- Advertisement -
வீட்டு குறிப்புகள்

பூக்கள் வாடாமல் இருக்க டிப்ஸ்.

- Advertisement -

பூக்கள் என்றதும் நம் நினைவிற்கு வருவது பெண்கள்தான். பூக்களை விரும்பாத பெண்கள் என்று யாரையும் கூற முடியாது. தங்களுக்குப் பிடித்த மலர்களை வாங்கி அன்றாடும் தலையில் வைத்து அழகு பார்க்கும் பெண்கள் பலர் இருக்கிறார்கள். இந்த வீட்டு குறிப்பு குறித்த பகுதியில் அப்படிப்பட்ட பெண்களுக்கு உதவக்கூடிய டிப்ஸை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

விசேஷ நாட்கள் என்றதும் ஆண்கள் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மலர்களை வாங்கி தருவார்கள். அதை போல் மங்களகரமான காரியங்கள் என்று பார்க்கும் பொழுதும் மலர்கள் கண்டிப்பான முறையில் இடம்பெறும். வீட்டு பூஜை அறையில் சுவாமி படங்களுக்கு வாசனை மிகுந்த மலர்களை தான் சூட்டி வணங்குவோம். இப்படி அன்றாடம் நம்முடைய வாழ்க்கையில் மலர்களுக்கு ஒரு பெரிய முக்கியத்துவம் இருக்கிறது. அப்படிப்பட்ட மலர்களை 20 நாட்கள் ஆனாலும் வாடாமல் எப்படி வைத்துக் கொள்வது? என்றுதான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

அன்றைய காலத்தில் பூக்களை வாழைத்தண்டு நாரை வைத்து தான் கட்டுவார்கள். ஆனால் இப்பொழுது கலர் கலராக நூல்களை வைத்து கட்டுகிறார்கள். வாழைநாரில் வைத்து பூவை கட்டும் பொழுது பூக்கள் விரைவில் மலராது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் அன்றைய காலங்களில் பூக்களை கடைகளிலிருந்து வாங்கும்பொழுது வாழை இலையில் தான் கட்டிக் கொடுப்பார்கள். இன்று காலம் மாறிப்போய் பிளாஸ்டிக் கவர்களில் கட்டிக் கொடுக்கும் சூழ்நிலை வந்துவிட்டது இதனால் தான் பூக்கள் விரைவிலேயே அழுகிவிடுகின்றன.

அவ்வாறு வீணாகாமல் இருப்பதற்கு நாம் பிரிட்ஜில் பூக்களை வைப்பதற்கு இந்த டிப்ஸை உபயோகப்படுத்தலாம். பொதுவாக பிரிட்ஜில் பூக்களை வைப்பதாக இருந்தால் மூடி போட்ட பாத்திரத்தில் தான் வைக்க வேண்டும். அப்படி இல்லை என்று பூக்களின் வாடை மற்ற பொருட்களிலும் வர ஆரம்பித்து விடும். அது மட்டுமல்லாமல் எப்பொழுதுமே பூக்களை பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு வைக்கக்கூடாது. எவர்சில்வர் பாத்திரத்தில் போட்டு தான் வைக்க வேண்டும். அப்பொழுதுதான் அது விரைவில் வாடாது.

- Advertisement -

அவ்வாறு எவர்சில்வர் டப்பாவில் போட்டு வைக்கும் பொழுது அடியில் வாழை இலையை நறுக்கி வைத்து அதற்குள் பூவை வைத்து அதற்கு மேல் மறுபடியும் வாழை இலையை வைத்து டப்பாவை மூடி வைத்தால் பூக்கள் விரைவில் வாடாது. வாழை இலை கிடைக்காதவர்கள் வாழை இலைக்கு பதிலாக டிஷ்யூ பேப்பரை வைத்து பூக்களை நன்றாக சுற்றிவிட்டு அதற்கு மேல் நியூஸ் பேப்பரை வைத்து சுற்றி டிபன் பாக்ஸில் வைத்து மூடி வைக்க வேண்டும். இப்படி செய்தாலும் பூக்கள் விரைவில் வாடாது.

பிரிட்ஜ் இல்லாதவர்களுக்குரிய டிப்ஸ்: இப்பொழுது பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணிப்பை கடைகளில் தர ஆரம்பித்து விட்டார்கள். அந்த துணி பைகளை நன்றாக நினைத்து தண்ணீர் சொட்டாக அளவிற்கு பிழிந்து அதில் மலர்களை வைத்து ஒரு சில்வர் டப்பாவில் மூடி வைத்து விட வேண்டும். அவ்வப்பொழுது இந்த துணிப்பையை ஈரம் செய்து வைத்தால் பிரிட்ஜிற்குள் வைக்கவில்லை என்றாலும் பூக்கள் விரைவில் வாடாது.

இதையும் படிக்கலாமே: கெட்டுப்போன தேங்காய்க்கு பின்னாடி இப்படி ஒரு ஐடியாவா?

இந்த எளிமையான குறிப்பை பயன்படுத்தி விலை மலிவாக கிடைக்கும் பொழுது பூக்களை அதிகமாக வாங்கி வைத்து அன்றாடும் தலையில் வைத்து அழகு பார்த்துக் கொள்ளலாம்.

- Advertisement -