுக்கு கொடுத்தால் அதைவிட சிறந்த பரிகாரம் எதுவுமே இல்லை.

கேள்வி 4:
‘நேத்து உங்க வீட்டில சண்டை போல!’ இந்த கேள்வியும் யாரிடமும் கேட்டு விடக்கூடாது. ஒரு வீட்டில் நடக்கும் சண்டையை அடுத்தவர் கவனிப்பதே அநாகரீகமான விஷயம் தான். அதை கவனித்ததும் அல்லாமல், அவர்களிடம் மறுநாள் அதைப் பற்றிய கேள்வி கேட்பது மிகவும் தவறான செயலாகும். இதற்கு பதில் சொல்வது அவர்களுக்கு எவ்வளவு சங்கடமாக இருக்கும்? என்கிற அறிவு கூட இல்லாமல் கேள்வி கேட்பவர்களை என்ன தான் செய்வது?

இதையும் படிக்கலாமே
வீட்டில் அடிக்கடி பயன்படுத்தும் இந்த 3 பொருட்களை புதியதாக மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். பழசா போன பொருளை பயன்படுத்திக்கொண்டே இருந்தால், வீட்டில் நிச்சயம் தரித்திரம் தலைவிரித்தாடும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -