
ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் செய்யக்கூடிய ஒவ்வொரு விதமான செயலுக்கும் அவர்களுடைய கர்ம வினைகள் ஒருவிதத்தில் காரணமாக அமைகின்றன. கர்ம வினைகள் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் தொட்டதெல்லாம் வெற்றிகரமாகவே நடைபெறும். அதே சமயம் கர்ம வினைகள் அதிகமாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு உரியது கிடைக்காமல் கஷ்டப்படுவார்கள். உதாரணமாக கஷ்டப்பட்டு உழைத்தாலும் அந்த உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது. இந்த கர்ம வினைகளை நீக்குவதற்காக நாம் பல வழிபாட்டு முறைகளை பின்பற்றுவோம்.
என்னதான் வழிபாட்டு முறைகளை பின்பற்றினாலும் பலருக்கும் கஷ்டங்கள் என்பது தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது என்று கூறுபவர்களுக்கு பித்ரு தோஷம் இருக்கும் என்று கூறப்படுகிறது. பித்ரு தோஷம் இருக்கும் பட்சத்தில் எந்த தெய்வத்தை வழிபட்டாலும் எந்த பரிகாரத்தை செய்தாலும் அவர்களுடைய வாழ்க்கையில் கஷ்டங்களை அவர்கள் அனுபவித்தே தீர்வார்கள். அதனால் முதலில் பித்ரு தோஷம் இல்லாத வாழ்க்கையை வாழ வேண்டும். அப்படி பித்ரு தோஷம் நீங்குவதற்கும் நீண்ட நாட்களாக வேண்டிய வேண்டுதல் நிறைவேறுவதற்கும் அமாவாசை தினத்தன்று செய்ய வேண்டிய ஒரு வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பொதுவாகவே குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் சிறப்புக்குரிய வழிபாடாக கருதப்படுகிறது. குலதெய்வத்தின் அருள் இருந்தால் தான் நாம் செய்யும் பரிகாரங்கள் வெற்றி அடையும். அதே சமயம் மற்ற தெய்வங்களில் அருளும் நமக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட குல தெய்வத்தை தினமும் நாம் மனதார நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக அமாவாசை தினத்தில் நாம் செய்யக்கூடிய வழிபாடும் பரிகாரமும் நமக்கு பல விதங்களில் நன்மைகளை தரும். இதற்கு காரணம் அமாவாசை என்பது நம்முடைய முன்னோர்களுக்காக நாம் மேற்கொள்ளும் வழிபாடை செய்யக்கூடிய தினமாகும்.
அன்றைய தினத்தில் முன்னோர்களை நினைத்து வழிபாடுவதால் நமக்கு இருக்கக்கூடிய கர்ம வினைகளையும் அதேசமயம் பித்ரு தோஷத்தையும் நீக்கக்கூடிய ஒன்றாகவே திகழ்கிறது. அந்த வகையில் தான் குலதெய்வத்திற்கு நாம் ஏற்றக்கூடிய தீபமும் அமைகிறது. அமாவாசை தினத்தன்று உங்களால் எந்த நேரத்தில் இந்த வழிபாட்டை செய்ய முடியுமோ அந்த நேரத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள். அன்றைய தினம் நல்ல நேரம் பார்க்க தேவையில்லை.
ஒரு தாம்பாள தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சுத்தம் செய்யப்பட்ட அகத்திக்கீரைகளை பரப்பிக் கொள்ளுங்கள். அதற்கு மேல் சிறிதளவு பச்சரிசியை தூவிவிடுங்கள். அதற்கு மேல் சிறிதளவு எள்ளையும் தூங்கி விடுங்கள். இதற்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்து நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு குலதெய்வத்தை மனதார வேண்டிக்கொண்டு தீபம் ஏற்ற வேண்டும். பிறகு இந்த தீபத்திற்கு நெய்வேத்தியமாக உங்களால் இயன்ற பழங்களை வைக்கலாம். வெற்றிலை பாக்கு வாழைப்பழத்தை கூட வைக்கலாம்.
இப்படி வைத்துவிட்டு குலதெய்வத்தை மனதார நினைத்து நீங்கள் உங்களுடைய வேண்டுதல்களை முன் வைக்க வேண்டும். அதே சமயம் பித்ரு தோஷம் நீங்க வேண்டும் என்றும் வழிபாடு செய்ய வேண்டும். தீபம் குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் எரிந்த பிறகு இதில் இருக்கக்கூடிய எள்ளை மட்டும் தனியாக பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள். மீதமிருக்கும் கீரை மற்றும் அரிசியை எடுத்து அருகில் இருக்க கூடிய பசுமாட்டிற்கு தானமாக தந்துவிட வேண்டும். எல்லை பறவைகளுக்கு தானமாக தந்துவிட வேண்டும். ஒரு அகலமான சல்லடையில் இந்த கீரை அரிசியை போடும்பொழுது எள் மட்டும் கீழே விழுந்து விடும். அதனால் எளிதில் நம்மால் எள்ளை பிரித்து எடுக்க முடியும்.
இதையும் படிக்கலாமே: தரித்திரம் விலக குளியல் பரிகாரம்
மிகவும் எளிமையான இந்த குலதெய்வ தீப வழிபாட்டை அமாவாசை தினத்தில் செய்பவர்களுக்கு கர்ம வினைகளும், பித்ரு தோஷங்களும் நீங்குவதோடு, வேண்டிய வேண்டுதல் நிறைவேறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.