தேய்பிறை அஷ்டமியில் இந்த கடவுளை வணங்கினால் கடன் நீங்கி பணம் பெருகுமா?

gopuram-prayingman

பைரவ மூர்த்தி அந்த சனிபகவானுக்கு குருவாக விளங்குபவர் ஆவார். இவரை வழிபட்டால் நவக்கிரகங்களையும் வழிபடுவதற்கு சமமாக கருதப்படுகிறது. நவகிரகங்களையும் அடக்கி ஆள்பவர் பைரவர். எந்த கிரக தோஷத்தையும் நீக்க வல்லவர் பைரவ மூர்த்தி. இவரின் மந்திரத்தை ஜெபிப்பவருக்கு எந்த தீவினைகளும், கிரக தோஷமும் அண்டாது என்பது ஐதீகம். இவரை எப்படி வணங்கினால் கடன் தொல்லைகள் நீங்கி செல்வ வளம் பெருகும் என்பதைப் பற்றி இப்பதிவில் காணலாம்.

kalabairavar

பைரவ மூர்த்தி 8 அம்சங்களாக காட்சியளிக்கிறார். இவரை வணங்குவதன் மூலம் பல நன்மைகளை அடையலாம். அனைத்து ஆலயங்களிலும் பொதுவாக காணப்படும் பைரவர் எத்தகைய மன பயத்தையும் போக்கக்கூடியவர். பைரவ பகவானுக்கு உகந்த நேரம் தேய்பிறை அஷ்டமி ஆகும். தேய்பிறை அஷ்டமியில் இவரை வணங்குவது சிறப்பான பலன்களை தேடித்தரும். பொதுவாக அஷ்டமியில் எந்த நல்ல காரியத்தையும் செய்யக்கூடாது என்பது ஐதீகம். ஆனால் தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வணங்குவது அவ்வளவு சிறப்பானது.

செவ்வாய்க்கிழமை வரும் தேய்பிறை அஷ்டமி நாளில் ராகு காலத்தில் காலையில் குளித்து விட்டு உணவேதும் அருந்தாமல் விரதமிருந்து உங்கள் வயதிற்கு ஏற்ற எண்ணிக்கையில் புதிய அகல் விளக்குகள் வாங்கி தீபமேற்றி வழிபட வேண்டும். பைரவர் சன்னதிக்கு சென்று அவருக்கு உகந்த செவ்வரளி பூக்களால் தொடுக்கபட்ட மாலையை சாற்றி விட்டு 25 வயதுடையோர் 25 புதிய அகல் விளக்குகள் வங்கி கொண்டு அதில் நல்லெண்ணை ஊற்றி பஞ்சு திரியால் தீபமேற்றி மனக்குறைகளை பிரார்தனையாக அவர் முன் வைக்க வேண்டும். பின்னர் தயிர் சாதம், மிளகு சாதம் முதலானவற்றை அங்கு வரும் பக்தர்களுக்கு தானம் அளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கடன் தொல்லை நீங்கும். திருமண தடை நீங்கும். விரைவில் திருமண் கைகூடும். பிரம்மஹத்தி தோசம் விலகும். எம பயம் நெருங்காது.

aragalur-bairavar-

இதே போல வெள்ளிக்கிழமை அல்லது திங்கள் கிழமையில் சந்தியா கால வேளையில் சொர்ண ஆகர்ஷன பைரவ காயத்ரி மந்திரத்தை உச்சரித்து வெண்பூசணியாலான நெய்வேத்தியம் படைத்து, செவ்வரளி மாலை சாற்றி பைரவ மூர்த்தியை வணங்கினால் எதிரிகள் தொல்லை தீரும். பில்லி, சூனியம், ஏவல் போன்றவற்றில் இருந்து முழுமையாக விடுபடலாம். தீராத வழக்குகளில் இருந்து தீர்வுகள் கிடைக்கும். இது போல் செய்து வருவதால் உங்களின் கடன் தொல்லை அனைத்தும் நீங்கி தொழில் வளர்ச்சி உண்டாகும். உத்தியோக உயர்வு கிட்டும். செல்வவளம் பெருகும்.

- Advertisement -

சொர்ண ஆகர்ஷன பைரவ காயத்ரி மந்திரம்:

ஓம் பைரவாய வித்மஹே
ஹரிஹரப்ரம்ஹாத்மகாய தீமஹி:
தந்நோஹ் ஸ்வர்ணாகர்ஷணபைரவ ப்ரசோதயாத்!

மேலும் குழந்தை இல்லாதவர்கள் ஆறு தேய்பிறை அஷ்டமி நாட்களில் முழு பக்தியுடன் பைரர் மந்திரம் உச்சரித்து அகல் தீபமேற்றி உணவு தானம் செய்து வந்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்க பெரும்.

பைரவர் உக்ர தெய்வமாவார். எனவே அவரை வணங்கும் பொது முழு பக்தி சிரத்தையுடன், நம்பிக்கை வைத்து முறையாக வழிபட வேண்டும். எந்த பரிகரங்களையும் மறந்து விடாமல் வேண்டிய படி நிவர்த்தி செய்து விட வேண்டும். சனி பகவானுக்கு நிகரான பலன்களை வாரி வழங்க கூடியவர் பைரவர். அவரின் அருள் பெற்று வாழ்வில் வளம் பெறுங்கள்.

இதையும் படிக்கலாமே
குடும்பத்தில் அமைதி நிலவி வளம் பெற ஜல தீபத்தை இப்படி ஏற்றுங்கள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Theipirai ashtami bhairavar vazhipadu in Tamil. Bhairavar valipadu Tamil. Theipirai ashtami in Tamil. Swarna akarshana bhairavar Tamil.