- Advertisement -

இந்த மர பிள்ளையாரை வணங்கினால் என்ன பலன் கிடைக்கும்? ஒவ்வொரு மர பிள்ளையாருக்கும் ஒவ்வொரு பலன்களாம்!

ஆனைமுகன் ஆக இருக்கும் பிள்ளையாருக்கு மரங்களுக்கு அடியில் அமர்வது என்றால் மிகவும் பிடிக்கும். அவர் விரும்பி ஏற்கும் மரங்கள் அரசமரமும், வன்னி மரமும் ஆகும். இந்த மரத்திற்கு அடியில் அமர்ந்திருக்கும் பிள்ளையாரை வணங்கினால் வேண்டிய வரம் அப்படியே கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்து வருகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் ஒவ்வொரு மரத்திற்கு கீழ் இருக்கும் பிள்ளையாரை வணங்கும் பொழுதும், என்னென்ன பலன்கள் நமக்கு கிடைக்கும்? என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கும் அல்லவா? இதனை அறிய தொடர்வோம் இப்பதிவை!

அரச மரம்:
அரசமரப் பிள்ளையார் மிகவும் சக்தி கொண்டுள்ளவர். அரச மர இலைகளில் சாட்சாத் பிள்ளையாரின் திரு உருவம் பிரதிபலிப்பதாக கருதப்படுகிறது. விவசாயம் செய்பவர்கள், நிலம் சார்ந்த தொழில் செய்பவர்கள் லாபம் பெற, விளைச்சல் அதிகமாக பூச நட்சத்திர நாளில் அரசமரப் பிள்ளையாரை அன்னத்தால் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். இந்த பிள்ளையாரை அதிகாலையில் 108 முறை வலம் வருபவர்களுக்கு தீராத பிணிகள் தீரும், பிள்ளைப் பாக்கியம் உண்டாகும் என்பது நம்பிக்கை.

- Advertisement -

வில்வ மரம்:
வில்வ மரத்திற்கு அடியில் அமர்ந்திருக்கும் பிள்ளையார் சிவ ஸ்வரூபமாக கருதப்படுகிறார். இவரை சித்திரை நட்சத்திர நாளில் வலம் வந்து வணங்கினால் பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள். தம்பதியருக்குள் இருக்கும் பிரச்சினைகள் நீங்கும்.

ஆல மரம்:
ஆலமரத்திற்கு அடியில் அமர்ந்திருக்கும் பிள்ளையாரை வணங்கும் பொழுது சகல ரோக நிவாரணம் பெறலாம். அதிலும் வடக்கு நோக்கியபடி அமர்ந்திருக்கும் பிள்ளையாருக்கு மகம் நட்சத்திர நாளில் சித்ரான்னம் எனப்படும் கலவை சாதங்களை நிவேதனம் வைத்து வழிபட்டு அங்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதம் தானம் செய்தால் கடும் பிணியும் காணாமல் போகும்.

- Advertisement -

வேப்ப மரம்:
வேப்ப மரத்திற்கு அடியில் அமர்ந்து இருக்கும் பிள்ளையாருக்கு அம்பாளின் சொரூபம் இருக்கும். திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு மனம் போல் மாங்கல்யம் அமைய வேப்பமர பிள்ளையாருக்கு விளக்கு ஏற்றி உத்திரட்டாதி நட்சத்திரத்தன்று பரிகாரம் செய்து கொள்ளலாம். தாயிடம் கேட்கும் வரம் போல வேப்பமர பிள்ளையாரிடம் கேட்பது கேட்டபடி கிடைக்கும்.

மா மரம்:
மா மரத்திற்கு அடியில் அமர்ந்திருக்கும் பிள்ளையாருக்கு வழிபாடு செய்தால் நலிந்த தொழில், வியாபாரம் நிமிர்ந்து நிற்கும். கேட்டை நட்சத்திர நாளில் ஏழை சுமங்கலி பெண்களுக்கு வஸ்திர தானம், அன்னம் தானம் செய்தால் உங்களிடம் இருக்கும் தீய குணங்கள் அகலும். இந்த பிள்ளையாருக்கு விபூதி காப்பு சாற்றி வழிபட வேண்டாத எதிரிகளின் சூழ்ச்சிகள் முறியடிக்கப்படும்.

- Advertisement -

மகிழ மரம்:
மகிழ மரப்பிள்ளையாரை அனுஷம் நட்சத்திர நாளில் மாதுளம் பழங்களை தட்டி வைத்து மாதுளை முத்துக்கள் கொண்டு அபிஷேகம் செய்தால் நீண்ட தூரத்தில் இருந்து குடும்பத்தை விட்டு வேலை பார்க்கும் உறவினர்கள் நன்றாக இருப்பார்கள். இந்த நட்சத்திரம் வரும் ஒவ்வொரு நாளிலும் இவ்வாறு செய்ய நன்மைகள் நடக்கும்.

புன்னை மரம்:
புன்னை மரத்தில் அமர்ந்திருக்கும் பிள்ளையாரை ஆயில்ய நட்சத்திர தினத்தில் இளநீர் கொண்டு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி, ஏழை எளியவர்களுக்கு, நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வஸ்திர தானமும், அன்ன தானமும் செய்து பெரும் புண்ணியத்தை சேர்த்துக் கொள்ளலாம். தம்பதியராக சென்று இவ்வாறு வழிபட அவர்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை மேலோங்கும்.

வன்னி மரம்:
வன்னிமர பிள்ளையார் என்பது மிகவும் விசேஷமானது ஆகும். பிள்ளையார் அதிகம் விரும்பி அமரும் இடம் வன்னி மரம். வன்னி மர பிள்ளையாரை அவிட்ட நட்சத்திர நாளில் வணங்கினால் சகலமும் கைகூடும். நெல் பொரியினால் வன்னிமர பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் தடைபட்ட சுபகாரியங்கள் கைகூடும்.

- Advertisement -