- Advertisement -

பொருளாதாரப் பிரச்சினையை தீர்க்கும் ஆவணி செவ்வாய்

- Advertisement -

ஒவ்வொரு வாரத்திலும் வரக்கூடிய செவ்வாய்க்கிழமை என்பது முருக வழிபாட்டிற்கு உகந்த கிழமையாக கருதப்படுகிறது. அன்றைய நாளில் முருகப்பெருமானை நாம் வழிபாடு செய்வதன் மூலம் செவ்வாய் பகவானால் ஏற்படக்கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளில் இருந்தும் வெளியே வர முடியும் என்றும் அதிலும் குறிப்பாக கடன் தொடர்பான பிரச்சனை, திருமண தடை போன்ற காரியங்கள் அனைத்திலும் நல்ல ஒரு முன்னேற்றம் உண்டாகும் என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் ஆவணி மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை இந்த பொருட்களை வைத்து வழிபாடு செய்வதன் மூலம் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் அனைத்தும் தீரும். அந்த பொருட்கள் என்ன என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பொருளாதாரப் பிரச்சினை தீர வழிபாடு

நவகிரகங்களில் இருக்கக்கூடிய ஒவ்வொரு கிரகத்திற்கும் நற்பலன்கள் மற்றும் தீய பலன்கள் என்று இருக்கும். அதிலும் குறிப்பாக ஒரு சில கிரகங்களால் ஏற்படக்கூடிய தீய பலன்கள் நம்முடைய வாழ்க்கையை பெருமளவில் மாற்றும். அப்படிப்பட்ட கிரகங்களில் ஒன்றாக திகழ்வதுதான் செவ்வாய் கிரகம். செவ்வாய் கிரகம் சரியாக இல்லை என்றால் கடன் தொடர்பான பிரச்சனைகள் உண்டாகும், திருமண தடை உண்டாகும், சொந்த வீடு, இடம் போன்றவற்றில் பிரச்சனைகள் உண்டாகும், கோர்ட்டு கேஸ் என்று அலைய வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இவை அனைத்திலும் இருந்து தப்பிப்பதற்கு செவ்வாய் பகவானுக்குரிய அதிதேவதையான முருகப்பெருமானிடம் நாம் சரணாகதி அடைய வேண்டும்.

- Advertisement -

அந்த வகையில் ஆவணி மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி வருகிறது. அன்றைய தினத்தில் ராகு காலம், எமகண்ட நேரத்தை தவிர்த்து விட்டு மீதம் இருக்கக்கூடிய நேரத்தில் இந்த ஒரு எளிமையான வழிபாட்டை நாம் செய்யலாம். இதற்கு நமக்கு இரண்டு பொருட்கள் முக்கியமாக வேண்டும். அவற்றுள் ஒன்றுதான் செவ்வாய் பகவானுக்குரிய தானியமான துவரம் பருப்பு. ஒரு சிறிய கிண்ணம் அல்லது புதிதாக இருக்கக்கூடிய ஒரு அகல் விளக்கை எடுத்துக் கொள்ளுங்கள். அது நிரம்ப துவரம் பருப்பை போட்டுக் கொள்ள வேண்டும். அந்த துவரம் பருப்பு மேல் 9 என்ற எண்ணிக்கையில் மிளகை சேர்க்க வேண்டும். ஒன்பது என்பது செவ்வாய் பகவானுக்குரிய எண். மிளகு என்பது நம்முடைய கடன் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கக் கூடிய ஒரு பொருள்.

இப்படி வைத்த இந்த அகல் விளக்கை முருகப்பெருமானின் படத்திற்கு முன்பாக வைத்துவிட்டு அவருக்கு முன்பாக ஒரு தீபத்தை ஏற்றி வைத்து உங்களுக்கு தெரிந்த முருகப்பெருமானின் பாடல்களை பாடி செவ்வாய் பகவானால் ஏற்பட்ட தோஷங்கள் அனைத்தும் நீங்க வேண்டும், பிரச்சினைகள் அனைத்தும் தீர வேண்டும் என்று முழு மனதோடு வேண்டிக் கொள்ள வேண்டும். அன்று முழுவதும் இது அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

மறுநாள் காலையில் எழுந்து தீபம் ஏற்றுவதற்கு முன்பாக இதை எடுத்து இதில் இருக்கக்கூடிய துவரம் பருப்பை காக்கை குருவிகளுக்கு தானமாக போட வேண்டும். மிளகை இடது கையில் வைத்துக்கொண்டு குடும்ப நபர்கள் அனைவரையும் ஒன்றாக அமர வைத்து வலது புறமாக மூன்று முறையும் இடது புறமாக மூன்று முறையும் சுற்றி கால் படாத ஏதாவது ஒரு இடத்தில் வீட்டிற்கு வெளியே போட்டு விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் செவ்வாய் பகவானால் ஏற்பட்ட அனைத்து விதமான பிரச்சினைகளும் தீரும்.

இதையும் படிக்கலாமே: வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரும் ஆவணி தசமி

முருகப்பெருமானை முழுமனதோடு நம்பி இப்படி தீபம் ஏற்றி வழிபாடு செய்பவர்களுக்கு செவ்வாய் பகவானால் ஏற்படக்கூடிய அனைத்து விதமான பிரச்சனைகளும் தீரும் என்று தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -