
ஏழரை சனிக்காலம் ஒரு மனிதனுக்கு துவங்கி விட்டாலே, அவனுக்கு வாழ்க்கையில் கஷ்ட காலம் துவங்கிவிட்டது என்று, அவன் மனதிலேயே ஆழ பதிந்து விடுகிறது. நடக்கும் நல்லது கூட கெடுதலாக மாறுவதற்கு இதுதான் காரணம். சனிபகவான் எப்போதுமே கெடுதலை மட்டும் கொடுக்க மாட்டார். சனிபகவான போல கொட்டிக் கொடுக்கும் கிரகம் வேறு எதுவுமே கிடையாது.
அப்படி இருக்க இந்த ஏழரை சனி காலத்தில் மட்டும் எதற்காக எல்லோரும் பயப்படுகின்றோம். நாம் செய்த பாவ கணக்குகளுக்கான தண்டனை கொடுக்கக்கூடிய காலம் நமக்கு வந்துவிட்டது. அதனால் தான் எல்லோர் மனதிலும் ஒரு பயம் இருக்கும். வாழும்போது நேர்மையாக நல்லவர்களாக வாழ்ந்து விட்டால் போதும்.
நல்ல நேரம் நடக்கும் போது கூட நல்ல பாதையில் நடந்தால், கெட்ட நேரம் வரும்போது கடவுள் நமக்கு பெருசாக எந்த கெடுதலையும் கொடுக்க மாட்டான். அந்த வகையில் அனைவருக்கும் நல்லதையே செய்யுங்கள், நல்லதையே நினையுங்கள். நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவில் பயணம் செய்வோம்.
பாதச்சனி, ஜென்ம சனி, கண்டக சனி, அஷ்டமத்து சனி அல்லது உங்களுக்கு இப்போதுதான் ஏழரை சனி துவங்கப் போகிறது என்றால், இந்த மார்கழி மாதம் வரும் ஒரு சனிக்கிழமையில் இந்த பரிகாரத்தை செய்து விடுங்கள். சனி பகவானால் உங்கள் வாழ்வில் மிகப் பெரிய அளவில் எந்த ஒரு பாதிப்பும் வராமல், அந்த இறைவன் பார்த்துக் கொள்வான். ஆண் பெண் யார் வேண்டும் என்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.
நவகிரக சன்னிதானம் இருக்கக்கூடிய கோவிலாக பார்த்து தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். ஒரு இரும்பு சட்டி வாங்கி கொள்ளுங்கள். அந்த இரும்பு சட்டி நிரம்ப ஊற்றுவதற்கு சுத்தமான நல்லெண்ணெய் தேவை. சதுர வடிவில் இருக்கும் காட்டன் கருப்பு துணி, அதில் வைப்பதற்கு 2 ஸ்பூன் கருப்பு எள்ளு, இவ்வளவுதான் மொத்தமாக தேவைப்படக்கூடிய பொருட்கள். இதையெல்லாம் எடுத்துக்கொண்டு, வீட்டின் அருகில் இருக்கும் கோவிலுக்கு செல்லுங்கள்.
நவகிரக சன்னிதானத்திற்கு முன்பு அமர்ந்து கொள்ளுங்கள். இரும்பு சட்டியில் எண்ணெயை ஊற்றி விடுங்கள். அதில் உங்களுடைய முகத்தை நன்றாக பார்க்க வேண்டும். ஒரு நிமிடம் நல்லெண்ணெயில் தெரியும் உங்கள் முகத்தை பார்த்துவிட்டு, கருப்பு துணியில், கருப்பு எள்ளு வைத்து, முடிச்சாக கட்டி இந்த எண்ணெயில் போட்டு தீபம் ஏற்றி நவகிரக சண்டைதானத்தில் வைத்து விடுங்கள்.
பிறகு நவகிரகத்தை 9 முறை வலம் வந்து, அதன் பிறகு அந்த கோவிலில் இருக்கும் விநாயகரோ அல்லது ஹனுமனையோ ஒரு முறை வலம் வந்து நமஸ்காரம் செய்து கொண்டு, அப்படியே திரும்பி பார்க்காமல் வீட்டிற்கு வந்து விடவும். இதனுடன் சனி பகவானுக்கு வெற்றிலை, பாக்கு, பூ, பழம் முடிந்தால் கருப்பு நிற வஸ்திரம் தானம் செய்யலாம்.
இந்த பொருட்களை எல்லாம் வாங்கிக் கொடுத்து அர்ச்சனை செய்த பிறகு மேலே சொன்ன இரும்பு சட்டி பரிகாரத்தை செய்துவிட்டு, வீடு திரும்பவும். கோவிலிருந்து திரும்ப வரும்போது இரும்பு சட்டி, மீதம் எண்ணெய் விளக்குத்திரி, எள்ளு, இந்த கருப்பு துணி சுவாமிக்கு உடைத்த தேங்காய் பழம் எதுவுமே கையில் எடுத்து வரக்கூடாது. எல்லாவற்றையும் கோவிலிலேயே விட்டு வந்து விட வேண்டும்.
இதையும் படிக்கலாமே: சகல ஐஸ்வர்யம் பெருக ஏற்ற வேண்டிய தீபம்
சனிபகவானால், சனி பகவான் சன்னதியில் கொடுத்த திருநீரை மட்டும், நெற்றியில் இட்டு வாருங்கள். இவ்வளவுதான். பரிகாரம். இந்த எளிமையான பரிகாரத்தை எவர் ஒருவர் மார்கழி மாதம் வரும் சனிக்கிழமையில் செய்கிறீர்களோ, அவர்களுடைய வாழ்வில் சனி பகவான் நல்லதை மட்டுமே செய்வார். மார்கழி மாதம் சனிக்கிழமை என்று மட்டும் அல்ல. வேறு எந்த சனிக்கிழமையும் இந்த பரிகாரம் செய்தால் சிறப்பு. இருந்தாலும் மார்கழி மாத சனிக்கிழமைக்கு கூடுதல் சிறப்பு என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவு நிறைவு செய்து கொள்வோம்.