
நாளைய தினம் அதாவது 20.10.2024 ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து சங்கடஹர சதுர்த்தி திதி வந்திருக்கிறது. ஞாயிற்றுக்கிழமையோடு சேர்த்து இந்த சங்கடஹர சதுர்த்தி திதி வந்திருப்பதால் இந்த நாளை யாரும் தவற விடாதீங்க. ஞாயிறு சூரிய பகவானுக்கு உரிய கிழமை. உங்களுடைய வேலை சம்பந்தப்பட்ட பிரச்சனை, கடன் சம்பந்தப்பட்ட பிரச்சனை, வியாதி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தையும் தீர்ப்பதற்கு இந்த நாள் ஒரு உகந்த நாளாக சொல்லப்பட்டுள்ளது.
இந்த சங்கடஹர சதுர்த்தி தினத்தில் விநாயகரை வழிபாடு செய்பவர்களுக்கு துன்பங்கள் அந்த நிமிடத்தோடு விலகும். அதற்கு உண்டான ஒரு அகத்தியர் மந்திரத்தை தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
சங்கடஹர சதுர்த்தி வழிபாடு என்றால் அதற்கு மாலை நேரம் தான் சிறப்பு. வீட்டில் விளக்கு ஏற்றி விநாயகருக்கு அருகம்புல் போட்டு, வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள். முடிந்தவரை வீட்டு பக்கத்தில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு செல்லுங்கள். செல்லும்போது ஒரு நல்ல தேங்காய் வாங்கிக்கொண்டு செல்லுங்கள். விநாயகருக்கு அருகம்புல் வாங்கிக்கொண்டு செல்லுங்கள்.
விநாயகரை கண் குளிர பார்த்து வழிபாடு செய்து விட்டு தோப்புக்கரணம் போட்டு பிள்ளையார் கொட்டு வைத்துக் கொடுங்கள். விநாயகர் சன்னிதானத்திற்கு முன்பு அமர்ந்து உங்களுடைய கையில் ஒரு தேங்காயை வைத்துக் கொள்ளுங்கள்.
‘ஓம் கிலி அங் உங்’ என்ற மந்திரம் விநாயகரின் மூல மந்திரம். இந்த மந்திரம் தான் அகத்திய பெருமான் அவர்கள் நமக்கு அளித்த மந்திரம். இது ஒன்றும் அவளுக்கு சாதாரண மந்திரம் அல்ல. அஷ்ட கணபதிக்ளுக்கும் சேர்த்த ஒரே ஒரு மூல மந்திரம் இதுதான். இந்த மந்திரத்தை கையில் ஒரு தேங்காயை வைத்து உங்களுடைய கஷ்டங்கள் நீங்க வேண்டும் என்று 108 முறை அல்லது அதற்கு மேலே உச்சரித்தாலும் தவறு கிடையாது.
மந்திரத்தை உள்வாங்கி ஆழ் மனதில் இருந்து உச்சரித்து இன்றோடு என் கஷ்டங்கள் எல்லாம் சுக்கு நூறாக உடைந்தது என்று சொல்லி இந்த தேங்காயை சிதறு தேங்காய் உடைத்து விட்டு வந்தீர்கள் என்றால் உங்களுடைய கஷ்டங்கள் அன்றோடு தீர்ந்துவிடும்.
ஆதி கணபதி, மகா கணபதி, நடன கணபதி, சக்தி கணபதி, பால கணபதி, உச்சிட்ட கணபதி, உக்கிர கணபதி, மூல கணபதி எட்டு வகை கணபதி இவங்கதான். கணபதியின் நாமத்தை படிப்பதும் நமக்கு புண்ணியத்தை தான் சேர்க்கும். நாளைக்கு மறக்காதீங்க. நாளை மாலை விநாயகர் கோவிலுக்கு சென்று இந்த வழிபாட்டையும், மந்திரத்தையும் உச்சரியுங்கள். நாளையோடு உங்கள் கஷ்டங்கள் தொலைந்தது என்று எழுதி வைத்துக் கொள்ளலாம்.
இதையும் படிக்கலாமே: தேய்பிறை பஞ்சமி வராகி அம்மன் வழிபாடு முறை
கோவிலுக்கு செல்ல வாய்ப்பே எங்களுக்கு இல்லை என்பவர்கள் வீட்டிலேயே விளக்கு ஏற்றி வைத்துவிட்டு ஒரு மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைத்து, இந்த மந்திரத்தை சொல்லுங்கள். திங்கட்கிழமை காலை அந்த மஞ்சள் பிள்ளையாரை எடுத்து தண்ணீரில் கரைத்து விடவும். அவ்வளவுதான் பரிகாரம் நம்பிக்கை இருந்தால் மட்டும் இவைகளை பின்பற்றி பலன் பெறுங்கள்.