ஒருவருடைய வாழ்க்கையில் தேவைப்படக்கூடிய அனைத்து விஷயங்களும் கிடைத்துவிட்டால் அதுதான் ஐஸ்வர்யம் என்று கூறப்படுகிறது. இந்த ஐஸ்வர்யத்தை பெருக்கிக் கொள்ள வேண்டும், தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் பலரும் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்கிறார்கள். அப்படி மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்வதோடு மகாலட்சுமி தாயாருக்கு பிடித்தமான செயல்களையும் செய்யும்பொழுது விரைவிலேயே அந்த பலன் நமக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் மகாலட்சுமிக்குரிய தீபத்தை எப்படி ஏற்றுவது என்றுதான் பார்க்கப் போகிறோம்.
சகல ஐஸ்வர்யம் பெருக ஏற்ற வேண்டிய தீபம்
மார்கழி மாதம் என்றாலே அது பெருமாளுக்கு உரிய மாதம் என்று நம் அனைவருக்குமே தெரியும். பெருமாளுக்குரிய மாதம் என்றால் பெருமானின் மார்பில் வீற்றிருக்கக் கூடிய மகாலட்சுமிக்கு உகந்த மாதமாகவும் கருதப்படுகிறது. அப்படிப்பட்ட மார்கழி மாதத்தில் மகாலட்சுமிக்குரிய கிழமையான வெள்ளிக்கிழமை அன்று நாம் மகாலட்சுமி தாயாரை நினைத்து இந்த ஒரு தீபத்தை ஏற்றி வழிபட்டோம் என்றால் நம் வாழ்வில் இதுவரை இருந்து வந்த கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி ஐஸ்வர்யம் பெருக ஆரம்பிக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த தீபத்தை நாம் நம்முடைய வீட்டு சமையலறையில் ஏற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. பூஜை அறை எந்த அளவிற்கு சுத்தமாக இருக்கிறதோ? அந்த அளவிற்கு சமையலறையும் சுத்தமாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் மகாலட்சுமி வீட்டிற்குள் வருவாள் என்று நம்முடைய முன்னோர்கள் கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். பூஜை அறைக்கு கொடுக்கக்கூடிய முக்கியத்துவம் அனைத்துமே நம் சமையலறைக்கும் கொடுக்க வேண்டும் என்பது முற்றிலும் உண்மை. அந்த வகையில் இந்த தீபத்தை நம் சமையல் அறையில் ஏற்றும்பொழுது மகாலட்சுமி தாயாரின் அருள் என்பது நமக்கு பரிபூரணமாக இருக்கும். சரி இப்பொழுது இந்த தீபத்தை எப்படி ஏற்றுவது என்று பார்ப்போம்.
மார்கழி மாதம் வெள்ளிக்கிழமை அன்று பிரம்ம முகூர்த்த நேரத்தில் இந்த தீபத்தை நாம் ஏற்ற வேண்டும். முதல் நாளே சமையலறையை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். காலையில் எழுந்து சமையலறையில் ஒரு பெரிய அகல் விளக்கை வைத்து அது நிறைய கல் உப்பை பரப்பிக் கொள்ளுங்கள். அதற்கு மேல் ஒரு வெற்றிலை ஒரு கொட்டை பாக்கை வைக்க வேண்டும். பிறகு ஒரு ரூபாய் நாணயத்தையும் வைக்க வேண்டும். ஒரு ரூபாய் நாணயத்திற்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்துக் கொள்ளுங்கள்.
அந்த அகல் விளக்கில் பச்சரிசி மஞ்சள் நெய் இவை மூன்றையும் கலந்து அட்சதையாக தயார் செய்து அதற்குள் வைக்க வேண்டும். பிறகு வாசனை மிகுந்த மலர்களையும் அதில் வைத்து கொள்ளுங்கள். அதற்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்து நெய் ஊற்றி சிவப்பு நிற திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபம் கிழக்கு பார்த்தவாறு இருப்பது மிகவும் சிறப்பு.
இந்த முறையில் நாம் தீபம் ஏற்றி வைத்து மகாலட்சுமி தாயாரை முழு மழுமனதோடு வழிபாடு செய்யும் பொழுது மகாலட்சுமி தாயாரின் அருள் என்பது நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். அதன் மூலம் நம் வாழ்வில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். செல்வ வளம் உயரும், அனைத்து விதமான ஐஸ்வர்யமும் கிடைக்கப் பெறுவோம்.
இதையும் படிக்கலாமே:ஆயிரம் யாகம் செய்த பலன் கிடைக்க
முழு மனதோடு மகாலட்சுமி தாயாரை இந்த முறையில் ஒரே ஒரு தடவை மட்டும் தீபம் ஏற்றி வழிபாடு செய்து பாருங்கள், உங்கள் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய மாற்றம் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.