- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவீட்டில் நகைகள் சேர 9 பௌர்ணமி பரிகாரம்

வீட்டில் நகைகள் சேர 9 பௌர்ணமி பரிகாரம்

- Advertisement -

வீட்டில் பொன் நகைகள் இருப்பது மகாலட்சுமி கடாட்சத்தை உண்டு பண்ணும். சிலருடைய வீட்டில் பொன் நகைகளுக்கு பஞ்சமே இருக்காது ஆனால் எல்லோருடைய வீடுகளிலும் அப்படி அல்ல! குண்டுமணி அளவிற்கு தங்கம் இல்லாத வீடுகளும் உண்டு. ஆனால் தங்கம் சேர சேர உங்களுடைய கஷ்டங்களும் தீரும் என்பது ஐதீகம். இந்த நகைகள் சேர்வதற்கு எளிய பரிகாரத்தை தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் தொடர்ந்து காண இருக்கிறோம்.

பொன் நகைகள் சேர சேர குடும்பத்தில் புன்னகை அதிகரிக்கும். மகாலட்சுமியின் மறு ஸ்வரூபமாக விளங்கக்கூடிய இந்தப் ‘பொன்’ என்பது அவ்வளவு எளிதாக எல்லோரிடமும் தங்கி விடுவது கிடையாது. கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்து நகை வாங்கி நீங்கள் அணிந்து கொண்டாலும், அதை கொஞ்ச நாட்களுக்கு தான் சிலரால் அணிந்து கொள்ள முடியும். குடும்ப கஷ்டம் அல்லது ஏதாவது ஒரு சூழ்நிலை காரணமாக அதை அடகு வைத்து விடக்கூடும். இப்படி நகை கைக்கு வந்தும் நம்மால் அனுபவிக்க முடியாத சூழ்நிலையை தோஷம் என்கிறோம். நகைகளுக்கும் தோஷம் உண்டு. தோஷமுள்ள நகைகளை அணிவதன் மூலம் நம்மிடம் இருக்கும் சந்தோஷங்கள் குலைவதற்கும் வாய்ப்புகள் உண்டு.

- Advertisement -

அந்தந்த ராசிக்குரிய ரத்தினங்களை தான் சரியாக அணிந்து கொள்ள வேண்டும். சிலர் தவறுதலாக ராசி பார்க்காமல் அணிந்து கொள்வதால், அவர்களுக்கு கர்ம வினை ஆனது ஆக்டிவேட் ஆகி தொடர்ந்து பிரச்சனைகளை உண்டாக்கும். அது போல பொன் நகைகளுக்கு ராசி பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. எல்லா ராசியினரும் பொன் நகைகளை அணியலாம். வீட்டில் ஆண்களை காட்டிலும், பெண்கள் அதிக அளவில் பொன் நகைகளை அணிய வேண்டும்.

பௌர்ணமி தோறும் பூஜை அறையில் ஒரு வெள்ளி அல்லது செம்பு கிண்ணத்தில் துவரம் பருப்பை நிரப்பி வையுங்கள். இவ்விரண்டும் இல்லை என்றால் மண் கிண்ணத்திலும் வைக்கலாம். துவரம் பருப்பு நிரம்பிய அந்த கிண்ணத்தில், பௌர்ணமி அன்று உங்களிடம் இருக்கும் ஏதாவது ஒரு தங்க நகையை அதில் போட்டு வைத்து, நகை சேர வேண்டும் என்று மஹாலக்ஷ்மி தாயாரிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். பௌர்ணமி முடிந்து மறுநாள் நீங்கள் அந்த நகையை அணிந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

கிண்ணத்தில் இருக்கும் துவரம் பருப்பை அடுத்து வரும் வெள்ளிக்கிழமையில் உணவில் பயன்படுத்துங்கள். வெள்ளிக்கிழமை தோறும் துவரம் பருப்பை பயன்படுத்த லக்ஷ்மி அருள் பெருகும் என்பது ஐதீகம். இப்படி ஒரு பௌர்ணமி தவறாமல் தொடர்ந்து 9 பௌர்ணமிகள் செய்து வர பொன் நகைகள் உங்களிடம் சேர ஆரம்பிக்கும். நகைகளில் இருக்கும் தோஷங்கள் நீங்கும். அடகு போகாமல் உங்களிடம் தங்கும். பொருளாதார ரீதியாக உங்களை மேம்படுத்த இது உதவும்.

இதையும் படிக்கலாமே:
நெகட்டிவ் எண்ணங்கள் போக யோக முத்திரை

நம்பிக்கையோடு செய்து நல்ல உழைப்பையும், வாய்ப்புகளையும், திறமைகளையும் வளர்த்துக் கொண்டும் வாருங்கள். எங்கிருந்து தான் பணம் உங்களிடம் வரும் என்று தெரியாது, நகை வாங்குவதற்கு உரிய பணம் உங்களைத் தேடி வரும். மகாலட்சுமியின் பரிபூரண அருள் கிடைக்க பௌர்ணமியில் ஏழை எளியவர்களுக்கு துவரம் பருப்பை தானமும் கொடுக்கலாம். துவரை தானம் செய்பவர்களுக்கு துவண்டு போகாத வாழ்வு அமையும் என்பது ஐதீகம். தமக்கு போக மீதம் இருப்பதை பிறருக்கு தானம் செய்பவர்களுக்கு பொன் மட்டுமல்ல 16 செல்வங்களும் தேடி வரும்.

சற்று முன்