- Advertisement -

பிள்ளைகள் படிப்பில் சிறந்து விளங்க பரிகாரம்.

- Advertisement -

மாணவர்கள் இன்று படிப்பு விஷயத்தை தவிர மற்ற விஷயங்களில் எல்லாம் படு சுறுசுறுப்பு. படிப்பதில் மட்டும்தான் ஆர்வம் செலுத்துவது கிடையாது. உங்களுடைய குழந்தை படிப்பிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும், நல்லபடியாக சிந்திக்க வேண்டும், நல்லபடியாக செயல்பட வேண்டும் என்றால், கல்வி கேள்வி செல்வங்களில் சிறந்து விளங்க வேண்டும் என்றால், ஆன்மீக ரீதியாக எளிமையான முறையில் என்ன பரிகாரங்கள் செய்வது என்பதைப் பற்றிய சில தகவல்களை இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம்

புத்திக்காரகன் புதன். புதன் என்றால் பச்சை. பொதுவாகவே பச்சை நிறத்தை பார்க்கும் போது, மன அமைதி ஏற்படும். கண்களுக்கு குளிர்ச்சி ஏற்படும் என்று சொல்லுவார்கள். அதனால் தான் பசுமையான இடத்திற்கு ஒரு பாசிட்டிவ் எனர்ஜி இருக்கிறது. இந்த புதன் பகவானுக்கு உரிய கடவுள் என்றால், அது பெருமாள்.

- Advertisement -

புதன்கிழமை வீட்டு பக்கத்தில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு செல்ல வேண்டும். பச்சை நிறத்தில் இருக்கும் துளசி இலைகளை பெருமாளுக்கு சாத்தி, உங்கள் பிள்ளைகளின் பெயரைச் சொல்லி, அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும். பெருமாள் கோவிலில் இருக்கும் நவகிரக சன்னிதானத்தில், புதன் இருப்பார். புதன் பகவானுக்கு 2 விளக்குகள் ஏற்றி, புதன் பகவானையும் வழிபாடு செய்ய வேண்டும்.

வாரம் தோறும் வரக்கூடிய புதன்கிழமையன்று மேல் சொன்ன வழிபாட்டை செய்தால் நிச்சயம் உங்களுடைய பிள்ளைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். அவர்களுடைய ஆர்வம் படிப்பை நோக்கி நகரும். கோவிலுக்கு பெற்றவர்கள் சென்று, கோவிலில் இந்த பரிகாரத்தை செய்யலாம். இப்படி கோவிலுக்கு செல்லும்போது பிள்ளைகளையும் உங்களுடன் அழைத்துச் செல்ல வேண்டும்.

- Advertisement -

பெரும்பாலானவர்கள் வீட்டில் பித்தளை பாத்திரம் இருக்கும் ஆனால் அதை புழக்கத்தில் வைப்பதில்லை. ஸ்லாப்பில் போட்டு வைத்திருப்போம். உங்களுடைய வீட்டில் பித்தளை பாத்திரங்கள் இருக்கிறதா. பித்தளை பாத்திரத்திற்கு உண்டான அதிபதி புதன். பித்தளை பாத்திரத்தை இறக்கி வீட்டில் புழங்கத் துவங்குங்கள். பித்தளை பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி குடிக்க வேண்டும், பித்தரை பாத்திரத்தில் சமைத்தால் ஆரோக்கியம் பெருகும். ஆரோக்கியத்துடன் சேர்ந்து, புதன் பகவானின் சிறப்பாக செயல்படுவார். அறிவு சார்ந்த விஷயங்களும் சீராக இருக்கும்.

உங்களுடைய வீட்டில் வெள்ளி தட்டு, வெள்ளி டம்ளர், அல்லது வெறும் வெள்ளி ஸ்பூன்தான் இருக்கிறது என்றாலும் பரவாயில்லை. குழந்தைகள் அந்த வெள்ளி பொருட்கள் சாப்பிட  வையுங்கள். அந்த பொருளைக் கொடுத்து பயன்படுத்த சொல்லுங்கள். வெள்ளி டம்ளரில் தண்ணீர் குடிப்பது, வெள்ளி ஸ்பூனில் ஸ்னாக்ஸ் சாப்பிடுவது, சாப்பாடு சாப்பிடுவது, இதுபோல பழக்கங்களை கொண்டு வந்தாலும் பிள்ளைகளுடைய கல்விச்செல்வம் உயரும்.

- Advertisement -

அதேபோல ஒரு செம்பு தகடு, நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் வாங்கிக் கொள்ளுங்கள். அந்த தகடில் எதுவும் எழுதக்கூடாது. சின்னதாக இருக்கும் செம்பு தகடை பிள்ளைகள் படிக்க கூடிய பேகில் வைத்தால், அவர்களுடைய படிப்பு மேம்படும் என்பதும் நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது. அல்லது காப்பரில் ஏதாவது நாணயங்கள், உங்கள் வீட்டில் இருந்தாலும் அதை எடுத்து பிள்ளைகளுடைய புத்தகப் பையில் வைக்கலாம்.

இதையும் படிக்கலாமே: நல்ல வேலை கிடைக்க சஷ்டி வழிபாடு

அவங்களுடைய ஜாமென்ட்ரி பாக்ஸில் போட்டு வைத்தால் கூட போதும். மேல் சொன்ன விஷயங்கள் அனைத்தும் பிள்ளைகளுடைய படிப்பிற்காக சொல்லப்பட்டுள்ள பரிகாரங்கள். இது அத்தனையும் ஒருசேர பின்பற்ற வேண்டும் என்றது அவசியம் கிடையாது. உங்களால் இதில் எது செய்ய முடியுமோ அதை செய்து பலன் பெறலாம்.

- Advertisement -