- Advertisement -

சந்தோஷம் தரும் பிள்ளையார் பாடல் வரிகள்

- Advertisement -

இன்று விநாயகர் சதுர்த்தி. விநாயகருக்கு பிறந்தநாள். விநாயகர் மனதை மகிழ்விக்கும் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களும் நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் இன்னல்களை போக்கும். உங்கள் வீட்டிற்கு வந்திருக்கும் பிள்ளையார் சந்தோஷப்பட, உங்கள் குடும்பத்தில் இருக்கும் உறுப்பினர்கள் மனதிலும் சந்தோஷம் பிறக்கும்.

ஆரவாரத்துடன் முழு பக்தியுடன் முழு நம்பிக்கையுடன், இந்த விநாயகர் சதுர்த்தியை வழிபாடு செய்வோம் விநாயகரின் அன்பை பரிபூரமாக பெறுவோம். இன்று, இந்த நேரத்தில் எல்லோர் வீட்டிலும் விநாயகர் வருகை தந்திருப்பார். எல்லார் வீட்டிலும் அவரவர் வழக்கப்படி விநாயகரை வாங்கி வந்து பூஜையறையில் வைத்திருப்பீர்கள். அப்படி இல்லை என்றாலும் உங்கள் வீட்டில் இருக்கும் பிள்ளையாரின் திருவுருவப்படத்திற்காவது பூஜை செய்வீர்கள்.

- Advertisement -

எதுவாக இருந்தாலும் ஒரு பிள்ளையாராக, ஒற்றைப் பிள்ளையார் வைத்து வழிபாடு செய்யக் கூடாது. அடடா இன்னொரு பிள்ளையார் சிலை வாங்க வேண்டுமா என்று அதிர்ச்சி அடைய வேண்டாம். இந்த மண் பிள்ளையாருக்கு பக்கத்தில் சின்னதாக வெற்றிலைக்கு மேலே ஒரு மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைத்து, அதற்கு குங்குமம் பொட்டு வைத்து அருகம்புல் வைத்து வழிபாடு செய்ய வேண்டும். உங்கள் வீட்டு பூஜை அறையில் அலங்காரத்துடன் அமர்ந்திருக்கும் பிள்ளையாரின் முன்பாக நின்று பின் சொல்லக்கூடிய இந்த பாடல் வரிகளை வாய்விட்டு படியுங்கள்.

கணேச பாடல் வரிகள்

ஜெய்கணேச ஜெய்கணேச ஜெய்கணேச பாஹிமாம்
ஸ்ரீ கணேச ஸ்ரீ கணேச ஸ்ரீ கணேச ரக்ஷ்மாம்

- Advertisement -

பாஹிமாம் என்பது சமஸ்கிருத வார்த்தை. என்னை காத்தருள்வாய் என்பது இதற்கான பொருள். வீடு முழுக்க சந்தோஷம், மனது நிறைய நிம்மதி, இரண்டு கண்கள் நிறைய ஆனந்த கண்ணீர், இப்படி உங்கள் வீடு இன்று சந்தோஷத்தில் நிறைந்திருக்க, இந்தப் பாடலை கட்டாயம் படிக்க வேண்டும் உங்களுடைய சந்தோஷம் இரட்டிப்பாக பெருகும்.

இந்த பாடலை ஒரு பஜனை பாடல் போல விநாயகரின் முன்பு பாடுங்கள். பிறகு வரும் மன நிறைவை வார்த்தைகளில் சொல்ல முடியாது. உங்கள் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டை மேலும் சிறப்பாக எங்களால் முடிந்த உதவி. இந்த பாடலை பாடி முடிக்கும் போது அதாவது 27 முறை 51 முறையோ இந்த பாடலை படித்து முடிக்கும் போது, உங்களுடைய மனதில் எந்த சஞ்சலமும் இருக்காது.

- Advertisement -

ஒரு வெள்ளை பேப்பரை எடுத்து அதில் உங்களுடைய சந்தோஷமான கோரிக்கைகளை எழுதி நான்காக மடித்து, வீட்டில் இருக்கும் பிள்ளையார் சிலைக்கு அடியில் வைத்து விடுங்கள். 3 நாள் கழித்தோ, 5 நாள் கழித்தோ பிள்ளையாரை கொண்டு போய் தண்ணீரில் கரைக்கும் போது இந்த பேப்பரையும் எடுத்துக் கொண்டு போய் அந்த தண்ணீரில் போட்டு விடலாம்.

இதையும் படிக்கலாமே: இதுவரை கேள்விப்படாத வித்தியாசமான ரெசிபி முட்டைகோஸ் கோதுமை சப்பாத்தி. இந்த சப்பாத்திக்கு பக்க சைட் டிஷ் தேங்காய் சட்னி ரெண்டையும் சேர்த்து எப்படி செய்வது என்று பார்க்கலாமா?

எளிமையான இந்த வழிபாடும், மேல் சொன்ன பரிகாரமும், மேல் சொன்ன மந்திரமும் உங்கள் ஆன்மிகம் சார்ந்த வழிபாட்டை மேலும் சிறப்பாக்கித் தரும் என்ற தகவலுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம். அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.

- Advertisement -