
சனி பகவானுக்கு ஈசன் ஒரு வரம் கொடுத்திருந்தார். இந்த பிறவியில் செய்யும் தவறுகளுக்கு இப்பிறவியிலேயே தண்டனை கொடுக்கும் அதிகாரத்தை சனி பகவானுக்கு கொடுத்தார். அதனால் தான் சனி பார்வையிலிருந்து எவராலும் தப்பிக்க முடிவதில்லை. சனியைப் போல கொடுப்பவரும் இல்லை, சனியைப் போல கெடுப்பவரும் இல்லை என்கிற ஒரு பழமொழி உண்டு. அதற்கேற்ப சனி நம்மை ஆட்டி படைத்து கொண்டிருக்கிறார். இவரின் அருள் நமக்கு கிடைக்க, இந்த நான்கு இடங்களில் விளக்கேற்றி வைக்க வேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த இடம்? எப்படி ஏற்ற வேண்டும்? என்னும் ஆன்மீகம் சார்ந்த தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.
சனி பகவானுக்கும் அமாவாசைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சனிக்கிழமையில் வரக்கூடிய அமாவாசைக்கு மகத்தான பலன்களும் உண்டு. பொதுவாகவே அமாவாசையில் சனிபகவானை வழிபட்டு வருபவர்களுக்கு, சனி தோஷங்களில் இருந்து சற்றே நிவாரணம் கிடைக்கும் என்பது ஐதீகம். சனிக்கிழமையில் திருநள்ளாறு சென்று சனி பகவானை வழிபட்டு வருவது நற்பலன்களை அள்ளிக் கொடுக்கும்.
சனிக்கிழமையில் எள் மூட்டையில் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி, சனி பகவானை வழிபடுவதும் காலம் காலமாக நாம் செய்து வரும் ஒரு சனிக்குரிய வழிபாடாகும். அது மட்டும் அல்லாமல் சனிக்கிழமையில் வரக்கூடிய அமாவாசை திதியில் வீட்டில் இந்த இடங்களில் எல்லாம் இப்படி தீபம் ஏற்றி வர, சனி அருள் கிடைக்குமாம். முதலில் வீட்டில் தலைவாசலில் இரண்டு தீபங்களை ஏற்ற வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.
இரண்டு மண் அகல் விளக்குகளால் தலைவாசலில் இரண்டு புறமும் சனிக்கிழமை அமாவாசையில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். இது வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களை வெளியேற்றும். தீய சக்திகளை ஓட ஓட விரட்டி அடிக்கும். அதே போல பூஜை அறையில் மணி விளக்கு ஏற்றி வழிபட்டு வந்தால் சகல செல்வங்களும், குடும்பத்தில் மகிழ்ச்சியும் உண்டாகும் என்பது ஐதீகம்.
மருத்துவ மற்றும் ஆன்மீக நன்மைகளை கொடுக்கக்கூடிய ஒரு மகத்தான செடி துளசி ஆகும். துளசி செடிக்கு அருகில் ஒரு விளக்கினை ஏற்றி வைக்க வேண்டும். இருள் நிறைந்த சனி அமாவாசை நாளில், துளசி செடிக்கு அருகே விளக்கி ஏற்றி வைக்க கடவுளை வீட்டிற்கு அழைத்து வரும். பிரபஞ்ச சக்தியை ஈர்த்து உங்களுக்கு தரும் நல்ல வழிபாடாகும். சனி பகவானுக்கு மிகவும் பிடித்த விஷயம் இது.
இதையும் படிக்கலாமே:
கடன் தீர அமாவாசை இரவு செய்ய வேண்டிய பரிகாரம்
மேலும் கடைசியாக வீட்டு மாடிப்படிகளிலும் தீபம் ஏற்றி வைக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. சனி அமாவாசை தினத்தில் வீட்டு மாடிப்படியில் விளக்கு ஏற்றி வைத்தால் சனிபகவானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். இந்த நான்கு இடங்களிலும் இவ்வாறாக தொடர்ந்து ஒவ்வொரு சனி அமாவாசையிலும் ஏற்றி வைத்து, சனிபகவானை மனமாற நினைத்து வழிபட்டு வருபவர்களுக்கு சனி தோஷங்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும். நீங்கள் செய்த புண்ணியங்கள் இரட்டிப்பாகும், இதனால் பாவ காரியங்களுக்கு உரிய தண்டனைகளில் இருந்தும் உங்களுக்கு விமோசனும் கிடைக்கும். சனியின் கோபம், வக்ரம் குறைய இந்த நான்கு இடங்களில் ஒவ்வொரு சனி அமாவாசையையும் விளக்கேற்ற தவறாதீர்கள்.