- Advertisement -
- Advertisement -

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்ற கூற்று அனைவருக்கும் தெரிந்தது தான். ஆகையால் தான் எந்த ஒரு நல்ல காரியத்தின் புதன்கிழமைகளில் துவங்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். அப்படியான புதன்கிழமைக்கான கிரக தெய்வம் புதபகவான். இந்த புதன் பகவானின் அனுகிரகம் மட்டும் நமக்கு நிறைந்திருந்தால் போதும் வாழ்க்கையில் நாம் எதற்குமே துன்பப்படத் தேவையில்லை.

ஏனெனில் புதபகவானின் அனுகிரகம் இருந்தால் நம்முடைய புத்தியும் மனமும் தெளிவாக இருக்கும். நல்ல சிந்தனைகள் தோன்றும் இதன் மூலம் நம்முடைய முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். வீட்டில் தன தானியங்கள் பெருகும். இப்படி புதபகவானின் அனுகிரகம் இருந்தால் அனைத்தும் நல்லதாகவே நடக்கும்.

- Advertisement -

குறிப்பாக வீட்டில் பணத்தடை என்பது இருக்கவே இருக்காது. குழந்தைகளும் படிப்பில் சிறந்து நல்ல அறிவுடன் விளங்குவார்கள் இவை அனைத்தையும் ஒரு சேர தரக்கூடிய இந்த புத பகவானை எப்படி வணங்க வேண்டும் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தன தானியம் ஞானம் பெருக புத பகவான் பரிகாரம்

புதன் பகவானை வணங்க புதன்கிழமை அன்று தான் சிறந்த நாள். அன்றைய நாளில் புதன் பகவானினை நினைத்து உங்கள் வீட்டின் பூஜையறையில் ஒரு நெய் தீபத்தை ஏற்றி விடுங்கள். புதன் பகவானின் அதிபதியான தெய்வமே அவர் பெருமாள் ஆகையால் பெருமாளையும் அன்றைய தினத்தில் மனதார வேண்டி கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்து நீங்கள் ஏற்றி வைத்திருக்கும் தீபத்தின் முன் வடக்கு பார்த்தவாறு அமர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கையில் ஒரு கைப்பிடி அளவு பச்சை பயிரை வைத்து கொள்ளுங்கள். புதன் பகவானை மனதார பிரார்த்தனை கொண்டு அவரின் இந்த மந்திரத்தை சொல்லுங்கள்.

புத பகவான் மந்திரம்

ஓம் கஜத்துவ ஜாய வித்மஹே!
சுக ஹஸ்தாய தீமஹி!
தன்னோ புத : பிரசோதயாத்!!

இந்த மந்திரத்தை 11 முறை சொல்லிய பிறகு கையில் இருக்கும். பச்சை பயிரை பூஜை அறையில் வைத்து விடுங்கள். இப்போது ஒரு பச்சை நிற துணியை எடுத்து அதில் இந்த பச்சை பயிரை வைத்து சிறிதளவு பச்சை கற்பூரத்தையும் வைத்து முட்டையாக கட்டுங்கள். இந்த மூட்டையை உங்கள் பீரோவில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

இந்த பச்சை பயிறை மாதத்திற்கு ஒரு முறை புதன்கிழமையில் மட்டும் மாற்றினால் போதும். இப்படி மாற்றும் போது பழைய பயிரை பறவைகளுக்கு உணவாக போட்டு விடுங்கள் அல்லது கால் படாத இடத்தில் போடுங்கள். இந்த பரிகாரம் செய்வதன் மூலம் வீட்டில் பணத்தடை இல்லாமல் தன தானிய செல்வங்கள் பல மடங்கு பெருகும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: ராகு தோஷம் நீங்க காளியம்மன் வழிபாடு

இதே போல் புதன்கிழமை தோறும் பச்சைப்பயிரை வேக வைத்து சுண்டலாக செய்து அருகில் உள்ள ஆலயத்திற்கு கொண்டு தானமாக கொடுங்கள். இந்த தானத்தை செய்வதன் மூலம் வீட்டில் குழந்தைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றத்தை பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பரிகார முறைகளில் நம்பிக்கை இருப்பவர்கள் நம்பிக்கையுடன் செய்து நல்ல பலனை பெறுங்கள்.

- Advertisement -