- Advertisement -
ஆரோக்கியம்

இரத்தக் கொதிப்பு நீங்க சித்த மருத்துவம்

இரத்த அழுத்தம் அல்லது இரத்த கொதிப்பு என்று கூறப்படும் பிளட் பிரஷர் என்னும் நோயை சிலர் அலட்சியம் செய்வதுண்டு. ஆனால் இது தீவிரம் அடைந்தால் இதயம், மூலை போன்ற முக்கிய உறுப்புகளை பாதிக்கும் என்று கூறப்படுகிறது. ரத்த அழுத்த நோயை கட்டுப்படுத்த சித்த மருத்துவம் கூறும் சில குறிப்புகளை இங்கு பார்ப்போம்.

குறிப்பு 1 :
இஞ்சியை மசித்து அதில் இருந்து சாறு எடுத்துக்கொண்டு அதோடு சிறிது தேன் கலந்து காலை மாலை என இரு வேலையும் குடித்தால் ரத்த கொதிப்பு குணமாகும்

- Advertisement -

குறிப்பு 2 :
தினமும் மதிய உணவில் அகத்தி கீரையை சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்த கொதிப்பு கட்டுக்குள் வரும்.

குறிப்பு 3 :
சீரகம், கல்யாண முருங்கைக் கீரை ஆகிய இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து நன்கு அரைத்து தினமும் அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் குணமாகும்.

- Advertisement -

குறிப்பு 4 :
சீரகம், பேரிச்சம் பழம் ஆகிய இரண்டையும் எலுமிச்சை சாறோடு சேர்த்து அரைத்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இரத்த கொதிப்பு சரியாகும்.

குறிப்பு 5 :
முருகை கீரையில் இருந்து சாறு பிழிந்து அதில் சீரகத்தை ஊறவைத்து பின் அதை உலர்த்தி அரைத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு தினமும் காலை மாலை என இருவேளையும் அந்த பொடியில் 2 கிராம் அளவு எடுத்துக்கொண்டு அதை தேனில் நன்கு குழைத்து சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
மூட்டு வலி நீங்க பாட்டி வைத்தியம்

மேலே உள்ள குறிப்புகளை பின்பற்றுவதோடு நமது உயரத்திற்கு ஏற்றவாறு உடல் எடையை குறைப்பதும் அவசியம். அதோடு தினமும் உடற்பயிற்சி அல்லது நடை பயற்சி செய்வது, உணவோடு சேர்த்து காய் கறி பழவகைகளை உண்பது போன்ற பழக்கங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

English Overview:
Here we have Ratha alutham Tamil maruthuvam tips or Ratha kothippu maruthuvam in Tamil. It is also called as Patti vaithiyam for blood pressure in Tamil.

- Advertisement -