- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

ருத்ராட்சம் அணிவதில் இவ்வளவு பலன்கள் உள்ளதா?

ருத்ராட்சத்தை அந்த சிவனின் கண்களுக்கு இணையாக புராணத்தில் கூறியுள்ளார்கள். இப்படிப்பட்ட ருத்ராட்சத்தை அணிந்து கொள்ள பலருக்கு அதிக ஆர்வம் உள்ளது. பலர் இந்த ருத்ராட்சத்தை அணிந்து கொண்டும் இருக்கிறார்கள். ருத்ராட்சம் சிவனின் அம்சம். அதனை அணிந்து கொண்டால் நன்மைகள் நடக்கும் என்றும், அந்த சிவனே தமக்கு பாதுகாப்பாக இருக்கிறார் என்றும், ருத்ராட்சத்தை கழுத்தில் அணிந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதில் குறிப்பாக என்னென்ன நன்மைகள் அடங்கியுள்ளது என்பதை சிலர் அறிந்திருக்க மாட்டார்கள். புனிதமாக கருதப்படும் இந்த ருத்ராட்சத்தில் என்னென்ன நன்மைகள் இருக்கிறது என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா.

ருத்ராட்சத்தை அணிந்து கொண்டால் பாவத்தில் இருந்து விடுபடலாம் என்கிறது சாஸ்திரம். தினம் தோறும் நாம் குளிக்கும் சமயத்தில் ருத்ராட்சமானது நம் கழுத்திலேயே தான் இருக்கிறது. அந்த ருத்ராட்சத்தின் மேல் பட்டு விழும் தண்ணீரானது கங்கைக்கு நிகராக கூறப்படுகிறது. ஆகையால் தினம்தோறும் கங்கையில் நீராடிய பலனை இந்த ருத்ராட்சமானது நமக்கு தருகிறது. இதனால் கோடி புண்ணியத்தை அடைந்த பாக்கியத்தை நாம் பெறுகின்றோம். ருத்ராட்சத்தை எவரொருவர் அணிந்து கொண்டிருக்கிறாரோ அவருக்கும் புண்ணியம் வந்து சேர்ந்துவிடும். ஆனால் ருத்ராட்சம் அணிந்து வருபவர்களுக்கு எவரொருவர் சேவை செய்கிறாரோ, அவரும் புண்ணியம் செய்தவர்களாகத்தான் கருதப்படுகிறார்கள். ஆகவே ருத்ராட்சம் அணிந்து கொண்டிருக்கும் உண்மையான சிவனடியார்களுக்கு உங்களால் முடிந்த சேவையை செய்வது நல்ல பலனைத் தரும்.

- Advertisement -

ருத்ராட்சத்தை நம் கழுத்துப் பகுதியில் படும்படியோ அல்லது மார்பு பகுதியில் படும்படியோ அணிந்து கொள்கின்றோம். இந்த ருத்ராட்சமானது நம் மனதினை எதிர்மறை சிந்தனையில் இருந்து பாதுகாக்கிறது. ருத்ராட்சத்தை அணிந்து கொண்டிருப்பவர்கள் எதிர்மறையாக சிந்திக்கவே மாட்டார்கள். எப்படிப்பட்ட எதிர்மறை சிந்தனையையும் ருத்ராட்சம் முற்றிலுமாக தடுத்து விடுகிறது.

இதனால் மன நிம்மதியுடனும், ஆரோக்கியமுடனும் வாழும் ஒருவருக்கு எந்த விதமான நோயும் அண்டாமல் இருக்கும். உதாரணமாக இதய நோய், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கேன்சர் போன்ற நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம்.

- Advertisement -

சிவனின் அம்சமாக கூறப்படும் இந்த ருத்ராட்சத்தை பெண்கள் அணிந்து கொள்ளலாமா என்ற சந்தேகம் சிலருக்கு இன்றளவும் இருந்து கொண்டுதான் வருகிறது. இந்த ருத்ராட்சத்தை வயது வரம்பின்றி பெண்கள், ஆண்கள், முதியவர், குழந்தைகள் எல்லோரும் அறிந்து கொள்ளலாம்.

அதேபோல் ருத்ராட்சத்தை எல்லா சமயங்களிலும் அணிந்துகொள்ளலாம். இறந்தவர்களின் வீட்டிற்கு சென்றாலும், பெண்கள் பருவம் அடைந்தாலும், தாம்பத்தியத்தின் போதும் ருத்ராட்சத்தை தாராளமாக அணிந்து கொள்ளலாம். அந்த இறைவனால் படைக்கப்பட்ட இயற்கையாகவே நடக்கக் கூடிய எல்லா விதமான சம்பவங்களின் போதும் நம் ருத்ராட்சத்தை அணிந்து கொள்ளலாம்.

- Advertisement -

யாரெல்லாம் ருத்ராட்சத்தை அணிந்து கொள்ளக் கூடாது என்றால், மாமிசம் சாப்பிடுபவர்கள், மது அருந்துபவர்கள் ருத்ராட்சத்தை அணிந்து கொள்ளக் கூடாது.

நம்மால் தீய பழக்க வழக்கங்களுக்கு செல்லாமல் சுத்தமாக இருக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டும் ருத்ராட்சத்தை அணிந்து கொள்ளலாம். இதுவரை உங்களிடம் இருந்த கெட்ட பழக்கங்களை எல்லாம் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று உறுதி மொழியை எடுத்துக் கொண்டு, தீய பழக்க வழக்கத்தில் இருந்து விடுபடுவதற்காக இந்த ருத்ராட்சத்தை நீங்கள் அணிந்து கொண்டால் அதில் தவறு ஒன்றும் இல்லை. முடியாதவர்கள் ருத்ராட்சம் அணியும் பழக்கத்தை தவிர்த்துக்கொள்வது நல்லது. நம்மால் ஒரு புண்ணிய காரியம் செய்ய முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் பாவச் செயலில் ஈடு படாதீர்கள்.

இதையும் படிக்கலாமே
தேய்பிறை அஷ்டமியில் இந்த கடவுளை வணங்கினால் கடன் நீங்கி பணம் பெருகுமா?

English Overview:
Here we have Ruthratcham palangal Tamil. Ruthratcham uses in Tamil. Ruthratcham benefits in Tamil. Ruthratcham payangal in Tamil. Ruthratcham nanmaigal in Tamil.

- Advertisement -