- Advertisement -
சமையல் குறிப்புகள்

வெறும் பத்து ரூபாய்க்கு பச்சை மிளகாய் வாங்கி இந்த புளி மிளகாய் செஞ்சு பாருங்க. இட்லி, தோசை சப்பாத்தி எல்லாத்துக்கும் பக்கா சைடு டிஷ் தயிர் சாதத்துக்கு இதை வைத்து சாப்பிட்டீங்கன்னா அல்டிமேட்டா இருக்கும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -

புளி மாங்காய் இதன் பெயரை கேட்கும் போது ஏதோ வித்தியாசமான ரெசிபி என தோன்றுகிறது அல்லவா? பெயர் மட்டும் வித்தியாசமாக இல்லை இந்த ரெசிபியும் கூட ரொம்ப வித்தியாசமான சுவையில் அட்டகாசமாக இருக்கும். வெறும் பச்சை மிளகாயை வைத்து செய்யும் போது காரமாக இருக்குமே என நீங்கள் யோசிப்பது புரிகிறது. ஆனால் உண்மையிலேயே இது அவ்வளவு காரமாக இருக்காது. நல்ல புளிப்புடன் சேர்ந்த ஒரு மிதமான காரத்துடன் சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும். வாங்க இந்த புளி மிளகாய் எப்படி செய்வது என்பதை இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

செய்முறை

இதை செய்வதற்கு முதலில் 10 ரூபாய்க்கு பச்சை மிளகாய் வாங்கி சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள். அதே போல் ஒரு இன்ச் அளவிற்கு இஞ்சியையும் சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பெரிய எலுமிச்சை பழ அளவிற்கு புளியை எடுத்து தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது அடுப்பில் கடாய் வைத்து காய்ந்தவுடன்  செக்கில் ஆட்டிய சுத்தமான நல்லெண்ணையை மூன்று டேபிள் ஸ்பூன் ஊற்றிக் கொள்ளுங்கள். இதற்கு நல்லெண்ணெய் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும். அப்போது தான் இதன் சுவை நன்றாக இருக்கும்.

எண்ணெய் காய்ந்தவுடன் ஒரு டீஸ்பூன் கடுகு சேர்த்து பொரிந்த உடன் ஒரு கொத்து கருவேப்பிலையும் சேர்த்து விடுங்கள். அதுவும் நன்றாக பொரிந்தவுடன் 10 சின்ன வெங்காயத்தை சேர்த்து நல்ல பொன்னிறமாகும் வரை வதக்கி கொள்ளுங்கள். இந்த சமயத்தில் கால் டீஸ்பூன் வறுத்து திரித்த வெந்திய பொடியும் சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அரிந்து வைத்த பச்சை மிளகாய், இஞ்சி, சேர்த்து கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், கால் டீஸ்பூன் உப்பு இவை அனைத்தையும் சேர்த்த பிறகு ஒரு முறை கலந்து வதங்க விடுங்கள்.

- Advertisement -

இப்போது வதங்கிக் கொண்டிருக்கும் இந்த பச்சை மிளகாயில் அரை டீஸ்பூன் அளவிற்கு சாம்பார் பொடியை சேர்த்து மீண்டும் ஒரு முறை கலந்த பிறகு ஏற்கனவே கரைத்து வடிகட்டி வைத்திருக்கும் புளி கரைச்சலை இதில் ஊற்றி மூடி போட்டு ஐந்து நிமிடம் நன்றாக கொதிக்க விடுங்கள்.

இதை சாதத்திற்கு ஊற்றி சாப்பிடும் பதத்திற்கு வேண்டுமானால் கொஞ்சம் தண்ணீராக இருக்கும் போது இறக்கி வைத்துக் கொள்ளுங்கள். இட்லி தோசைக்கு சாப்பிடுவதாக நன்றாக எண்ணெய் பிரிந்து சுருண்டு வரும் வரை வதக்கி எடுத்தால் நல்ல ஒரு கிரேவி பதத்திற்கு வந்து விடும்.

இதையும் படிக்கலாமே: 5 நிமிஷத்துல ரெஸ்டாரன்ட் ஸ்டைல்ல சூப்பரான வெஜிடபிள் சூப் வீட்டிலேயே தயார் பண்ணிடலாம். டேஸ்ட் சும்மா அட்டகாசமா அப்படியே ரெஸ்டாரன்ட்ல போய் சூப் சாப்பிட்ட மாதிரியே இருக்கும். வாங்க ட்ரை பண்ணலாம்.

இதை இட்லி, தோசை சப்பாத்தியுடன் வைத்து சாப்பிட அருமையாக இருக்கும். தயிர் சாதத்திற்கு வைத்து சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும். இதை அப்படியே சுட சுட சாதத்துடன் போட்டு பிடித்தும் சாப்பிடலாம். எப்படி  சாப்பிட்டாலும் இதன் சுவை பிரமாதமாக இருக்கும். ஒரு முறை இப்படி ஒரு அருமையான ரெசிபியை நீங்க ட்ரை பண்ணி தான் பாருங்களேன்.

- Advertisement -