- Advertisement -

8 நாள் இந்த தீபத்தை ஏற்றினாலே போதும். சனி பகவானால் உண்டாகும் கஷ்டம், எட்டாத தூரத்திற்கு ஓடி விடும்.

சனிபகவான் என்றாலே நம்முடைய மனதிற்குள் பக்தி வருகின்றதோ இல்லையோ, பயம் வந்துவிடும். நேர்மையாக இருப்பவர்கள் சனிபகவானை பார்த்து பயப்பட வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. சனி பகவானால் ஏற்படக்கூடிய தோஷத்திற்கு, ஒரு சுலபமான தீப வழிபாட்டைப் பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சனி பகவானுக்கு சனீஸ்வரன் என்ற பட்டத்தை வழங்கியவர் அந்த ஈசன் என்பது நமக்கு தெரிந்திருக்கும். ஈசனுக்கு உரிய இந்தப் பூவை தீபத்தின் அருகில் வைத்து, சனி பகவானுக்கு தீபம் ஏற்றினால் போதும். அந்த சனிபகவான் மனம் மகிழ்ந்து விடுவார் என்று சொல்லப்பட்டுள்ளது. அந்த பூ, எந்த பூ? அந்த தீபத்தை எப்படி ஏற்ற வேண்டும் என்று தெரிந்து கொள்வோமா?

சனி பகவானால் உங்களுடைய ஜாதக கட்டத்தில் பிரச்சனை இருந்தாலும் சரி, ஏழரை சனியால் பாதிப்புகள் இருந்தாலும் சரி, நீங்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம். இதோடு சேர்த்து வாழ்நாள் முழுவதும் சனிபகவானின் ஆசீர்வாதத்தை பெற, வாழ்க்கையில் ஒருவருக்கு தீராத கஷ்டங்கள், துயரங்கள் வராமல் இருக்க, வடித்த சாதத்தில், கொஞ்சமாக சுத்தமான தயிரை ஊற்றி கலந்து, காகத்திற்கு தினசரி சாப்பிட உணவு வைக்க வேண்டும். அந்த தயிர் தாளித்த தயிர் ஆக இருக்கக் கூடாது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

- Advertisement -

சரி, சனிபகவானை மனம் குளிரச் செய்யும் அந்த தீப வழிபாட்டைப் பற்றி பார்த்துவிடுவோமா? ஈசனுக்கு உரிய ஒரு பூ ‘சங்குப்பூ’. சனிபகவானுக்கு சனீஸ்வரன் என்ற அந்தஸ்தை கொடுத்தவர் ஈசன். சனி பகவானின் மனதை நாம் சந்தோஷப்படுத்த வேண்டும் என்றால் ஈஸ்வரனின் ஆசீர்வாதத்தை முதலில் பெறவேண்டும்.

ஆகையால், சனீஸ்வரனால் ஏற்படக்கூடிய கஷ்டங்களில் இருந்து நாம் விடுபட, வாரம்தோறும் வரும் சனிக்கிழமைகளில் 2 மண் அகல் தீபங்களில் நல்லெண்ணெய் ஊற்றி, திரி போட்டு, அந்த நல்லெண்ணெயில் ஒவ்வொரு சங்கு பூவையும் போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இதோடு சேர்த்து சனிபகவானுக்கு சங்கு பூவால் அர்ச்சனை செய்யலாம்.

- Advertisement -

தொடர்ந்து எட்டு வாரம் சனிக்கிழமைகளில் இந்த தீபத்தை நீங்கள் கோவிலுக்கு சென்று சனி பகவானுக்கு முன்பாக ஏற்றலாம். கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய முடியாதவர்கள், உங்களுடைய வீட்டிலேயே சனி பகவானை நினைத்து, அந்த ஈசனை நினைத்தும் இந்த தீபத்தினை ஏற்றலாம். வீட்டில் இந்த தீபத்தை ஏற்றேவதனால் எந்த ஒரு தவறொன்றும் கிடையாது. 8 வாரங்கள் இந்த தீபத்தை, ஏற்றிக் கொண்டே இருக்கும் போது உங்களால் இயன்ற உதவியை ஊனமுற்றவர்களுக்கு செய்து வர வேண்டும்.

சங்குப்பூவில் பல வண்ணங்கள் உள்ளது‌. இந்த பரிகாரத்திற்கு நீங்கள் நீல நிற சங்கு பூவை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த பரிகார தீபத்தை ஏற்றுவதற்கு முன்பு காலையில் நீங்கள், கட்டாயமாக தலை ஸ்னானம் செய்வீர்கள் அல்லவா? நீங்கள் குளிப்பதற்காக பயன்படுத்தும் அந்த தண்ணீரில் ஐந்து மிளகுகளை போட்டு அதன் பின்பு தலைக்கு குளித்துவிட்டு, இந்த வழிபாட்டைச் செய்வது மேலும் சிறப்பினை தேடித்தரும் என்று சொல்லப்பட்டுள்ளது.

சனிபகவானால் உங்களுக்கு நிறைய கஷ்டங்கள் வரக்கூடிய சூழ்நிலைகளிலும், அந்தக் கஷ்டங்களை சமாளிப்பதற்கான மனப்பக்குவத்தையும், அந்த சனி பகவானே தரும் அளவிற்கு சக்தி வாய்ந்த தீபவழிபாடு தான் இது. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையோடு செய்து பாருங்கள் நிச்சயமாக பலன் இருக்கும். சனி பகவான், நல்லதை கொடுத்தாலும் யாராலும் தடுக்க முடியாது. கெடுதலை கொடுத்தாலும் யாராலும் தடுக்க முடியாது. அந்த ஈசனை மனதார வேண்டிக்கொண்டு, சனி பகவானின் ஆசீர்வாதத்தை பெற்று இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -