- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

இதையெல்லாம் தவறாமல் கடைப்பிடித்தால் சனி பகவானால் ஏற்படும் இன்னல்கள் நீங்கி அவரே உங்களுக்கு பொன்னும் பொருளும் வாரி வழங்குவார் என்பதில் துளியும் சந்தேகமே இல்லை.

கிரகங்களிலே ஈஸ்வரன் என்ற பட்டத்தை பெற்றவர் இந்த சனீஸ்வர் தான். ஒருவருடைய ராசியில் இவருடைய ஆதிக்கம் அதிகரித்து விட்டால் அந்த ராசியில் இருப்பவர்கள் படும் இன்னல்களுக்கு அளவே கிடையாது. இவர் வந்தால் துன்பங்களை தான் தருவார் என்பது பொதுவான கருத்து. ஆனால் இவரை போல நியாயமான தெய்வம் யாரும் இல்லை என்பதும் நிதர்சனமான உண்மை. அந்த வகையில் இவர் தரும் இன்னல்களை குறைத்து கொண்டு இவர் மூலமே நம்முடைய வாழ்வில் எல்லா நலன்களை பெற என்ன செய்ய வேண்டும் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தடைகளை தகர்த்தெறிய சனீஸ்வரன் பரிகாரம்:
சனீஸ்வர பகவான் இருக்கும் ஆலயத்தில் சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் வாங்கி கொடுப்பது மிகவும் நல்லது. அது மட்டும் இன்றி திங்கட்கிழமைகளில் சிவ வழிபாடு செய்வது சாலச் சிறந்தது. ஏனெனில் ஈஸ்வரன் என்ற பட்டத்தை பெற்றவர் அவர், அந்த ஈஸ்வரனே இவர். இவர்கள் இருவரையும் ஒரு சேர வணங்கும் போது நிச்சயம் நல்ல பலன்கள் பெறலாம்.

- Advertisement -

ஏழை எளியவர்களுக்கு தானம் செய்வது மிகவும் புண்ணிய பலன்களை சேர்க்கும். சனீஸ்வர பகவானின் தாக்கங்கள் நம்முடைய கர்ம வினைகளின் பலனாகத் தான் நடக்கும். ஆகையால் நம்முடைய கர்ம வினைகளின் பலனை குறைக்கும் பொருட்டு இது போல தானங்களை செய்ய வேண்டும். அதிலும் அவருடைய அனுகிரகத்தை பெற வேண்டுமெனில் காலணிகளை தானமாக தர வேண்டும்.

நம்முடைய உடலில் சனீஸ்வர பகவான் அவர் பாதத்தில் குடியிருப்பதாக ஒரு ஐதீகம் உண்டு. ஆகையால் தான் நம் முன்னோர்கள் பாதங்களை சுத்தம் செய்யும் பொழுது கூட தண்ணீர் எல்லா பக்கமும் படும் படி சுத்தம் செய்ய வேண்டும் இல்லை எனில் தண்ணீர் படாத இடத்தின் வழியாக சனீஸ்வரர் நம்மை ஆட்கொள்வார் என்று சொல்வார்கள். ஆகையால் தினமும் நாம் காலையில் கண்விழித்த உடன் நம்முடைய பாதத்தை நாமே சிறிது நேரம் பிடித்து விட்டு தொட்டு கண்களில் ஒற்றிக் கொள்வது அவருடைய அனுகிரகத்தை அனுதினமும் பெறுவதற்கு சமம்.

- Advertisement -

இவை அனைத்திலும் விட முக்கியமானது பெண்கள் காலில் கொலுசு, மெட்டி போன்றவை அணிய வேண்டும். பாதம் எப்படி சனி பகவானுக்குரியதாக சொல்லப்படுகிறதோ, அதே போல் வெள்ளியானது சுக்கிர பகவானுக்கு உரியதாகவும் சொல்லப்படுகிறது. சனி சுக்கிரன் இரண்டும் ஒன்று சேரும் போது அந்த இடத்தில் பண வரவு செல்வ வளம் அதிகரிக்கும் என்பது நியதி. ஆகையால் தான் அந்த காலம் முதல் பெண்கள் கட்டாயம் காலில் கொலுசு அணிவதும், திருமணமானவர்கள் எனில் மெட்டி அணிய வேண்டும் என்று சொல்லி வந்தார்கள். ஆண்களும் காலில் மெட்டி அணியும் வழக்கமும் உண்டு. ஆண்கள் வாய்ப்பு இருந்தால் மெட்டி அணிந்து கொள்ளலாம்.

சனீஸ்வரன் நம்முடைய ஜாதகத்தில் வரும் பொழுது நமக்கு துன்பத்தை மட்டும் தருவார் என்பது பொதுவான கருத்தாக உள்ளது. ஆனால் நம்முடைய கர்ம வினைகளுக்கான பலன்களை தான் அவர் தருகிறாரே அன்றி நம்மை துன்பப்படுத்துவதற்கு இல்லை. கொடுக்க நினைத்தால் சனீஸ்வரர் போல கொடுக்க வேறு தெய்வம் இல்லை என்ற பழமொழிக்கு ஏற்ப நாம் நம்முடைய கர்ம வினைகளை குறைத்துக் கொண்டு நியாய தர்ம வாழ்க்கையை வாழும் பொழுது நிச்சயம் இவரினால் எந்த பாதிப்பும் ஏற்படாது.

இதையும் படிக்கலாமே: மனதில் நினைத்தபடி பணம் சம்பாதிக்க ஆரம்பிக்க வேண்டுமா? நிறைய வருமானம் வருவதற்கு எப்போதும் பர்ஸில் இந்த ஒரு பொருளை வைத்துக் கொள்ளுங்கள்.

அத்துடன் இந்த சிறு சிறு பரிகாரங்களையும் செய்யும் பொழுது அவரின் தாக்கங்கள் குறைந்து நல்லதொரு வாழ்க்கையை வளமாக வாழலாம் என்ற இந்த தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -