- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகடன் தீர அமாவாசை இரவு செய்ய வேண்டிய பரிகாரம்

கடன் தீர அமாவாசை இரவு செய்ய வேண்டிய பரிகாரம்

- Advertisement -

இன்று மஹாளய அமாவாசை திதி. காலையில் அனைவரும் முன்னோர்களது வழிபாட்டை சிறப்பாக செய்து முடித்திருப்போம். காகத்திற்கு உணவு வைத்து விட்டு நம்முடைய விரதத்தையும் முடித்துக் கொண்டு, அமாவாசை வழிபாடு நிறைவடையும். இந்த பிரபஞ்சத்தில் வழக்கத்தை விட இறை ஆற்றல் இந்த நாளில் நிறைவாக இருக்கும்.

முன்னோர்களின் வருகை, குலதெய்வத்தின் வருகை இந்த நாளில் இருக்கும் என்பது நம்பிக்கை. இத்தனை சக்தி வாய்ந்த நாளில் நம்முடைய கஷ்டங்கள் தீருவதற்கு இந்த பிரபஞ்சத்திடம் நாம் என்ன வேண்டுதல் வைத்தாலும் கிடைக்கும். அந்த வகையில் நம்முடைய கடன் சுமை தீருவதற்கும், செல்வ செழிப்பில் உயர்ந்தவர்களாக மாறுவதற்கும் செய்ய வேண்டிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இப்போது தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

அமாவாசை அன்று திருஷ்டி கழிக்கும் முறை

மாதத்தில் ஒருமுறை வரக்கூடிய இந்த அமாவாசை திதியில் வீட்டில் இருப்பவர்களுக்கு திருஷ்டி சுற்றி போடும் பழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு அமாவாசை திதியிலும், திஷ்டி கழித்தால் நம்முடைய கஷ்டங்கள் நம்மை விட்டு விலகும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் இன்று இரவு 9 மணிக்கு மேல் உங்கள் வீட்டில் இருப்பவர்கள் அனைவருக்கும் எளிமையான முறையில் கண் திருஷ்டி கழிக்க வேண்டும்.

கல் உப்பு சுற்றி போடலாம், அல்லது வர மிளகாய் கல் உப்பு கடுகு இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து சுற்றி போடலாம். அப்படி இல்லை என்றால் வெறும் கற்பூரம் கூட ஏற்றி சுற்றி போடலாம், அல்லது எலுமிச்சம் பழத்தை சுற்றி அதை இரண்டாக நறுக்கி இரண்டு திசைகளில் தூக்கி தூரப் போடுவது, கண் திருஷ்டியை முழுமையாக நீக்கும்.

- Advertisement -

உங்களுடைய குடும்பத்தில் என்ன வழக்கமோ அதை பின்பற்றி முதலில் கண் திருஷ்டியை கழித்து விடுங்கள். அப்போதுதான் நீங்கள் செய்யக்கூடிய பரிகாரங்களுக்கு எந்த தடங்கலும் வராது. பரிகாரம் முழு பலனை கொடுக்கும். கண் திருஷ்டி இந்த விஷயத்திற்கும் தடையாக வந்து நிற்காது.

அமாவாசை அன்று நிலை வாசலில் தூவ வேண்டிய பொருள்

இன்று இரவு நிலைவாசல் கதவை சாத்துவதற்கு முன்பாக கொஞ்சமாக ஏதாவது ஒரு இனிப்பு பொருளை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த இனிப்பை உங்களுடைய உள்ளங்கைகளில் வைத்து மனப்பூர்வமாக வேண்டிக் கொள்ளுங்கள். எங்களுக்கு இருக்கக்கூடிய கடன் பிரச்சனை எல்லாம் தீர்ந்து போக வேண்டும், கர்மா குறைய வேண்டும், வருமானம் பெருக வேண்டும் என்று வேண்டி இந்த இனிப்பு பொருளை நிலை வாசலில் இரண்டு பக்கத்திலும் போட்டுவிட்டு நிலை வாசல் கதவை அடைத்துவிட்டு தூங்க செல்ல வேண்டும். பரிகாரம் இவ்வளவுதான்.

- Advertisement -

அமாவாசை இரவில் பசியோடு நம் வீட்டை நோக்கி வரும் எறும்பு வண்டு சின்ன சின்ன பூச்சிகள் இந்த உணவை சாப்பிட்டு உங்களை வாழ்த்தி விட்டு சென்றால், உங்களுக்கு கஷ்டத்தை கொடுக்க கூடிய கர்ம வினைகள் எல்லாம் தீரும். மற்ற நாளில் அன்னதானம் செய்வதை விட இந்த அமாவாசை திதியில் அன்னதானம் செய்வது பல மடங்கு புண்ணியத்தை தரும் என்று சொல்லுவார்கள்.

உங்களுடைய நல்ல நேரம் ஒரே ஒரு எறும்பு இந்த இனிப்பு பொருளை எடுத்து சாப்பிட்டாலும், ஆயிரம் எறும்புகளுக்கு அன்னதானம் அளித்த புண்ணியம் உங்களை வந்து சேரும். அது போதாதா. உங்கள் வாழ்வில் இருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் ஒரு முடிவுக்கு வரும். உங்களுக்கு தேவையான செல்வ செழிப்பும் உங்கள் வீடு தேடி வரும்.

அது மட்டுமல்லாமல் முன்னோர்களின் பரிபூரண ஆசியும் இதோடு உங்களுக்கு கிடைக்கும். மறுநாள் காலை நிலை வாசலில் மிச்சம் மீதி இருக்கும் இனிப்பு பொருட்களை எல்லாம் வழக்கம் போல கூட்டி வெளியே கொட்டி விடுங்கள். தூள் செய்யப்பட்ட வெல்லம், வெள்ளை சர்க்கரை, நாட்டு சர்க்கரை, இப்படி எந்த இனிப்பு பொருளை வேண்டும் என்றாலும் இந்த பரிகாரத்திற்கு நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: மஹாளய அமாவாசை காகத்திற்கு சாப்பாடு வைக்கும் முறை

சக்தி வாய்ந்த இந்த மஹாளய அமாவாசையில் நீங்கள் செய்யக்கூடிய இந்த எளிமையான பரிகாரம் உங்கள் வாழ்க்கையில் பெரிய அளவில் மாற்றங்களை கொண்டு வரும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்