
இன்னும் ஒரு சில நாட்களில் பொது தேர்வு தொடங்கவிருக்கிறது. பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களாக இருந்தாலும் சரி, பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு இந்த காலகட்டம் ரொம்ப ரொம்ப முக்கியமானது. இதுநாள் வரை அவர்கள் படிக்கவில்லை என்றாலும், கொஞ்சம் கூடுதல் கவனம் எடுத்து இன்றிலிருந்து படிக்க துவங்கினாலும், அவர்களுடைய வாழ்க்கை சரியான பாதையில் செல்லும்.
தங்களுடைய பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும் என்ற, கவலை இன்று ஒவ்வொரு பெற்றோர்களுடைய மனதிலும் இருக்கிறது. பிள்ளைகள் நன்றாக படிக்காமல் இருப்பதற்கு என்னவெல்லாம் வேண்டுமோ, அதெல்லாம் நம்முடைய வீடுகளில் இன்றைய சூழ்நிலையில் இருக்கிறது.
இந்த காலகட்டத்தில் பிள்ளைகளை தேர்வில் தேர்ச்சி பெற வைக்க, பிள்ளைகளுடைய கவனம் சிதறாமல் இருக்க, அவர்களுக்கு நல்ல மதிப்பெண் பெற என்ன பரிகாரம் செய்யலாம். பயனுள்ள சில பரிகாரங்களை தான் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
உங்களுடைய குழந்தை ஆண் குழந்தையாக இருந்தாலும், பெண் பிள்ளையாக இருந்தாலும் சரி, தினமும் அவர்கள் குளித்து முடித்தவுடன் இரண்டு புருவங்களுக்கு மத்தியில் இருக்கும் இடத்தில் சந்தன பொட்டு வைத்து விடுங்கள். சாதாரண சந்தனமாக இருக்கக் கூடாது. சுத்தமான சந்தனத்தில் கொஞ்சம் பன்னீர் அல்லது தண்ணீர் விட்டு குழைத்து குலதெய்வத்தை நினைத்து அந்த சந்தனத்தை பிள்ளைகளுடைய நெற்றியில் இட்டு விட்டாலே போதும்.
உங்களுடைய பிள்ளைகள் படிப்பில் நல்ல ஆர்வத்தோடு இருப்பார்கள். நிறைய படிக்க வேண்டும், நிறைய மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற ஆர்வம் அவர்களுக்கு வந்துவிடும். நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் இரண்டு புருவங்களுக்கு மத்தியில் அந்த சந்தனம் இடப்பட வேண்டும். காலை மாலை இருவேளையும் இந்த சந்தனத்தை படிக்கும் பிள்ளைகளுக்கு வைக்கலாம். பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு படிக்கும் பிள்ளைகளுக்கு மட்டும்தான் இதை வைக்க வேண்டும் என்ற அவசியமும் கிடையாது, சின்ன குழந்தைகளுக்கும் இந்த சந்தன பொட்டு வைப்பது படிப்பில் ஆர்வத்தை அதிகரிக்கும் என்பது ஜோதிடர்களின் கருத்து.
அதேபோல பிள்ளைகளுக்கு இரண்டாவது மூளையாக செயல்படுவது வயிறு. வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் வந்தாலோ, வயிறு மந்த தன்மையில் இருந்தாலும், பிள்ளைகளுக்கு புத்தி கூர்மை இருக்காது. வயிறு சரியில்லாத சமயத்தில் மூளையும் சரியில்லாமல் போய்விடும். ஆகவே அவர்களுடைய உணவுப் பழக்க வழக்கத்தில் பெற்றவர்கள் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியமான உணவை மட்டுமே அவர்களுக்கு கொடுக்க வேண்டும். மலச்சிக்கல் உள்ள பிள்ளைகள், வயிறு உபாதைகள் உள்ள பிள்ளைகளால் படிப்பில் முழு கவனத்தை செலுத்த முடியாது இது இரண்டாவது விஷயம்.
மூன்றாவது விஷயம் பிள்ளைகள் தவறான பாதைக்குச் செல்லக்கூடாது. அவர்களுக்கு மனக்குழப்பம் எதுவும் ஏற்படக் கூடாது என்றால், அவர்களை சுற்றி இருக்கும் அதிர்வலைகள் எப்போதுமே பாசிட்டிவாக இருக்க வேண்டும். வீட்டில் இருக்கும் அம்மா அப்பா மொபைல் போன் பார்த்தால், பிள்ளைகள் மொபைல் போன் பார்க்கத்தான் செய்யும். வீட்டில் இருக்கும் அம்மா அப்பா அதிக நேரம் டிவி பார்த்தால் பிள்ளைகளும் டிவி பார்க்கத்தான் செய்வார்கள்.
ஆகவே அவர்களை சுற்றி இருக்கக்கூடிய விஷயங்கள் எப்படி இருக்கிறது என்பதை கவனித்துக் கொள்ளுங்கள். பிள்ளைகள் படிப்புக்கு சுற்றுச்சூழலும் ஒரு காரணம்தான். சிறிது நேரம் அவர்களை நிலா வெளிச்சத்தில் அமர வைத்து படிக்க வைப்பது, வெட்ட வெளியான இடங்களில் அமர வைத்து படிக்க வைப்பது, இதுபோல இதமான சூழலை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கலாம்.
கிழக்கு திசையிலோ மேற்கு திசையிலோ குழந்தைகள் அமர்ந்து படிப்பது அவர்களுக்கு மிகவும் நல்லது என்றும் சொல்லப்பட்டுள்ளது. உங்கள் வீட்டில் பால்கனி அல்லது படிக்கட்டுகள் இடவசதியோடு இருந்தால் அந்த இடத்தில் பிள்ளைகளை அமர வைத்து படுக்க வைக்கலாம். பிள்ளைகளுக்கு தாயின் அரவணைப்பு தான் ரொம்ப ரொம்ப முக்கியம்.
இதையும் படிக்கலாமே: கடன் அடைய வெள்ளிக்கிழமை இரவு செய்ய வேண்டிய பரிகாரம்
அவர்களை திட்டி வற்புறுத்தி கட்டாயப்படுத்தி படித்தே ஆக வேண்டும் என்ற நிலைமைக்கு தள்ளுவதை விட, சூழ்நிலையை புரிய வைத்து படித்தால்தான், அவர்களுக்கு எதிர்காலமே படிப்பு தான் என்பதை எதிர்காலம் உணர வேண்டும். அது தாயின் கையில் தான் இருக்கிறது. தாயின் அரவணைப்பில் இருக்கும் பிள்ளைகள் நிச்சயம் நன்றாக படிக்கும் நல்ல மதிப்பெண்களும் எடுக்கும் என்ற தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.