நம்முடைய வரவுக்கு மீறி செலவுகள் ஏற்படும் பொழுது அந்த செலவுகளை சமாளிப்பதற்காக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை என்பது உண்டாகும். இது பலரும் மேற்கொள்ளக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது. அத்யாவசிய தேவைக்காக கடன் வாங்குபவர் ஒரு பக்கம் இருந்தாலும், ஆடம்பர செலவுக்காக கடன் வாங்குபவர்கள் மற்றொரு பக்கம் இருக்கிறார்கள். எப்பேர்பட்ட கடன் பிரச்சினையாக இருந்தாலும் எதற்காக அந்த கடனை வாங்கினாலும் அந்த கடனிலிருந்து வெளியே வரவேண்டும் என்று நினைப்பவர்கள் திருச்செந்தூர் முருகனை எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
திருச்செந்தூர் முருகன் பரிகாரம்
கடன் பிரச்சனைக்கு காரண கர்த்தாவாக திகழக் கூடியவர் செவ்வாய் பகவான். செவ்வாய் பகவானுக்குரிய அதி தேவதையாக திகழக்கூடியவர் முருகப்பெருமான். அதனால் முருகப்பெருமானை நாம் வழிபாடு செய்யும்பொழுது செவ்வாய் பகவானால் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து நம்மால் விடுபடமுடியும். அப்படி இருக்கும் பொழுது நம்முடைய கடன் பிரச்சினை தீர்வதற்குரிய வழியையும் முருகப்பெருமான் காட்டுவார். முருகப்பெருமான் அந்த வழியை காட்டுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.
இந்த பரிகாரத்தை செவ்வாய்க்கிழமை தான் செய்ய வேண்டும். இதற்கு ஒரு சிவப்பு நிற துணியை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த சிவப்பு நிறம் என்பது செவ்வாய் பகவானுக்குரிய நிறமாக கருதப்படுகிறது. அன்று காலையில் எப்பொழுதும் போல் நம்முடைய வீட்டு பூஜை அறையில் பூஜைகள் அனைத்தையும் நிறைவு செய்த பிறகு காலை 6:00 மணியிலிருந்து ஏழு மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.
இதற்கு நம்முடைய கையில் கை நிறைய கைக்குள் அடங்கும் அளவிற்கு சில்லறை காசுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் என்று எந்த நாணயமாக இருந்தாலும் பரவாயில்லை. உங்கள் கைக்குள் அடங்கும் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள். கிழக்கு பார்த்தவாறு இன்று கொண்டு திருச்செந்தூர் முருகப் பெருமானை மனதார நினைத்துக் கொண்டு இந்த காசை வைத்து உங்களுடைய தலையை 27 முறை வளமிருந்து இடமாக சுற்ற வேண்டும்.
இப்படி சுற்றி முடித்த பிறகு இந்த சில்லறை காசுகளை சிவப்பு நிற துணியில் வைத்து விட வேண்டும். இந்த சில்லறை காசுகள் அப்படியே பூஜை அறையில் இருக்கட்டும். அவ்வளவு தான் பரிகாரம். இப்படி ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் நாம் சில்லறை காசுகளை வைத்து நம்முடைய தலையை சுற்றி சிவப்பு நிற துணியில் வைக்க வேண்டும். இப்படி நாம் சில்லறை காசுகளை வைத்து தலையை சுற்றும் பொழுது செல்வங்கள் அதிகரிக்க வேண்டும், பணவரவு அதிகரிக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டே சுற்ற வேண்டும். எக்காரணம் கொண்டும் கடன் தீர வேண்டும் என்ற எதிர்மறை வார்த்தைகளை உபயோகப்படுத்த கூடாது.
கடன் பிரச்சினை தீர்வதற்குரிய வாய்ப்புகள் கிடைத்தவுடன் நாம் சேர்த்து வைத்திருக்கும் இந்த சில்லறை காசுகளை அப்படியே எடுத்துக் கொண்டு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று அங்கு இருக்கக்கூடிய உண்டியலில் சேர்த்து விட வேண்டும்.
இதையும் படிக்கலாமே:கடன் சுமை குறைய தேய்பிறை சஷ்டி வழிபாடு
முருகப்பெருமானை நம்பி இந்த பரிகாரத்தை செவ்வாய்க்கிழமை தோறும் செய்பவர்கள் முருகப் பெருமானின் அருளால் கடன் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடுவார்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.