- Advertisement -
சுவாரஸ்ய தகவல்கள்

1000 வருடங்களாக பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதா ராமானுஜரின் உடல்?

பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மிக சிறந்த மகானான ஸ்ரீராமானுஜரின் உடல் இன்றும் பதப்படுத்தப்பட்ட நிலையில் ஒரு கோவிலில் உள்ளது என்றால் உங்களால் நம்பமுடிகிறதா.. வாருங்கள் இது குறித்து விரிவாக பார்ப்போம்.

1017ம் ஆண்டு பிறந்த ஸ்ரீராமானுஜர், 120 ஆண்டுகள் இந்த உலகில் வாழ்ந்தார். இவர் இறப்பிற்கு பின்னர் இன்றும் அவரது உடல் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பதப்படுத்தப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

ராமானுஜரது திருமேனி 5-வது ‘திருச்சுற்று’ எனப்படும் அகளங்கன் திருச்சுற்றில் வசந்தமண்டபத்தில் அவர் இறந்தபின் புதைக்கப்பட்டது. அனால் சில நாட்களில் தானாகவே அவரது உடல் பூமியில் இருந்து வெளிவந்தது என்று கூறப்படுகிறது.

பதப்படுத்தப்பட்ட உடலிற்கு வருடத்தில் இரண்டு முறை சந்தனம் மற்றும் கற்பூரம் பூசப்படுகிறது. இந்த வழக்கம் 1000 வருடங்களாக தொடர்ந்து கடைபிடிக்கப்படுகிறது. உடலை பதப்படுத்துவதற்கான ரசாயனம் இந்த சந்தன கற்பூர கலவை மூலம் தானாக உறவாகிறதா? இல்லை இயற்கையாகவே அவரது உடல் கெடாமல் இருக்கிறதா என்பது இன்றுவரை புரியாத புதிராகவே உள்ளது.

- Advertisement -

ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள ராமானுஜரின் சந்நிதிக்குச் சென்று யார் வேண்டுமானாலும் அவரது உடலை பார்க்கலாம்.

பழங்காலத்தில், எகிப்தில் இறந்த அரச குடும்பத்தினரின் உடல்கள் பதப்படுத்தப்பட்டு பிரமிடுகளில் புதைத்துவைக்கப்பட்டிருப்பதை நாம் கேள்விப்பட்டுள்ளோம். அனால் இந்தியாவிலும் அதுபோன்று முக்கிய நபர்களின் உடலை பதப்படுத்தும் முறை இருந்திருக்கிறது என்பதற்கு ஸ்ரீராமானுஜரின் உடல் சான்றாக உள்ளது.

- Advertisement -