- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதேய்பிறை பஞ்சமி வராகி அம்மன் வழிபாடு முறை

தேய்பிறை பஞ்சமி வராகி அம்மன் வழிபாடு முறை

- Advertisement -

வராகி அம்மன் வழிபாடு செய்பவர்களுக்கு வந்த துன்பமெல்லாம் வந்த வழியே சென்றுவிடும் என்பது பக்தர்களுடைய அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது. வாராகியை வழிபட்டு வருபவர்களுக்கு மன நிம்மதியும், செல்வ வளமும் அதிகரிக்கும். மரண பயம் நீங்கி, புதிய நம்பிக்கை ஊற்றெடுக்கும். தேய்பிறை பஞ்சமி திதியில் வாராகி அம்மனை எப்படி வழிபட வேண்டும்? என்னும் வழிமுறையை தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

பஞ்சமி திதி என்பது வராகிக்கு உகந்த திதியாகும். ஒவ்வொரு திதிகளுக்கும் ஒவ்வொரு கடவுளின் அருளை பெறலாம். அந்த வகையில் வாராகி அம்மனுக்கு உகந்த இந்த பஞ்சமி திதியில் வராகி அம்மனை இப்படி வழிபட்டால் எண்ணிலடங்கா பலன்களை நாம் பெறலாம். தேய்பிறைச் பஞ்சமி நாட்களை குறித்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒவ்வொரு தேய்பிறை பஞ்சமி திதியில் வராகி அம்மனை இப்படி வழிபடுங்கள்.

- Advertisement -

வராகி அம்மன் படம் அல்லது சிலை வைத்திருப்பவர்கள் அதற்குரிய பூஜை முறைகளை கடைபிடிக்க வேண்டும். வராகி அம்மன் சிலையை மஞ்சள் தடவிய பலகையில் அமர்த்தி பாலால் அபிஷேகம் செய்து, பின்னர் சாதாரண தண்ணீரை ஊற்றி சுத்தம் செய்து மஞ்சள், குங்குமம் இட்டு, மஞ்சள் மாலை சாற்றுங்கள். குண்டு மஞ்சள் கொண்டு மாலை தயாரித்து சாற்றுங்கள். பின்னர் ஒரு தாம்பூல தட்டில் பச்சரிசியை பரப்பிக் கொள்ளுங்கள்.

பரப்பி வைத்துள்ள பச்சரிசியின் மீது தேங்காயை உடைத்து அதில் நெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வைக்க வேண்டும். வெற்றிலை, பாக்கு தாம்பூலம் வையுங்கள். பின்னர் வாராகிக்கு மலர்களை கொண்டு அலங்கரித்துக் கொள்ளுங்கள். சக்தி வாய்ந்த பெண் தெய்வங்களுக்கும், பெண் குல தெய்வங்களுக்கும், சிறு தெய்வங்களுக்கும் தேங்காய் தீபம் ஏற்றுவது மரபு. மற்ற பெரிய தெய்வங்களுக்கு தேங்காய் தீபம் ஏற்ற வேண்டிய அவசியம் இல்லை.

- Advertisement -

மற்றொரு தாம்பூலத்தில் உதிரிப் பூக்களை அர்ச்சனைக்கு தயாரித்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் கீழ் வரும் இந்த மந்திரத்தை உச்சரித்து 108 முறை மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். சிலை இல்லாதவர்கள் படத்திற்கு அர்ச்சனை செய்யுங்கள், அபிஷேகம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. 108 முறை மந்திரத்தை உச்சரித்து, வாராகி அம்மனை மனதார பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும்.

வராகி அம்மன் மந்திரம்:

ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்!!!

இதையும் படிக்கலாமே:
வறுமையும் நோயும் விலக ஏற்ற வேண்டிய தீபம்

வராகி அம்மனுக்கு சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் வையுங்கள். இனிக்கும் சர்க்கரை பொங்கலில் வராகி அம்மன் தாயார் மகிழ்வார்கள். நவதானிய வடை செய்து படைக்கலாம், இன்னும் சிறப்பு. மந்திரத்தை சொல்லிக் கொண்டே 108 முறை அர்ச்சனை செய்து உங்கள் பிரச்சனைகளை பிரார்த்தனையாக வையுங்கள். தீர்க்க முடியாத பல பிரச்சனைகளுக்கு இந்த வாராஹி அம்மன் தேங்காய் தீப வழிபாடு நல்ல பலன் தரும். குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் ஒற்றுமையை ஏற்படுத்தும், தீராத தொழில் பிரச்சனைகளை தீர்த்து வைக்கும், உடல் உபாதைகள், நீண்ட நாள் பிணிகள், செய்வினைகள், கண்ணேறு ஆகியவை தீர்ந்து ஒளிமயமான எதிர்காலம் வளர்ச்சியை நோக்கி பயணிக்கும். சக்தி வாய்ந்த இந்த வாராகி அம்மனை இது போல தொடர்ந்து ஒன்பது தேய்பிறை பஞ்சமியில் வழிபட்டு வருவது சிறப்பான பலன்களை கொடுக்கும்.

சற்று முன்