- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

ராஜபோக வாழ்க்கை கிடைக்க முருகன் வழிபாடு

- Advertisement -

முருகப்பெருமானுக்குரிய வழிபாடு என்பது மிகவும் சிறப்பான வழிபாடாக திகழ்கிறது. முருகப்பெருமானுக்கு என்று பக்தர்கள் பலர் இருக்கிறார்கள். “யாமிருக்க பயமே” என்னும் அந்த வார்த்தையில் அனைத்தையும் உள்ளடக்கி வைத்திருக்கும் தெய்வமாக தான் முருகப்பெருமான் திகழ்கிறார். அப்படிப்பட்ட முருக பெருமானிடம் நாம் வேண்டுதல் வைத்து அந்த வேண்டுதல் நிறைவேறவும் ராஜபோக வாழ்க்கை வாழவும் செய்யக்கூடிய ஒரு எளிமையான வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பொதுவாக முருகப்பெருமான் வழிபாடு என்பதை நாம் வீட்டிலேயே செய்வோம். ஆலயத்திற்கும் சென்று செய்வோம். ஆலயத்தில் செய்வதாக இருந்தால் முருகப்பெருமானுக்கு பிடித்த மலர்களை வாங்கி கொடுத்து தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்து விட்டு வருவோம். வீட்டில் செய்வதாக இருந்தால் நம்மால் இயன்ற ஏதாவது ஒரு நெய்வேத்தியத்தை வைத்து முருகப் பெருமானுக்கு மலர்களால் அர்ச்சனை செய்து இப்படி வழிபாடு செய்வோம். ஆனால் இந்த பதிவில் உள்ளது சற்று வித்தியாசமான வழிபாடு.

- Advertisement -

நாம் புதிதாக முருகனை வாங்கி வந்து வீட்டில் வைத்து வழிபட போகிறோம். அது எப்படி என்று தெரிந்து கொள்வோமா? இதற்கு நம்முடைய கையளவிற்கு ஒரு முருகர் சிலை வேண்டும். அது மண்ணால் செய்யப்பட்ட முருகர் சிலையாக இருந்தால் அது மிகவும் நல்லது. இந்த முருகர் சிலையை வீட்டிற்கு வாங்கி வருவதற்கு முன்பாக வீட்டை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு நல்ல முகூர்த்த நாளாக பார்த்து உங்களுடைய நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் இல்லாத நாளாக பார்த்து முருகனை வாங்கி வர வேண்டும்.

அப்படியே வாங்கி வரக்கூடாது. முருகனை வாங்கிய பிறகு அருகில் இருக்கக்கூடிய முருகன் ஆலயத்திற்கு சென்று அங்கு இருக்கும் முருகனின் திருவடிகளில் இந்த முருகனை வைத்து “என்னுடன் என் வீட்டிற்கு வந்து என்னுடைய கஷ்டங்கள் அனைத்தையும் தீர்த்து எனக்கு நலமான வாழ்க்கையை தர வேண்டும்” என்று வேண்டிக் கொண்டு பிறகு அந்த முருகனை எடுத்து வந்து வீட்டு பூஜை அறையில் வைக்க வேண்டும். இப்படி வைத்த நாளில் இருந்து 48 நாட்கள் வரை முருகப்பெருமானை நினைத்து விரதம் இருந்து தீபம் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

இதற்காக உணவை தவிர்க்க வேண்டும் என்று இல்லை. அசைவம் சாப்பிடாமல் சுத்தமாக இருந்தாலே போதும். முதல் நாள் எந்த நேரத்தில் நாம் தீபம் ஏற்றி வழிபாடு செய்கிறோமோ அதே நேரத்தில் தான் தொடர்ந்து 48 நாட்களும் தீபம் ஏற்ற வேண்டும். இயன்றவர்கள் நெய் தீபம் ஏற்றலாம். இயலாதவர்கள் நல்லெண்ணெய் தீபம் ஏற்றலாம். முருகனின் சிலைக்கும் முன்பாக இந்த தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு அவல், நாட்டுச் சர்க்கரை, பொட்டுக்கடலை போன்றவற்றை முருகனுக்கு நெய்வேத்தியமாக வைத்து விடுங்கள்.

பிறகு அவருக்கு முன்பாக அமர்ந்து கொண்டு “ஓம் ஸ்ரீம் சரவணபவ” என்னும் மந்திரத்தை உங்களால் இயன்ற அளவு நிறுத்தி நிதானமாக கூறுங்கள். குறைந்தது 15 நிமிடம் ஆவது இந்த வழிபாட்டை நாம் செய்ய வேண்டும். இப்படி ஒவ்வொரு நாளும் நாம் செய்து வந்து நம்முடைய வேண்டுதலை முருகப்பெருமானிடம் வைக்கும் பொழுது அந்த வேண்டுதல் நிறைவேறுவதோடு அனைத்து விதமான நன்மைகளும் நமக்கு ஏற்படும்.

இதையும் படிக்கலாமே: வீட்டில் தெய்வீக சக்தி அதிகரிக்க பரிகாரம்

கோவிலில் இருக்கக்கூடிய முருகப்பெருமானை நம்முடைய வீட்டிற்கு அழைத்து வந்து இந்த முறையில் நாம் வழிபாடு செய்வதன் மூலம் முருகப் பெருமானின் அருளையும் பரிபூரணமாக பெற முடியும். நம்பிக்கையுடன் முருகனை வழிபட்டு பலன் பெறுங்கள்.

- Advertisement -