- Advertisement -

பௌர்ணமியோடு பிறக்கும் புரட்டாசி 1 வழிபாடு

- Advertisement -

இந்த வருட புரட்டாசி மாதம் முதல் தேதி நாளைய தினம் பிறக்கவிருக்கிறது. நாளை பௌர்ணமி திதியும் சேர்ந்திருக்கிறது. இந்த நாளில் நாம் வேண்டுதல் வைத்தால், அது சத்தியமாக நடக்கும் என்று சொல்கிறார்கள். அது ஏன் தெரியுமா. மாதம் தோறும் வரக்கூடிய பௌர்ணமி நாளில், பெருமாளுக்கு உகந்த சத்யநாராயண பூஜை நடக்கும். அந்த பூஜையில் பெருமாளிடம் நாம் வேண்டுதல் வைக்கும் போது, அந்த பூஜைக்கான பலன் நமக்கு உடனடியாக கிடைக்கும்.

சத்ய நாராயண பூஜையில் வைத்த வேண்டுதல் சத்தியமாக பலிக்கும் என்பது நம்பிக்கை. இதன் அடிப்படையில் நாளைய தினம் அனைவரும் தவறாமல் பெருமாள் வழிபாட்டை செய்து விட வேண்டும். வீட்டில் இருந்தபடியே சுலபமாக பெருமாளை எப்படி வழிபாடு செய்வது, கோவிலுக்கு சென்று பெருமாளை எப்படி வழிபாடு செய்வது எந்தெந்த பொருட்களை எல்லாம் வாங்கி வைத்து பெருமாளை வழிபாடு செய்யலாம் ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடங்க படிக்க தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

பெருமாளுக்கு உகந்த பொருள் என்றாலே அந்த பட்டியலில் முதலிடத்தில் நிற்பது துளசி இலை. துளசி இலைகளால் கட்டப்பட்ட மாலை இதை வாங்கி பெருமாளுக்கு அணிவிக்க வேண்டும். அடுத்தது பச்சை கற்பூரம். ஒரு பஞ்ச பாத்திரத்தில் இரண்டு துளசி இலை, ஒரு பச்சை கற்பூர துண்டு போட்டு இதை பெருமாளிடம் வைத்து விடுங்கள். இந்த தீர்த்தத்தின் வாசத்திற்கு, பெருமாள் வந்து வாசம் செய்ய தொடங்கி விடுவார்.

பூஜை அறையில் ஒரு நெய் விளக்கு ஏற்றி 1 டம்ளர் பால், பழம் வைத்து பெருமாளுக்கு துளசி இலைகளால் அலங்காரம் செய்து, பஞ்ச பாத்திரத்தில் பச்சை கற்பூர தீர்த்தம் வைத்து வழிபாடு செய்தாலே பெருமாள் வழிபாடு உங்களுக்கு நிறைவான அருளை கொடுத்து விடும். பூஜையின் போது பெருமாளுக்கு உகந்த மந்திரங்களை சொல்லலாம்.

- Advertisement -

கோவிந்தா, நாராயணா, பெருமாளே, என்று உங்களுக்குப் பிடித்த பெருமாள் நாமத்தை சொல்லுங்கள். பெருமாள் பாடல்களை வீட்டில் ஒலிக்க விடுங்கள். ‘ஓம் நமோ நாராயணா’ என்ற மந்திரத்தை நாளைய தினம் கண் விழித்ததும் சொல்லுங்கள். பூஜையிலும் இந்த மந்திரத்தை சொல்லலாம் புண்ணியம் கிடைக்கும்.

பக்கத்தில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று பகவானுக்கு துளசி இலைகளை வாங்கி கொடுத்துவிட்டு, அம்பாளுக்கு அதாவது பெருமாள் கோவிலில் இருக்கும் தாயாருக்கு நாளைய தினம் தாமரைப் பூ வாங்கி கொடுத்தால் உங்களுக்கு செல்வ செழிப்பு அதிகரிக்கும். ஏனென்றால் நாளைய தினம் பௌர்ணமி திதியும் இருக்கிறது. பௌர்ணமி அன்று மகாலட்சுமியை வழிபாடு செய்யும் போது நம் வீட்டில் இருக்கும் வறுமை நீங்கும். முடிந்தவர்கள் நாளைய தினம் மறக்காமல் ஒரே ஒரு தாமரை பூவை வாங்கி மகாலட்சுமிக்கு சாத்துங்கள்.

இதையும் படிக்கலாமே: 17-09-2024 பௌர்ணமி மந்திரம்

இது தவிர நாளைய தினம் பெருமாளுக்கு உரிய மங்களகரமான பொருட்கள், வீட்டிற்கு தேவையான மங்களகரமான பொருட்கள், எது தேவையோ அதை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். கல் உப்பு, பச்சரிசி, நாம கட்டி, திருஷ்ணம், செந்தூரம், குங்குமம், மஞ்சள் இப்படி தேவையான பொருட்களை மட்டும் வாங்கி இந்த வழிபாட்டை மனநிறைவோடு செய்யுங்கள் நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -