- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதரித்திரம் விலக குளியல் பரிகாரம்

தரித்திரம் விலக குளியல் பரிகாரம்

- Advertisement -

பட்ட காலிலேயே படும். கெட்ட குடியே கெடும் என்று சொல்லுவார்கள். அதாவது அடிபட்ட காலிலேயே மீண்டும் மீண்டும் அடி வந்து விழுவது போல, பிரச்சனை வந்த குடும்பத்திலேயே, மீண்டும் மீண்டும் பிரச்சனைகள் வந்து அழுத்தும். அந்த குடும்பத்தில் இருப்பவர்களை தலை தூக்கவே விடாது. அடுத்தடுத்து கடன் பிரச்சனை, அடுத்தடுத்து நோய் வாய் பிரச்சனை, அடுத்தடுத்து சண்டை சச்சரவு, அடுத்தடுத்து கணவன் மனைவி பிரிவு, என்று இப்படி ஒரு குடும்பத்தை பிரச்சினைகள் சுற்றி சுற்றி அடிக்கும்.

இதிலிருந்து விடுபட முடியாமல் தவிக்கும் குடும்பத்தில் உள்ளவர்கள், நாளைய தினம் சோமவார அமாவாசை தினத்தில் இந்த ஒரு எளிமையான பரிகாரத்தை செய்யுங்கள். ஒரு பரிகாரம் அல்ல, இரண்டு பரிகாரம். குளிக்கும் தண்ணீரில் இந்த இரண்டு பொருளை போட்டு குளிக்க வேண்டும். இந்த பொருளை உங்கள் தலையை சுற்றி போட வேண்டும்.

- Advertisement -

இந்த இரண்டு விஷயங்களை செய்தாலே உங்களைப் பிடித்த பீடை நாளையோடு தொலைந்து போகும். உங்களை சுற்றி செயல்படும் எதிர்மறை ஆற்றலை விரட்டி அடிக்க கஷ்ட நஷ்டங்களை விரட்டி அடிக்க நாளைய தினம் செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

தரித்திரம் விலக குளியல் முறை

நாளைய தினம் உடம்புக்கு குளிப்பவர்கள் ஆக இருந்தாலும் சரி, தலைக்கு குளிப்பவர்கள் ஆக இருந்தாலும் சரி, வெந்நீரில் குளிப்பவர்கள் ஆக இருந்தாலும் சரி, பச்சை தண்ணீரில் குளிப்பவர்கள் ஆக இருந்தாலும் சரி, அந்த தண்ணீரில் 1 கைப்பிடி அளவு கல்லுப்பை போட்டு கரைத்து, ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி போட்டு இந்த தண்ணீரில் குளித்து விடுங்கள்.

- Advertisement -

சின்ன பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை நாளைய தினம் இந்த தண்ணீரில் குளிக்கலாம். அந்த தண்ணீரில் உங்கள் வலது கை ஆள்காட்டி விரலால் ‘ஓம்’ என்ற வார்த்தையை எழுதிவிட்டு குளிக்கவும். இந்த தண்ணீர் உங்கள் உடம்பை பட்டு கீழே விழும்போது உங்களுடைய கஷ்டமும் இந்த தண்ணீரோடு தண்ணீராக கரைந்து போகும் என்பது தான் இந்த பரிகாரத்திற்கு பின்னால் இருக்கும் நம்பிக்கை.

உங்கள் மனதிலும் அதேபோல நினைத்துக் கொள்ளுங்கள். என்னுடைய கஷ்டம் என்னை பிடித்த பீடை இன்றோடு ஒழியட்டும் என்று சொல்லி குளித்து முடித்து விடுங்கள். நாளைய தினம் காலை சூரிய உதயத்திற்கு முன்பாக இந்த குளியலை மேற்கொள்வது சிறப்பு.

- Advertisement -

வாழ்க்கையில் நம்மை கஷ்டங்கள் பின்தொடர்வதற்கு காரணம் கண் திருஷ்டியும் கூட. மாதத்தில் ஒரு நாள் அமாவாசை திதியில் வீட்டில் இருப்பவர்களுக்கு கட்டாயம் கண் திருஷ்டியை கழிக்க வேண்டும். ஏதாவது ஒரு வகையில் கண் திருஷ்டியை கழிப்பது அவசியம். உப்பு சுற்றி போடலாம். கற்பூரம் சுற்றிப் போடலாம். வர மிளகாய் கடுகு, கல் உப்பு, இது மூன்றையும் சுற்றி போடலாம்.

அல்லது எலுமிச்சம் பழம் சுற்றி போடலாம். சில பேர் பூசணிக்காய் சுற்றி உடைப்பார்கள். இதில் ஏதாவது ஒரு முறையை பின்பற்றி வீட்டில் இருப்பவர்களுடைய கண் திருஷ்டியை கழித்து விடுங்கள். இல்லை உங்கள் வீட்டில் ஏதாவது கண் திருஷ்டி கழிக்க வழக்கம் இருந்தால் அதே போலவும் கண்திருஷ்டியை சுற்றி போட்டுக் கொள்ளலாம் தவறு கிடையாது. கண் திருஷ்டி என்பது ஒரே நாளில் அழிந்து போகக்கூடிய விஷயம் அல்ல.

இன்று கண் திருஷ்டி சுற்றி போட்டால், மீண்டும் நாம் வெளியில் செல்லும்போது நம்மை நாலு பேர் பார்க்கும்போது, நம் வெற்றியை அடுத்தவர்கள் கவனிக்கும் போது, மீண்டும் மீண்டும் அந்த கண் திருஷ்டியானது நம் மேல் விழும். மாதத்தில் ஒரு முறை தவறாமல் கண் திருஷ்டி கழிக்கும் பழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: சொந்த வீடு வாங்க ஞாயிற்றுக்கிழமை செய்ய வேண்டிய தானம்

நாளைய தினம் அமாவாசை திதி வீட்டில் இருப்பவர்களுக்கு, வீட்டு பெரியவர்கள் திருஷ்டி சுத்தி போடுங்கள். சுற்றி போட பெரியவர்கள் இல்லை என்றால் உங்களுக்கு நீங்களே இந்த கண் திருஷ்டியை பரிகாரத்தை செய்து, திருஷ்டியை கழித்துக் கொள்ளலாம் தவறே கிடையாது. நாளை இரவு 9:00 மணிக்கு மேல் திருஷ்டி கழிப்பது நல்ல பலனை கொடுக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த பரிகாரங்களை செய்து பலன் பெறலாம்.

சற்று முன்