- Advertisement -
சமையல் குறிப்புகள்

மழைக்கு சுட சுட மெதுவடை சாப்பிட ஆசையா இருக்கா? உளுந்து ஊற வைத்து, மாவு அரைத்து இனி கஷ்டப்பட வேண்டாம். 10 நிமிடத்தில் மொறு மொறு மெதுவடை தயார்.

- Advertisement -

இந்த மழை நேரத்தில் சுடச்சுட ஏதாவது ஒரு ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும் என தோன்றும். மாலை நேரத்தில் மெதுவடை சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என சில பேர் நினைக்கலாம். ஆனால் உளுந்தை ஊற வைத்து கிரைண்டரில் போட்டு ஆட்டி வடை சுடுவதற்குள் உளுந்து வடை சாப்பிடும் ஆசையே விட்டுவிடும். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு சுலபமாக ஸ்நேக் தயார் செய்தால், நன்றாக இருக்கும் என்று தோன்றும் அல்லவா. பெண்கள் மட்டும் பாவம். மழை பெய்யும் போதும் அடிப்படியில் நின்று கஷ்டப்பட வேண்டுமா. உங்களுக்காக சுலபமான மெதுவடை ரெசிபி உளுந்து ஊற வைக்காமல் அரைக்காமல் எப்படி செய்வது. தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

இந்த மெதுவடைக்கு நாம் பயன்படுத்த போகும் பொருள் அவல். கெட்டி அவல், லேசாக இருக்கும் அவல், சிவப்பு அவல், என்று எந்த அவல் வேண்டும் என்றாலும் நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். உங்கள் வீட்டில் இருக்கும் அவலில் கொஞ்சமாக இந்த மெதுவடையை முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -

ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 1 கப் அவல் சேர்த்து அது மூழ்கும் வரை தண்ணி ஊற்றி சட்டென இரண்டு முறை அலசிக்கொள்ள வேண்டும். ரொம்பவும் லேசான அவலாக இருந்தால் அதில் நிறைய தண்ணீரை ஊற்றி ஊற வைத்து கொழகொழவென மாற்றி விட வேண்டாம். லேசாக தண்ணீரை விட்டு அலசி தண்ணீரை முழுமையாக வடிகட்டி விடுங்கள். அவலில் ஒரு சொட்டு கூட தண்ணீரில் இருக்கக் கூடாது. தண்ணீரில் அலசி எடுத்த ஈரமான அவலை பவுலில் போட்டு, ஒரு மூடி போட்டு 5 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள். அதில் இருக்கும் ஈரத்தன்மையிலேயே அவல் ஊறிவிடும். (தண்ணீரில் நனைத்த அவன் சாஃப்டாக நமக்கு வடை சுட தேவை அவ்வளவுதான்.)

அதன் பின்பு அந்த அவலை உங்கள் கையை வைத்து மசித்து சப்பாத்தி மாவு போல பிசைந்து கொடுக்க வேண்டும். அவல் எல்லாம் நைசாக கையாலேயே மைய அரைபட்டு, சப்பாத்தி மாவு பதத்திற்கு வந்து விடும். மிக்ஸியில் போட்டு அரைக்காதீங்க. பிசைந்து வைத்திருக்கும் இந்த மாவோடு இஞ்சி துருவல் – 1 ஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 1, கருவேப்பிலை பொடியாக நறுக்கியது, கொத்தமல்லி பொடியாக நறுக்கியது, சீரகம் – 1/2 ஸ்பூன், தேவையான அளவு உப்பு, இரண்டு டேபிள் ஸ்பூன் அரிசி மாவு, சேர்த்து இந்த மாவை மீண்டும் நன்றாக பிசைய தொடங்குங்கள்.

- Advertisement -

அரிசி மாவு சேர்த்த பின்பு இந்த மாவு நன்றாக உதிரி உதிரியாக நமக்கு கிடைக்கும். இதில் 1/2 கப் அளவு தயிரை ஊற்றி மீண்டும் நன்றாக பிசைந்தால் மாவு நன்றாக கலந்து சப்பாத்தி மாவை விட சாப்டான ஒரு மாவு நமக்கு கிடைத்திருக்கும். இந்த மாவின் மேலே இரண்டு ஸ்பூன் எண்ணெயை ஊற்றி மீண்டும் நன்றாக பிசைந்து தயார் செய்து கொள்ளுங்கள். அவ்வளவுதான் வடை சுட்டு எடுப்பதற்கு மாவு தயார்.

அடுப்பில் கடாயை வைத்து, வடை பொரிப்பதற்கு தேவையான எண்ணெயை ஊற்றி சூடு செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த மாவை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி உள்ளங்கையில் வைத்து தட்டி நடுவில் ஒரு ஓட்டை போட்டு, மெதுவடை போலவே எண்ணெயில் விட்டு இரண்டு பக்கமும் பொன்னிறமாக சிவக்க வைத்து எடுக்கலாம்.

இல்லையா சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி போட்டு போண்டா போலவும் சாப்பிடலாம். அப்படி இல்லை என்றால், மசால் வடை போல மெல்லிசாக தட்டி போட்டும், சிவக்க வைத்து எடுத்து சாப்பிடலாம். அது உங்களுடைய விருப்பம் தான். ஆனால் இந்த மழைக்காலத்திற்கு சூப்பரான ருசி தரும் ஸ்நாக்ஸ் இது. அதேசமயம் ரொம்ப ரொம்ப ஈஸியாகவும் செய்யலாம். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விருப்பமாக சாப்பிடுவார்கள். தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி டொமேட்டோ சாஸ் எதை வேண்டுமென்றாலும் பரிமாறலாம்.

பின்குறிப்பு: தேவை என்றால் இந்த மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் வெங்காயத்தில் தண்ணீர் விடும். அப்போது தயிரின் அளவை கொஞ்சம் குறைவாக சேர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டு அவலை பொறுத்து தயிரின் அளவு கொஞ்சம் முன்ன பின்ன இருக்கும். பார்த்து ஊற்றி மாவை பிசைந்து கொள்ளுங்கள். தயிர் அதிகமாகிவிட்டது என்றால் கொஞ்சம் அரிசி மாவு சேர்த்துக் கொள்ளலாம்.

- Advertisement -