- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகாரிய தடைகள் விலக சங்கடஹர சதுர்த்தி மந்திரம்

காரிய தடைகள் விலக சங்கடஹர சதுர்த்தி மந்திரம்

- Advertisement -

இன்று 16-2-2025 ஞாயிற்றுக்கிழமை சங்கடஹர சதுர்த்தி திதி. இந்த நாளில் விநாயகர் வழிபாட்டை மேற்கொண்டால், உங்கள் சங்கடங்கள் பட்டென விலகும். அதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. சங்கடஹர சதுர்த்தி வழிபாடு என்றால் மாலை நேரம் செய்வது தான் சிறப்பு. இன்று மாலை உங்கள் வீட்டின் அருகில் விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை நடந்தால் அந்த பூஜையில் கலந்து கொண்டு, விநாயகருக்கு தேவையான அபிஷேக பொருட்களை வாங்கி கொடுத்து, கோவிலில் அமர்ந்தும் இந்த மந்திரத்தை சொல்லலாம்.

கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் இருக்கும் விநாயகருக்கு பூஜை செய்தும், இந்த மந்திரத்தை சொல்லலாம். எதுவுமே செய்யவில்லை. பூஜையே செய்ய முடியாது என்ற சூழ்நிலையில் இருந்தால் கூட நீங்கள், இருந்த இடத்திலிருந்து இந்த மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள். சங்கடங்கள் பட்டென உங்களை விட்டு விலகி விடும்.

- Advertisement -

எந்த சங்கடமாக இருந்தாலும் சரி கவலைப்படாமல், உங்கள் தந்தையிடம் பிரச்சினையை சொல்லுவது போல, விநாயகப் பெருமானிடம் பிரச்சனையை சொல்லி பிரார்த்தனையை செய்து கொள்ளுங்கள். நம்பிக்கையுடன் விநாயகர் மந்திரத்தை சொல்லுங்கள் நல்லது மட்டுமே நடக்கும் என்ற தகவலுடன் இன்றைய பதிவிற்குள் பயணம் செய்வோம்.

இன்று மாலை 6:30 மணிக்கு மேல் இந்த வழிபாட்டை துவங்கலாம். வீட்டில் இந்த வழிபாட்டை செய்வதாக இருந்தால் விநாயகருக்கு 2 அருகம்புல் போட்டு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, உங்களால் முடிந்த ஏதாவது ஒரு இனிப்பு பிரசாதம் செய்து வைத்தோ, கடையிலிருந்து வாங்கி வைத்தோ அல்லது 2 வாழைப்பழம் வைத்தோ, வழிபாட்டை துவங்கி விடுங்கள். சங்கடங்கள் பட்டென விலக சொல்ல வேண்டிய விநாயகர் மந்திரம் இதோ உங்களுக்காக.

- Advertisement -

விநாயகர் மந்திரம்

ஓம் கம் லம்போதராய ஹும் பட் ஸ்வாஹா !

பிரச்சனைகளை மனம் உருக ஆனைமுகத்தானிடம் கொட்டி தீர்த்து விடுங்கள். மனபாரம் அப்படியே குறைந்துவிடும். பிறகு உங்கள் வேண்டுதல் நிறைவேற, சங்கடங்கள் தீர விநாயகரை நினைத்து இந்த மந்திரத்தை சொல்லி கற்பூர ஆரத்தி காண்பித்து இந்த பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். விநாயகருக்கு வைத்த பிரசாதத்தை வீட்டில் உள்ளவர்கள் பகிர்ந்து உண்ண வேண்டும். அதற்கு முன்பு யாரேனும் ஒருவருக்காவது அந்த பிரசாதத்தை தானம் கொடுக்க வேண்டும். இவ்வளவுதான் வழிபாடு‌.

இதையும் படிக்கலாமே: தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்க

உங்களால் முடியும் என்றால் பக்கத்தில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு 11 கொழுக்கட்டை பிடித்துக் கொண்டு போய் நெய்வேத்தியம் செய்து அர்ச்சனை செய்து அந்த கொழுக்கட்டையை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தானம் கொடுத்து பிறகு அந்த கோவிலில் அமர்ந்து இந்த மந்திரத்தை சொல்லி பாருங்கள். இன்னும் நல்ல பலனை அந்த விநாயகப் பெருமான், உங்கள் கையிலே கொடுத்து வீட்டிற்கு அனுப்புவார் என்று கூட சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இத்தனை அற்புதம் வாய்ந்த வழிபாடு விநாயக பக்தர்களுக்கு சமர்ப்பணம். நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் அடையலாம்.

சற்று முன்