கெட்டுப்போன தேங்காய்க்கு பின்னாடி இப்படி ஒரு ஐடியாவா?

coconut
- Advertisement -

சில சமயம் தேங்காயை உடைத்து நாம் பிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்திருந்தாலும், அந்த தேங்காய் கெட்டுப் போய்விடும். சில பேர் வெளியிலேயே வைத்து தேங்காயை மறந்திருப்பார்கள். தேங்காய்க்கு மேலே கருப்பாக பூசணம் பிடித்து, தேங்காய் காய்ந்து போயிருக்கும்.

இந்த தேங்காயை பெரும்பாலும் நாம் குப்பை தொட்டியில் தான் தூக்கி போடுவோம். ஏனென்றால் இதை வைத்து சமைத்து நம்மால் எதையுமே சாப்பிட முடியாது. இப்படிப்பட்ட தேங்காவை வேறு எப்படி பயன்படுத்திக் கொள்ளலாம். பயனுள்ள வீட்டு குறிப்பு இதோ உங்களுக்காக.

- Advertisement -

தேங்காய் எண்ணெயை வீட்டிலேயே எடுப்பது எப்படி

முடிந்தவரை முதலில் அந்த தேங்காய்க்கு மேலே கல்லுப்பு போட்டு சுத்தமாக கழுவி எடுத்து விடுங்கள். தண்ணீரை வடிகட்டி விடுங்கள். பிறகு இந்த தேங்காயை துருவியோ அல்லது கத்தியால் பத்தைகளாக எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அரைத்து முடிந்த அளவு அதிலிருந்து தேங்காய் பால் எடுத்துக் கொள்ளுங்கள்.

மூன்று முறை அல்லது நான்கு முறை கூட இந்த தேங்காயை அரைத்து பால் எடுக்கலாம். எடுத்த பாலை ஒரு பெரிய பாட்டிலில் ஊற்றி மூடி போட்டு அப்படியே வைத்து விடுங்கள். ஐந்திலிருந்து ஆறு மணி நேரத்திற்குள் அடியில் தண்ணீர் தேங்கி நிற்கும்.

- Advertisement -

மேலே திக்கான தேங்காய் பேஸ்ட் மட்டும் நமக்கு கிடைக்கும். மேலே தெளிந்து வந்திருக்கும் அந்த பேஸ்டை மட்டும் ஒரு ஸ்பூனை வைத்து எடுத்து ஒரு கடாயில் போடுங்க. இது க்ரீம் பதத்தில் இருக்கும். இதை அப்படியே அடுப்பில் வைத்து நன்றாக காய்ச்சினால் இதிலிருந்து தேங்காய் எண்ணெய் பிரிந்து வரும்.

சக்கை தனியாக, எண்ணெய் தனியாக பிரிந்து வரும் சமயத்தில் ஒரு காட்டன் துணியில் இதை ஊற்றி நன்றாக வடிகட்டி எடுத்தால் சுத்தமான தேங்காய் எண்ணெய் தயார். இதை சருமத்தில் தேய்க்கலாம். தலைமுடிக்கு தேய்க்கலாம்.

- Advertisement -

கடையில் வாங்கக்கூடிய தேங்காய் எண்ணெயில் கெமிக்கல் இருக்கும். இது நம் கையாலேயே தயார் செய்த சுத்தமான கெமிக்கல் கலக்காத தேங்காய் எண்ணெய். இதனுடைய வாசம் வேற லெவல்ங்க. தேவை என்பவர்கள் இதை முயற்சி செய்து பாருங்க.

இதையும் படிக்கலாமே: வெறும் பத்தே நிமிடத்தில் சிங்கிள் இருக்கும் பத்து பாத்திரங்களை தேய்க்க செம ஐடியா.

பின்குறிப்பு: ரொம்பவும் அழுகிப்போன தேங்காயில் இப்படி எண்ணெய் எடுக்க முடியாது. பூசணம் பிடித்து, காய்ந்து போன, பச்சை நிறமாக மாறிய தேங்காய்களை இப்படி பயன்படுத்திக்கொள்ளலாம். கெட்ட வாடை தேங்காய் எண்ணெயிலும் வருமோ என்று சந்தேகப்படாதீங்க. தேங்காய் எண்ணெய் நல்ல வாசகத்தோடு தான் கிடைக்கும்.

- Advertisement -