- Advertisement -

புரட்டாசி செவ்வாய்க்கிழமை வழிபாடு

- Advertisement -

செவ்வாய்க்கிழமை என்றாலே முருகப்பெருமானுக்கு உகந்ததாக கருதப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் வரக்கூடிய செவ்வாய்க்கிழமை எந்த அளவிற்கு விசேஷமோ அதைவிட பல மடங்கு புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய செவ்வாய்க்கிழமை விசேஷமாக திகழ்கிறது. முருக வழிபாட்டை புரட்டாசி மாத செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து தொடர்ச்சியாக 21 வாரங்களோ அல்லது புரட்டாசி மாதம் முடியும் வரை வரக்கூடிய செவ்வாய்க்கிழமைகளில் செய்யும் பொழுது நம்முடைய வேண்டுதல்கள் விரைவிலேயே நிறைவேறும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட முருக பெருமானின் வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

புரட்டாசி செவ்வாய்க்கிழமை வழிபாடு

ஒருவருடைய ஜாதகத்தில் செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கம் சரியாக இல்லாத பட்சத்திலோ அல்லது பகை வீடுகள் பார்க்கும் பட்சத்திலோ அவர்களுடைய வாழ்க்கையில் பல சங்கடங்கள் ஏற்படும். சொந்தமாக வீடு அமையாது, சொந்தமாக தொழில் செய்ய முடியாது, திருமண தடை உண்டாகும். தம்பதிகளுக்குள் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு பிரிய வேண்டிய சூழ்நிலை உண்டாகும், குழந்தை பாக்கியம் இல்லாமல் போகும் இப்படி கூறிக் கொண்டே செல்லலாம். இவை அனைத்தையும் சரி செய்வதற்கு செவ்வாய் பகவானின் அருள் பார்வை கிடைப்பதற்கு முருகப்பெருமானை நம் வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய முருகப்பெருமானின் படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். முடிந்த அளவிற்கு வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானின் படத்தை வைத்து வழிபாடு செய்ய முயற்சி செய்ய வேண்டும். அப்படி வழிபாடு செய்தால் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். ஒரு மனை பலகை மேல் சிவப்பு நிற துணியை விரித்து முருகப்பெருமானின் படத்தை வைத்து விடுங்கள்.

செவ்வரளி மலர்களை மாலையாக தொடுத்து முருகப்பெருமானுக்கு போட வேண்டும். அடுத்ததாக ஒரு மண் தட்டை வைத்து அதற்கு மேல் ஏழு வெற்றிலைகளை வைக்க வேண்டும். அந்த வெற்றிலைக்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்து நெய் ஊற்றி சிவப்பு நிற திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபம் கிழக்கு பார்த்தவாறு இருக்க வேண்டும். அடுத்ததாக தரையில் சிவப்பு நிற துணியை விரித்து அதற்கு மேல் வடக்கு பார்த்தவாறு அமர்ந்து முருகப்பெருமானை வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

முருகப்பெருமானை வழிபாடு செய்வதற்கு முன்பாக விநாயகப் பெருமான், குலதெய்வம் மற்றும் நம்முடைய குருவாக சிவபெருமானை நினைத்து வழிபாடு செய்து கொள்ள வேண்டும். பிறகு முருகப்பெருமானின் மூலமந்திரம் இருக்கும். அந்த மந்திரத்தை 1008 முறை கூற வேண்டும். 1008 முறை கூற முடியாது என்பவர்கள் 108 முறை கூறலாம். கூறி முடித்த பிறகு முருகப்பெருமானுக்கு சர்க்கரை பொங்கல், பால் பொங்கல், பால் பாயாசம், திணை மாவு, பருப்பு பாயாசம் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை தயார் செய்து வைத்து உங்களுடைய கோரிக்கை என்னவோ அந்த கோரிக்கையை முருகப்பெருமானிடம் கூறி மனதார வழிபாடு செய்ய வேண்டும்.

கடைசியாக கற்பூர தீப தூப ஆராதனை காட்டி என்னுடைய வழிபாட்டை மனதார ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று முருகப்பெருமானிடம் வேண்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள். இப்படி தொடர்ச்சியாக ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் நாம் செய்யும் பொழுது கண்டிப்பாக முறையில் முருகப்பெருமானின் அருளால் நாம் வேண்டிய வேண்டுதல் நிறைவேறும். புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய செவ்வாய்க்கிழமை என்பது மற்ற மாதத்தில் வரக்கூடிய செவ்வாய்க்கிழமை விட அதிக பலன் தரக்கூடியதாக திகழ்வதால் செவ்வாய்க்கிழமை விரதம் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானை வழிபாடு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களும் இந்த புரட்டாசி மாத செவ்வாய்க்கிழமையை பயன்படுத்திக் கொள்வது என்பது நல்லது.

இதையும் படிக்கலாமே:கடன் தீர்க்கும் திருச்செந்தூர் முருகன் பரிகாரம்

முருகப்பெருமானின் மூல மந்திரத்தை மனதார என்ன வேண்டுதல் வேண்டுமோ அந்த வேண்டுதலை நினைத்த வண்ணம் கூறுபவர்களுக்கு கண்டிப்பான முறையில் முருகப் பெருமானின் அருளால் அந்த வேண்டுதல் நிறைவேறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -