5 நிமிஷத்துல ரெஸ்டாரன்ட் ஸ்டைல்ல சூப்பரான வெஜிடபிள் சூப் வீட்டிலேயே தயார் பண்ணிடலாம். டேஸ்ட் சும்மா அட்டகாசமா அப்படியே ரெஸ்டாரன்ட்ல போய் சூப் சாப்பிட்ட மாதிரியே இருக்கும். வாங்க ட்ரை பண்ணலாம்.

sweet corn soup
- Advertisement -

இந்த சாப்பாடு, டிபன் போன்றவைகளை பொறுத்த வரையில் வித்தியாசமாக நாம் வீட்டில் செய்து சாப்பிடத் தான் செய்வோம். இந்த சூப் வகைகளை யாரும் வீட்டில் செய்வது கிடையாது. தேவைப்பட்டால் கடைகளில் வாங்கி சாப்பிடுவார்கள். இல்லையென்றால் இன்ஸ்டன்ட் சூப் மிக்ஸ் வாங்கி கலந்து குடிப்பார்கள். இந்த சமையல் குறிப்பு பதிவில் ஒரு சூப்பரான ரெஸ்டாரன்ட் ஸ்டைல் சூப் எப்படி வீட்டில் செய்வது என்பதை தான் பார்க்க போகிறோம்.

தேவையான பொருட்கள்

ஸ்வீட் கான் – 1 கப், கேரட் -1 கப் (பொடியாக நறுக்கியது) பீன்ஸ் -1கப் (பொடியாக நறுக்கியது) கோஸ் -1 கப் (பொடியாக நறுக்கியது) வெங்காயம் -1 கப் (பொடியாக நறுக்கியது) பூண்டு -10 பல் (பொடியாக நறுக்கியது) வெங்காயத் தால் – 1 கைப் பிடி பட்டர் – 1 டேபிள் ஸ்பூன், மிளகு – 2 ஸ்பூன், கான் பிளவர் மாவு – 2 டீஸ்பூன் உப்பு – 1/2ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை

இந்த சூப் செய்ய முதலில் எடுத்து வைத்திருக்கும் ஒரு கப் ஸ்வீட் கானில் கொஞ்சமாக எடுத்து மிக்ஸியில் சேர்த்து நல்ல ஃபைன் பேஸ்ட்டாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். ஸ்வீட் கானை அரைத்து சேர்க்கும் பொழுது சூப்பிற்கு நல்ல ஒரு ருசியும் கிடைக்கும். அதே நேரத்தில் சூப் நல்ல திக்காகவும் இருக்கும்.

இப்போது அடுப்பில் பேன் வைத்து சூடானதும் பட்டர் சேர்த்து உருக்கிய பிறகு பொடியாக நறுக்கி வைத்த பூண்டை சேர்த்து நல்ல பொன்னிறம் வரும் வரை வதக்கிக் கொள்ளுங்கள். அதன் பிறகு நறுக்கி வைத்த வெங்காயத்தையும் சேர்த்து கண்ணாடி பதம் வரை வதங்கிய பிறகு, மற்ற காய்கறிகள் ஸ்வீட் கான் அனைத்தையும் சேர்த்து ஒரு முறை நன்றாக கலந்து விட்டு மூன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு இரண்டு நிமிடம் நன்றாக கொதிக்க விடுங்கள். காய்கள் அனைத்தும் பொடியாக நறுக்கி இருப்பதால் உடனே வெந்து விடும்.

- Advertisement -

காய்கள் வெந்த பிறகு ஏற்கனவே அரைத்து வைத்த ஸ்வீட் கான் பேஸ்டை இதில் சேர்த்து ஸ்பூன் உப்பையும் சேர்த்த பிறகு வெங்காயத் தால் சேர்த்துக் கொள்ளுங்கள். உங்களிடம் வெங்காயத் தாள் இல்லை என்றால் அதற்கு பதிலாக கொத்துமல்லியை பொடியாக அரிந்து அதை சேர்த்துக் கொள்ளுங்கள. இவை எல்லாம் சேர்த்த பிறகு ஒரு முறை நன்றாக கலந்து மூடி போட்டு மேலும் இரண்டு நிமிடம் கொதிக்கட்டும்.

இப்போது கடைசியாக ஒரு சின்ன கிண்ணத்தில் கான்ஸபிளவர் மாவு சேர்த்து தண்ணீர் ஊற்றி கட்டிகள் இல்லாமல் கரைத்து அதை கொதித்து கொண்டிருக்கும் சூப்பில் ஊற்றிய பிறகு கைவிடாமல் கலந்து விட்ட பிறகு கடைசியாக இறக்கும் போது மிளகுத் தூள் சேர்த்து ஒரே ஒரு கொதி வந்ததும் இறக்கி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: 20 ரூபாய்க்கு பாஸ்தா வாங்கினால் சமைக்கிறது இவ்வளவு ஈஸியா? ஒரு முறை அனைவரும் விரும்பும் ஃபேவரட் பாஸ்தா செஞ்சு தான் பார்ப்போமே!

நல்ல அருமையான ரெஸ்டாரன்ட் ஸ்டைல்ஸ் சூப் வீட்டில் சுலபமாக தயார் செய்து விட்டோம். இதை செய்த நாம் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை போதும். ரொம்பவே சுலபமாக இந்த சூப்பை தயார் செய்துவிடலாம்.

- Advertisement -