
இன்றைய சூழ்நிலையில் நிறைய பேருக்கு பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருக்கிறது. கடன் பிரச்சனை, நம்மிடம் யாராவது பணத்தை வாங்கிவிட்டு திரும்பவும் கொடுக்காமல் இருக்கலாம், அல்லது நாம் லோன் வாங்கிவிட்டு அந்த லோனை திருப்பி அடைக்க வழி தெரியாமல் தவித்து வரலாம், நகையை அடமானம் வைத்திருக்கலாம், கிரெடிட் கார்டு பிரச்சனை இருக்கலாம், யாராவது நம்முடைய பணத்தை வாங்கிக்கொண்டு நம்மை ஏமாற்றி இருக்கலாம்.
நம்முடைய சொந்த பந்தங்களே நம் பணத்தை வாங்கிக்கொண்டு இன்றைக்கு தருகிறேன் நாளைக்கு தருகிறேன் என்று ஏமாற்றுகிறார்கள். இப்படிப்பட்ட பிரச்சினையில் சிக்கிக் கொண்டு தவிப்பவர்கள் இதிலிருந்து வெளிவர வேண்டும் என்றால் இன்றைய தினத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இன்று புதன்கிழமை வளர்பிறை அஷ்டமி திதியும் இருக்கிறது. இந்த அஷ்டமி திதியை ராதா அஷ்டமி திதி என்றும் சொல்கிறார்கள். ராதா என்பது மகாலட்சுமியின் ஒரு அவதாரம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நாளில் நாம் செய்யக்கூடிய பரிகாரங்கள், பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு நல்லதொரு தீர்வை கொடுக்கும்.
இன்று இரவு தூங்க செல்வதற்கு முன்பு உங்களுடைய கையில் எழுத வேண்டிய நம்பர் என்ன, வரைய வேண்டிய சிம்பிள் என்ன, ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா. பச்சை நிற பேனா அல்லது சிவப்பு நிற பேனாவை இந்த பரிகாரத்திற்கு பயன்படுத்துங்கள். எல்லா வேலையும் முடித்துவிட்டு படுக்கையில் அமர்ந்தே இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.
இந்த பரிகாரத்தை செய்து விட்டு, வேண்டுதல் வைத்துவிட்டு உடனடியாக படித்துக் கொள்ளுங்கள். உங்களுடைய இடது கை கட்டை விரலுக்கு கீழ் பக்கம் இருக்கும் பகுதியில் ‘528 HZ’ என்று எழுதுங்கள். பிறகு இதற்கு பக்கத்திலேயே மேலே புகைப்படத்தில், மகாலட்சுமிக்கு பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் சிம்பலை சின்னதாக வரைந்து கொள்ளுங்கள்.
இந்த நம்பரும் இந்த சின்னமும் உங்களுடைய பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்த்து வைக்கும். கையில் இந்த நம்பரை எழுதி, அந்த ஆங்கில வார்த்தையை எழுதி, பின்பு மேலே வரைபடத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் சின்னத்தை வரைந்து விட்டு உங்களுடைய வேண்டுதலை இந்த பிரபஞ்சத்திடம் சொல்ல வேண்டும்.
உங்களுக்கு பணம் சம்பந்தப்பட்ட குறிப்பிட்ட பிரச்சனை என்ன இருக்கிறது. அந்த பிரச்சனையை ஒரு வரியில் சொல்லுங்கள். அந்த பிரச்சனை கூடிய விரைவில் சரியாகிவிடும் என்று நம்புங்கள். உதாரணத்திற்கு யாரோ ஒருவர் உங்களுக்கு 1 லட்ச ரூபாய் பணம் தர வேண்டும். ரொம்ப நாட்களாக அவர் உங்களை ஏமாற்றிக் கொண்டே இருக்கிறார்.
எப்படி வேண்டுதல் வைக்க வேண்டும். நீண்ட நாட்களாக வராத இந்த 1 லட்ச ரூபாய் பணம் என் கையை வந்து சேர்ந்தது, நான் ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறேன், இந்தப் பிரபஞ்சத்திற்கு நன்றி மகாலட்சுமிக்கு நன்றி குலதெய்வத்திற்கு நன்றி என்று சந்தோஷத்தோடு இந்த பிரார்த்தனையை வைக்க வேண்டும்.
நீங்க கடனாளியா இருக்கிறீங்க. பணம் மாதம் மாதம் தவணை கட்ட வேண்டும் அல்லது ஒட்டுமொத்தமாக பணத்தை திருப்பித் தர வேண்டும், ஆனால் பணத்தை திருப்பி கட்ட முடியாத சூழ்நிலையில் இருக்கிறீர்கள் என்றால், ‘எனக்கு நிறைய பணம் வந்திருக்கிறது, மாதம் கடன் தொகையை சரியாக கட்டி விடுவேன், நான் செல்வந்தனாக மாறுவேன்’ என்று வேண்டிக்கொண்டு மேலே சொன்னபடி இறைவனுக்கு நன்றி சொல்லிவிட்டு தூங்க செல்லலாம்.
இப்படித்தான் வேண்டுதல் வைக்க வேண்டும் இன்றைய நாள் இந்த பிரபஞ்சம் நீங்கள் கேட்டதை கொடுக்கக்கூடிய நாளாக இருக்கும் என்ற நம்பிக்கையில் தான் இந்த பரிகாரம் சொல்லப்பட்டுள்ளது. நம்பிக்கையோடு செய்பவர்களுக்கு நிச்சயம் 100% இதில் வெற்றி கிடைக்கும். அவரவர் பிரச்சினைக்கு ஏற்ப பலன் என்பது ஒரு சில நாட்கள் தள்ளிப் போகலாம்.
இன்றைக்கான பிரச்சினைக்கு, இன்று இரவு மேல் சொன்ன இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். இதில் ஏமாற்றுவதற்கு எதுவுமே கிடையாது. இந்த பரிகாரத்திற்காக நீங்கள் ஒரு ரூபாய் கூட செலவு செய்யப் போவதும் கிடையாது. நம்பிக்கை தான் வாழ்க்கை.
இதையும் படிக்கலாமே: வீட்டில் நகைகள் சேர 9 பௌர்ணமி பரிகாரம்
இன்று புதன்கிழமை புதனுக்குரிய எண் 5, இன்றைய தேதி 11 இதைக் கூட்டினால் 2 என்ற எண் வந்திருக்கிறது. இந்த வருடத்தை கூட்டும் போது கூட்டுத்தொகை 8 வருகிறது. அஷ்டமியும் எட்டை குறிக்கக் கூடியதுதான். இதனால் தான் 528 என்ற நம்பரை இன்று எழுத சொல்லி இருக்கின்றோம். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை பின்பற்றுங்கள் நிச்சயம் நீங்கள் நினைத்தது நடக்கும்.