- Advertisement -
ஆரோக்கியம்

கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதம் சாப்பிட வேண்டிய உணவுகள் எவை ?

ஒரு பெண் கர்பம் தரித்த நொடியில் இருந்து அவளை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ள வேண்டிய கடமை அவளை சுற்றி உள்ள ஒவ்வொருவருக்கும் உள்ளது. கர்ப காலத்தின் முதல் மூன்று மாதங்கள் என்பது மிக மிக கவனமாக இருக்கவேண்டிய காலம் ஆகும். நாம் செய்யும் செயல்கள் உண்ணும் உணவுகள் என்று அனைத்திலும் கவனம் தேவை. அந்த வகையில் கர்பிணி பெண்கள் முதல் மூன்று மாதம் எதை எல்லாம் சாப்பிடுவது சிறந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

முதல் சில நாட்கள் வரை பல பெண்களுக்கு தாங்கள் கர்பம் தரித்திருப்பதே தெரியாது. தாங்கள் கர்பமாக இருப்பதை அறிந்த உடன் முதலில் பதற்றத்தை குறைக்க வேண்டும். இந்த கால கட்டத்தில் தலைவலி வாந்தி உள்ளிட்டவை சிலருக்கு வர வாய்ப்புள்ளது. அதனால் பதற்றம் தேவை இல்லை. முதல் மாதத்தில் கர்ப்பிணி பெண்கள், முட்டை, பீன்ஸ், ஆரஞ்சு, உருளை கிழங்கு போன்ற போலேட் அதிகம் நிறைந்த உணவுகளை உண்பது அவசியம்.

- Advertisement -

முதல் மாதத்தில் சிலருக்கு குமட்டல், வாந்தி போன்றவை இருந்தால் அதற்காக மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை அதற்க்கு பதிலாக வைட்டமின் B6 அதிகம் உள்ள உணவுகளான வாழைப்பழம், முழு தானிய வகைகள், புதினா, மாதுளை, கேரட் போன்ற உணவுகளை உண்ணலாம். அதோடு இரும்பு சத்து அதிகம் உள்ள உணவுகளான பீட்ரூட், உலர்ந்த பழங்கள் போன்றவற்றையும் உண்ணலாம். இந்த காலகட்டத்தில் கட்டாயம் பாக்கெட்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள உணவை உண்ணவே கூடாது.

இரண்டாவது மாதத்தில் கர்ப்பிணி பெண்கள் சிலருக்கு காலை வேளைகளில் அதிகப்படியான உடல் சோர்வு வர வாய்ப்புள்ளது. இதனால் உணவை தவிர்க்க நினைப்பர். அனால் அப்படி செய்யவே கூடாது. இரண்டாவது மாதத்தில் முதுகெலும்பு, நரம்புகள், இதய துடிப்பு போன்றவை வளரும். இந்த காலகட்டத்தில் கீரை, பீன்ஸ், தானிய வகைகள் போன்ற போலிக் ஆசிட் அதிகம் உள்ள உணவு பொருட்களை உண்பது அவசியமாகிறது. கர்ப்பம் தரித்த நாள் முதல் தினமும் 27 mg இரும்பு சத்தை நீங்கள் உங்கள் உடலில் சேர்க்க வேண்டும். இரண்டாவது மாதத்தில் தினம் 1,000 mg அளவு கால்சியம் சத்தை நீங்கள் உடலில் சேர்க்க வேண்டும். பச்சை காய் கறிகள் மற்றும் பாலில் கால்சியம் சத்தை பெறலாம். கட்டாயம் பச்சை முட்டை அல்லது அரைவேக்காடு முட்டையை உண்ணவே கூடாது.

- Advertisement -

மூன்றாவது மாதத்தில் தூக்கமின்மை, பசி அதோடு குமட்டலும் இருக்கும். முன்றாவது மாதத்தில் அதிகப்படியான வாந்தி பலருக்கு இருக்கும். அதனால் உடல் சோர்வு அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. வைட்டமின் B6 அதிகம் உள்ள உணவுகள் குமட்டலை குறைக்க உதவும். ஆகையால் ஆரஞ்சு, முட்டை, பச்சை காய்கறிகள், உருளை கிழங்கு போன்றவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே:
சுத்தமான தேனை கண்டுபிடிப்பது எப்படி ? பார்ப்போம் வாருங்கள்

பழங்களை குளிசாதன பெட்டியில் வைத்து உண்ணாமல் பிரித்த உடன் உண்பது நல்லது. பெரிய பெரிய சூப்பர் மார்க்கெட்களில் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ள பழங்களை வாங்கி உன்ன வேண்டாம். வாழை பழம், கொய்யா பழம் போன்றவற்றை உண்பது நல்லது. இதன் மூலம் எடை அதிகரிக்க துவங்கவும். முழு தானிய வகைகள், கோதுமை, நன்கு வேகவைக்கப்பட்ட அசைவ உணவுகள், சப்போட்டா பழம் போண்டவற்றை உண்ணலாம். கடல் சார்ந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. இந்த மாதத்தின் இறுதியில் பலருக்கு வாந்தி நின்றுவிடும். ஆகையால் அடுத்த மாதம் முதல் நன்கு உன்ன முடியும்.

சித்த மருத்துவம், கை வைத்தியம் சார்த்த குறிப்புக்கள், ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சார்த்த குறிப்புகளை ஒரே இடத்தில் பெற தெய்வீகம் மொபைல் APP ஐ டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.

- Advertisement -