- Advertisement -

இக்காலத்தில் மக்கள் அதிகளவு பயணங்கள் மேற்கொள்கின்றனர். இப்படிபட்ட சமயங்களில் நம் வீட்டிலேயே குறைந்த நேரத்தில் தயாரித்து பயணங்களின் போது சாப்பிடும் படியான உணவாக புளியோதரை இருக்கிறது. சுவையான புளியோதரையை தயாரிக்கும் வழிமுறையை இங்கு காண்போம்.

தேவையான பொருட்கள் :
உதிரியாக வடித்து ஆற வைக்கப்பட்ட சாதம் – 3 கப்
புளி – 100 கிராம்
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – 5 டேபிள்ஸ்பூன்

- Advertisement -

தாளிப்பதற்கான பொருட்கள்:
காய்ந்த மிளகாய் – 6
கடலைப்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
வேர்க்கடலை – 1/4 கப்
பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பில்லை – சிறிது

வறுத்து பொடியாக்குவதற்க்கான பொருட்கள்:

- Advertisement -

கடலைப்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
தனியா – 1 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 5

புளியோதரை செய்முறை:

புளியை தண்ணீரில் நன்கு கரைத்து, 15 முதல் 20 நிமிடங்கள் வரை நீரில் உறைவிடமும்.

- Advertisement -

புளியோதரை செய்வதற்கு நமக்கு முதலில் புளியோதரை பொடி தேவை. ஆகையால் அதை முதலில் செய்துகொள்ள வேண்டும்.

ஒரு வாணலியில் கடலை பருப்பு மற்றும் உளுத்தம்பருப்பை போட்டு மிதமான சூட்டில் வறுக்க வேண்டும். கொஞ்சம் வறுபட்ட நிலையில் அதில் தனியா, மிளகு, வெந்தயம், மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வறுக்க வேண்டும்.

இந்த கலவை நன்கு வாசனை வர துவங்கியதும் அடுப்பை நிறுத்தி விடவேண்டும். பிறகு அந்த கலவையில் பெருங்காய தூள் சேர்த்து ஆறவிட வேண்டும்.

அனைத்தும் நன்கு ஆரிய உடன் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு நன்கு பொடியாக அரைத்துக்கொள்ளவேண்டும். இந்த புளியோதரை பொடியை நீங்கள் அதிக அளவில் அரைத்து வைத்துக்கொண்டு அதை எப்போதும் வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இப்போது ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு போடா வேண்டும். கடுகு பொரிந்ததும், அதில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை, பெருங்காய தூள், மஞ்சள் தூள் ஆகியயவற்றை சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பிறகு இதில் வேர்க்கடலை சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

இந்த கலவையில், நாம் இதற்கு முன்பு அரைத்து வைத்துள்ள புளியோதரை பொடியை போட்டு நன்கு கலக்க வேண்டும். சிறிது நேரத்திற்கு பிறகு இதில் புலி கரைசலை ஊற்ற வேண்டும். பிறகு அது ஒரு அளவு கெட்டியாகும் வரை நன்கு கொதிக்கவிட்டு அதில் தேவையான அளவு உப்பை சேர்க்கவும்.

இந்த கலவை நன்கு கொதித்து கெட்டியான பிறகு அடுப்பை நிறுத்திவிட்டு ஆறவிட வேண்டும். இப்போது சாப்பாட்டிற்கு தேவையான அளவு கலவையை எடுத்துக்கொண்டு அதில் சாதத்தை போட்டு கிளறினால் சுவையான புளியோதரை தயார்.

மீதமுள்ள கலவையை ஒரு கண்ணாடி பாட்டலில் போட்டு வைத்துக்கொண்டு பிறகு பயன்படுத்திக்கொள்ளலாம்.

சமைப்பதற்க்கு ஆகும் நேரம்: 40 நிமிடங்கள்

சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை : 4

இதையும் படிக்கலாமே:
மொறு மொறு காராசேவ் செய்வது எப்படி

இது போன்ற மேலும் பல சமையல் குறிப்புகள் பலவற்றை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Puliyodharai recipe in Tamil. It is also called as Puliyodharai sadam recipe in Tamil or Puliyodharai sadam seimurai in Tamil or Puliyodharai powder recipe in Tamil or Puliyodharai podi recipe in Tamil or Puliyodharai powder seivathu eppadi in Tamil or Puliyodharai seivathu eppadi in Tamil language. This recipe will be really tasty.

- Advertisement -