- Advertisement -

செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்றால் அதற்கு பணம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. பணம் இருந்தால் மட்டும்தான் இந்த உலகத்தில் நம்மால் வாழ முடியும். அந்த அளவிற்கு பணமானது மிகவும் இன்றியமையாத ஒன்று. அதனால் தான் இந்த பணத்தை நாம் சம்பாதிப்பதற்காக கடினமாக உழைக்கிறோம். இப்படி கடினமாக உழைத்து பணத்தை சம்பாதித்தாலும் அந்த பணமானது நம்முடைய கையில் தங்குவதே கிடையாது. இதற்கு நாம் செய்யும் தவறுகளும் காரணமே. இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பர்ஸை எந்த முறையில் வைத்து எடுப்பதன் மூலம் நம்மிடம் அதிக அளவு பணம் சேரும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.

பணம் சேர பர்ஸ் வைக்கும் முறை

பொதுவாக நமக்கு பணம் சேர வேண்டும் என்றால் அந்த பணத்தை எந்த இடத்தில் வைக்கிறோம், எப்படி எடுக்கிறோம் என்ற ஒரு வழிமுறை இருக்கிறது. பணத்திற்கு நாம் எந்த அளவுக்கு மரியாதை கொடுக்கிறோமோ? அந்த அளவிற்கு பணமும் நம்மை தேடி வரும் என்று கூறுவார்கள். ஒரு பழமொழி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

- Advertisement -

மதியாதார் தலைவாசல் மிதியாதே என்று. இது மனிதர்களுக்கு மட்டுமல்ல பணத்திற்கும் பொருந்தும். பணத்தை யார் ஒருவர் மதித்து வைத்துக் கொள்கிறார்களோ? அந்த அளவிற்கு பணமும் நம்மை தேடி வரும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட பணத்தை வைத்துக் கொள்ளும் பர்ஸை எந்த முறையில் நாம் பராமரிப்பது என்று தெரிந்து கொள்வோம்.

அன்றைய காலத்தில் பணத்தை சுருட்டி சுருக்கு பையில் போட்டு இடுப்பிலேயே சொருவி வைத்திருப்பார்கள். அதற்குப் பிறகு அந்த சுருக்குப்பை ஆனது பர்ஸாக மாறியது. இப்பொழுது இந்த பர்ஸும் இல்லாமல் எதற்கெடுத்தாலும் டிஜிட்டலில் கைபேசி மூலமாக பணத்தை மாற்றி பரிவர்த்தனை செய்து கொள்கிறோம். என்னதான் அக்கவுண்டில் பணம் வைத்திருந்து ஃபோன் மூலமாக பணத்தை செலவு செய்தாலும் நம்முடைய பர்ஸில் குறைந்தது 11 ரூபாய்வது இருக்க வேண்டும்.

- Advertisement -

மேலும் ஆண்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களின் பின்புறம் பர்ஸை வைக்கக் கூடாது. இது மகாலட்சுமியை அவமதிக்கும் செயலாக கருதப்படுகிறது. இதோடு மட்டுமல்லாமல் எங்காவது வெளியில் சென்று விட்டு வந்தோம் என்றால் வந்த உடனே இந்த பர்ஸை எடுத்து நம்முடைய பூஜை அறையில் வைத்து விட வேண்டுமே தவிர்த்து சட்டை பையிலோ அல்லது பேண்ட் பாக்கெட்டிலோ வைத்திருக்கக் கூடாது.

பூஜை அறையில் வைக்க இயலாதவர்கள் ஒரு செல்ஃபில் பத்திரமாக எடுத்து வைத்துக் கொள்ளலாம். மறுநாள் காலையில் வெளியில் கிளம்பும்பொழுது தான் எடுத்து அதை தங்களுடைய பாக்கெட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல் கண்டிப்பான முறையில் பர்ஸை தூக்கிப் போடாமலோ வேகமாக எடுக்காமலோ வேகமாக வைக்காமலோ மெதுவாக அதற்குரிய முக்கியத்துவத்தை கொடுத்தவாறு வைக்க வேண்டும்.

- Advertisement -

மேலும் இடது கையில் பர்சை தொடுவதை முற்றிலும் தவிர்த்துக் கொள்வது நல்லது. முடிந்த அளவிற்கு வலது கையிலேயே எடுத்து வலது கையிலேயே பணத்தையும் கொடுக்கவும் வாங்கவும் கற்றுக் கொள்ள வேண்டும். இப்படி பணத்திற்கு நாம் முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டோம் என்றால் பணமும் நமக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்ற எண்ணத்தில் நம்மிடம் அதிக அளவு வந்து சேரும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: ஆனி மாதத்தில் அதிர்ஷ்டம் பெறப்போகும் ஐந்து ராசிகள்

மேற்சொன்ன வழிமுறைகளில் விருப்பம் இருப்பவர்கள் நம்பிக்கையுடன் அதை பின்பற்றி அதிக அளவு பணத்தை சேர்த்து நிம்மதியுடன் வாழலாம்

- Advertisement -