
முழு முதற் கடவுளாக திகழக்கூடிய விநாயகர் பெருமானுக்கு உகந்த திதியாக கருதப்படுவது தான் சதுர்த்தி திதி. இதில் வளர்பிறை தேய்பிறை என்று இரண்டு சதுர்த்திகள் மாதமாதம் வரும். ஒவ்வொரு மாதத்திற்கு ஏற்றார் போல் ஒவ்வொரு விதமான பலன்கள் உண்டாகும். தேய்பிறையில் வரக்கூடிய சதுர்த்தியை தான் நாம் சங்கடஹர சதுர்த்தி என்று கூறுகிறோம். எப்படி ஆவணி மாதத்தில் வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தி மிகவும் விசேஷமான ஒன்றோ அதேபோல் தான் மாசி மாதத்தில் வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தி விசேஷமான ஒன்றாக திகழ்வுகிறது.
மாதா மாதம் சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்து விநாயக பெருமானை வழிபாடு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் மாசி அல்லது ஆவணி மாதத்தில் வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தி நாள் அன்று விரதத்தை ஆரம்பிக்க விநாயகப் பெருமானின் அருளால் விரதம் எந்தவித தடையும் இல்லாமல் பூர்த்தியடையும் என்று கூறப்படுகிறது. அவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த மாசி சங்கடஹர சதுர்த்தி நாள் அன்று நம்முடைய வேண்டுதல் நிறைவேறுவதற்கு செய்ய வேண்டிய வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவிலும் நாம் பார்க்க போகிறோம்.
பொதுவாக சங்கடஹர சதுர்த்தி நாளன்று விரதம் இருந்து வழிபாடு செய்பவர்களும் இருக்கிறார்கள். மாலை நேரத்தில் விநாயகர் ஆலயத்திற்கு சென்று விநாயகப் பெருமானுக்கு நடக்கக்கூடிய அபிஷேகங்களில் கலந்துகொண்டு வழிபாடு செய்பவர்களும் இருக்கிறார்கள். எப்படி விரதம் இருந்து வழிபாடு செய்பவர்களாக இருந்தாலும் மாலை 6 மணிக்கு மேல் விநாயகப் பெருமானுக்கு வீட்டில் இந்த ஒரு தீபத்தை ஏற்றி வேண்டுதலை முன் வைத்தாலே போதும் விநாயகர் பெருமானின் அருளால் அந்த வேண்டுதல் நிறைவேறும்.
இதற்கு முதலில் இரண்டு வெற்றிலைகள் வேண்டும். இரண்டும் கிழியாத நல்ல வெற்றிலையாக இருக்க வேண்டும். ஒரு வெற்றிலையில் சிறிது மஞ்சள் தூள், சிறிது ஜவ்வாது, சிறிது பச்சை கற்பூரம் கலந்து அதனுடன் பன்னீர் ஊற்றி நன்றாக பிணைந்து மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த பிள்ளையாருக்கு ஒரே ஒரு அருகம்புல்லை மட்டும் ஆவது சமர்ப்பணம் செய்ய வேண்டும். அதேபோல் ஏதாவது ஒரு வாசனை மிகுந்த மலரையும் சமர்ப்பணம் செய்ய வேண்டும்.
பிறகு அந்த மஞ்சள் பிள்ளையாருக்கு முன்பாக ஒரு வெற்றிலையை வைத்து அதன் அடிப்பகுதி என்று கூறக்கூடிய நுனிப்பகுதியில் சந்தனத்தில் பன்னீரை ஊற்றி நன்றாக குலைத்து நம்முடைய மோதிர விரலை பயன்படுத்தி ஸ்வஸ்திக் சின்னத்தை வரைந்து கொள்ள வேண்டும். இலை சிறியதாக இருக்கிறது என்னும் பட்சத்தில் அரச இலை குச்சி, எருக்கு இலை குச்சி, வில்வ இலை குச்சி, மாதுளை இலை குச்சி போன்ற ஏதாவது ஒரு குச்சியை பயன்படுத்தி ஸ்வஸ்திக் சின்னத்தை வரைந்து கொள்ளலாம். பிறகு அந்த வெற்றிலையின் மேல் பகுதியான காம்பு பகுதிக்கு பக்கத்தில் ஒரு அகல் விளக்கை வைத்து அதில் நெய் அல்லது நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.
பிறகு விநாயக பெருமானுக்கு பிடித்தமான ஏதாவது ஒரு பொருளை நெய்வேத்தியமாக வைத்துவிட்டு அந்த தீபத்தை பார்த்தவாறு விநாயகப் பெருமானிடம் நம்முடைய வேண்டுதலை முன்வைக்க வேண்டும். இயன்றவர்கள் “ஓம் கம் கணபதியே நமஹ” என்னும் மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்யலாம். இந்த முறையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வேண்டுதலை முன் வைப்பவர்களுக்கு விநாயகப் பெருமானின் அருளால் அந்த வேண்டுதல் விரைவிலேயே நிறைவேறும்.
இதையும் படிக்கலாமே:காரிய தடைகள் விலக சங்கடஹர சதுர்த்தி மந்திரம்
சக்தி வாய்ந்த சங்கடஹர சதுர்த்தியில் ஒன்றான மாசி மாத சங்கடஹர சதுர்த்தி நாள் அன்று விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதோடு விநாயகர் பெருமாளுக்கு உரிய இந்த ஒரு தீபத்தை ஏற்றி வைத்து வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய வேண்டுதல் நிறைவேறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.