- Advertisement -

சகல பிரச்சினைகளையும் தீர்க்கும் ஞாயிறு பிரதோஷம்

- Advertisement -

இந்த உலகத்தில் வாழக்கூடிய ஒவ்வொரு நபருக்கும் ஏதாவது ஒரு பிரச்சினை என்பது இருக்கத்தான் செய்யும். பிரச்சினையே இல்லாத மனிதன் என்று யாருமே கிடையாது. கோடீஸ்வரராக இருந்தாலும் வறுமை நிலையில் வாடுபவராக இருந்தாலும் அவர் அவருக்கு ஏற்றார் போல் பிரச்சினைகள் என்பது இருக்கும். எப்பேர்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் அந்த பிரச்சினைகள் அனைத்தும் நிவர்த்தி அடைவதற்கு மிகவும் சூட்சுவமான வடிவில் செய்ய வேண்டிய வழிபாடாக தான் ஞாயிற்றுக்கிழமை பிரதோஷ வழிபாடு திகழ்கிறது. அன்றைய நாளில் எந்த முறையில் சிவபெருமானை வழிபாடு செய்ய சகல பிரச்சனைகளும் தீரும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பிரதோஷ நாளில் பிரதோஷ நேரமான மாலை 4:30 மணியிலிருந்து 6:00 மணிக்குள் யாரொருவர் எந்தவித உணவையும் எடுத்துக் கொள்ளாமல் தண்ணீர் கூட அருந்தாமல் சிவபெருமானின் மந்திரத்தை கூறிக் கொண்டே இருக்கிறார்களோ அவர்களுடைய கர்ம வினைகள் அனைத்தும் நீங்கும். ஒருவருடைய கர்ம வினைகள் நீங்கி விட்டாலேயே அவர்கள் தொட்ட காரியம் அனைத்திலும் வெற்றி பெறும். நல்ல வாழ்க்கை அமையும் என்பது நம் அனைவருக்குமே தெரியும்.

- Advertisement -

நவகிரகங்களில் ஒருவராக திகழக்கூடியவர் தான் ராகு பகவான். நம்முடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பலவிதமான பிரச்சனைகளுக்கு காரணமாக திகழ்ந்தவர் ராகு பகவான் என்பதால்தான் செவ்வாய், வெள்ளிக்கிழமையில் ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபாடு செய்கிறோம். அதோடு மட்டுமல்லாமல் ஞாயிற்றுக்கிழமையில் வரக்கூடிய ராகு காலத்தில் சர்பேஸ்வரரை வழிபாடு செய்யும்பொழுது சகலவிதமான கஷ்டங்களும் நீங்கும். கால பைரவரையும் ராகு காலத்தில் வழிபாடு செய்வார்கள். இப்படி ராகு காலம் என்பது தெய்வ வழிபாட்டின் ஈடுபடுவதற்குரிய காலமாகவும் அப்படி ஈடுபடுபவர்களுடைய வாழ்க்கையில் இருக்கக் கூடிய கஷ்டங்கள் தீரும் என்றும் கூறப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய பிரதோஷ நேரத்தில் நேரம் என்பது ராகு காலம் என்பதால் சிவபெருமானை ராகு காலத்தில் வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய வாழ்க்கையில் இருக்கக் கூடிய எப்பேர்பட்ட பிரச்சனையும் தீரும். ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்பவர்களாக இருந்தாலும் வீட்டிலேயே இருந்து கொண்டு வழிபாடு செய்பவர்களாக இருந்தாலும் இந்த வழிமுறையை பின்பற்றலாம். இந்த வழிபாட்டிற்கு நான்கு மிளகும் ஒரு வில்வ இலையும் வேண்டும். மிளகு என்பது நம்முடைய உணவில் இருக்கக்கூடிய விஷத்தையே முறிக்கக் கூடிய ஒன்று. அப்படிப்பட்ட மிளகை வைத்து வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய வாழ்க்கையில் விஷமாக இருக்கக்கூடிய அனைத்து பிரச்சினைகளும் தீரும்.

- Advertisement -

வில்வ இலை சிவபெருமானுக்கு உரிய இலையாகவும் அதேசமயம் மகாலட்சுமியின் அம்சமாக திகழக்கூடியதாகவும் இருக்கிறது. பிரதோஷ நேரத்தில் வீட்டு பூஜை அறையில் சிவபெருமானுக்கு முன்பாக ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு கையில் ஒரு வில்வ இலை 4 மிளகை வைத்துக்கொண்டு சிவபெருமானின் மந்திரமான “ஓம் மவ சிவ” என்பதை 27 முறை அல்லது 108 முறை கூற வேண்டும். இயன்றவர்கள் இந்த மந்திரத்தை 27 முறையோ 108 முறையோ ஒரு பேப்பரில் எழுதலாம்.

இப்படி இந்த மந்திரத்தை கூறி முடித்த பிறகு கையில் இருக்கக்கூடிய அந்த மிளகையும் வில்வ இலையையும் சிவபெருமானை மனதார நினைத்துக் கொண்டு வாயில் போட்டு மென்று முழுங்கி விட வேண்டும். பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து விட வேண்டும். இந்த முறையில் நாம் மிளகையும் வில்வ இலையையும் வைத்து மந்திரத்தை கூறி உருவேற்றி உண்பதன் மூலம் நம்மிடமும் நம்மை சுற்றியும் இருக்கக்கூடிய அனைத்து விதமான எதிர்மறை ஆற்றல்களும் நீங்கும். மேலும் இவை இரண்டும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடியது.

இதையும் படிக்கலாமே:தீய சக்தியை விரட்டி அடிக்கும் ருத்ராட்சம்

எளிமையான வழிப்பாடாக திகழ்ந்தாலும் இந்த வழிபாட்டால் சிவபெருமானின் அருளைப் பெற்று உடலில் இருக்கக்கூடிய நோய்களையும் நம்மை சுற்றி இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றலையும் விலக்க முடியும். முழு நம்பிக்கையுடன் சிவனை நம்பி வழிபாடு செய்து அனைத்து விதமான நன்மைகளையும் பெறுவோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -