
இந்த உணவுகளில் பல வகைகள் அந்தந்த ஊரின் பெருமையை சொல்லும். ஒரு சில உணவுகளின் பெயர்களை கேட்டாலே அந்த ஊரின் பெயர் ஞாபகத்துக்கு வந்து விடும். அந்த அளவிற்கு சில உணவு கள் அந்த ஊரின் பெயரையே அறியும் அளவிற்கு பிரபலமாக இருக்கும். அப்படி ஒரு ஊரின் பெருமையை சொல்லக் கூடிய அருமையான ரெசிபியை பற்றி தான் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.
இந்த ரசக்காலன் செய்வதற்கு கத்திரிக்காய், சேனைக்கிழங்கு, உருளைக்கிழங்கு, பூசணிக்காய், முருங்கைக்காய் இதைத் தவிர்த்து உங்களிடம் அவியலுக்கு சேர்க்கும் எந்த காய்கள் இருந்தாலும் அதை சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு சிறிய எலுமிச்சை பழ அளவு புளியை கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அதே போல் ஒரு கால் கப் துருவிய தேங்காயில் எடுத்து தயாராக வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது இந்த ரசக்காலன் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.
இதை செய்வதற்கு முதலில் அடுப்பில் கடாய் வைத்து கரைத்து வைத்திருக்கும் புளி தண்ணீரை ஊற்றி கொதிக்க விடுங்கள். புளி தண்ணீர் கொதிக்கும் போது கால் டீஸ்பூன் மஞ்சள் தூளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அத்துடன் அரிந்து வைத்த காய்கறிகளை இதில் சேர்த்துக் கொள்ளுங்கள். முருங்கைக்காய், கத்திரிக்காய் போன்றவற்றை மட்டும் இந்த காய்கறிகள் பாதி அளவு வெந்த பிறகு சேர்த்துக் கொள்ளுங்கள்.
இப்போது இந்த குழம்பிற்கு தேவையான மசாலாவை அரைத்துக் கொள்வோம். அதற்கு அடுப்பில் சின்ன தாளிப்பு கரண்டியை வைத்து கால் டீஸ்பூன் வெந்தயத்தை நிறம் மாறும் வரை வதக்கிக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு ஸ்பூன் அரிசி, அரை ஸ்பூன் மிளகு இரண்டையும் வாசம் வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். மேலும் மூன்று காய்ந்த மிளகாய் வறுத்துக் கொள்ளுங்கள்.
அடுத்து மிக்ஸி ஜாரில் வறுத்த பொருட்களை ஒன்றாக சேர்த்த பிறகு துருவி வைத்த தேங்காயும் பச்சை மிளகாயும் சேர்த்து நல்ல பைன் பேஸ்ட் ஆக அரைத்துக் கொள்ளுங்கள். இப்போது கொதித்து கொண்டிருக்கும் காய்கறிகள் பாதி அளவு வெந்திருக்கும். இந்த நேரத்தில் இரண்டு டேபிள் ஸ்பூன் வெல்லத்தை சேர்த்து நன்றாக கலந்து ஒரு கொதி வந்த பிறகு அரைத்து வைத்த மசாலாவை அதில் ஊற்றி அரை ஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
இவை எல்லாம் சேர்த்து நன்றாக கொதித்து வரும் போது அரைக் கப் அதிகம் புளிக்காத தயிரை கட்டிகள் இல்லாமல் நன்றாக கலந்து அதையும் ஊற்றிய பிறகு ஒரு கொத்து கறிவேப்பிலையை சேர்த்து அடுப்பை அணைத்து விடுங்கள். தயிர் ஊற்றிய பிறகு குழம்பு கொதிக்க கூடாது.
இப்போது ஒரு தாளிப்பு கரண்டியில் இரண்டு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து பொரிந்தவுடன் இரண்டு காய்ந்த மிளகாய் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து அதை அணைத்து விடுங்கள். இந்த தாளிப்பை நாம் தயார் செய்து வைத்திருக்கும் குழம்பில் ஊற்றி அப்படி மூடி வைத்து விடுங்கள். சிறிது நேரம் குழம்பு தாளிப்பு மணத்தில் அப்படியே இருக்க வேண்டும். அவ்வளவு தான் சுவையான ரசக்காலன் தயார். வித்தியாசமான சுவையில் இருக்கும். இந்த ரசக்காலன் ரெசிபியை நீங்களும் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.