
தமிழர்கள் ஒவ்வொருவர்களுடைய வாழ்க்கையிலும் தை மாதம் என்பது ஒரு சிறந்த மாற்றத்தை தரக்கூடிய மாதமாகவே திகழ்கிறது. அந்த வகையில் படிக்கின்ற பிள்ளைகள் தங்களுடைய படிப்பில் சிறந்து விளங்குவதற்கும் கல்வி அறிவை சிறப்பாக பெறுவதற்கும் தை மாதம் உதவி செய்யும் என்றே கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த தை மாதத்தில் சரஸ்வதி தேவியை எந்த முறையில் வழிபாடு செய்தால் படிக்கும் பிள்ளைகள் சிறப்பாக படிப்பார்கள் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
இன்றைய காலத்தில் இருக்கக்கூடிய பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும், உயர்ந்த அந்தஸ்தை அடைய வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறார்கள். அதனால் தான் பலரும் தங்களுடைய கஷ்டத்தை பாராமல் குழந்தைகளை சிறந்த பள்ளியில் சேர்த்து, டியூஷன் அனுப்புவது, ஸ்பெஷல் கிளாஸ் அனுப்புவது, கோச்சிங் கிளாஸ் அனுப்புவது என்று பல விதங்களில் தங்களுடைய குழந்தைகளின் எதிர்காலத்திற்காக கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். அப்படி கஷ்டப்பட்டும் ஒரு சில குழந்தைகளால் தங்களுடைய படிப்பில் சிறந்து விளங்க முடியாத சூழ்நிலை என்பது இருக்கும். அந்த நிலையில் பெற்றோர்கள் மிகவும் மன வருத்தத்திற்கு ஆளாவார்கள். இந்த மன வருத்தத்தை நீக்குவதற்கு தை மாதத்தில் சரஸ்வதி தேவியை வழிபாடு செய்யும் முறையைப் பற்றிதான் இப்பொழுது பார்க்க போகிறோம்.
கல்விக்கு அதிபதியாக திகழக்கூடியவர் சரஸ்வதி தேவி என்று நம் அனைவருக்குமே தெரியும். படிக்கும் பிள்ளைகள் கண்டிப்பாக முறையில் சரஸ்வதி தேவியை வழிபாடு செய்ய வேண்டும். சரஸ்வதி தேவியின் அருள் ஒரு குழந்தைக்கு கிடைத்துவிட்டால் அந்த குழந்தை கல்வி அறிவில் சிறந்து விளங்குவார் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சரஸ்வதி தேவியின் அருளை பெறுவதற்கு படிக்கும் பிள்ளைகள் செய்ய வேண்டிய ஒரு எளிமையான வழிபாட்டு முறையை தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.
இந்த வழிபாட்டை படிக்கும் பிள்ளைகள் செய்யலாம் அல்லது அந்த பிள்ளைகளுக்கு பதிலாக அவர்களுடைய பெற்றோர்கள் செய்யலாம். தை மாதம் முழுவதும் மாலை நேரத்தில் ஆறு மணிக்கு மேல் படிக்கும் பிள்ளைகள் சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் ஒரு டம்ளர் நிறைய சுத்தமான எச்சில் படாத தண்ணீரை பிடித்து வைக்க வேண்டும். அந்த தண்ணீரை பார்த்தவாறு சரஸ்வதி தேவியின் இந்த மந்திரத்தை 11 முறை கூற வேண்டும். அப்படி கூறி முடித்த பிறகு படிக்கச் செல்ல வேண்டும். அரை மணி நேரம் கழித்து அந்த தண்ணீரை எடுத்து அருந்தி விட வேண்டும்.
ஒருவேளை படிக்கும் பிள்ளைகளால் இந்த வழிபாட்டை செய்யவில்லை என்னும் பட்சத்தில் அவர்களின் பெற்றோர்கள் செய்யலாம். செய்து முடித்துவிட்டு அந்த தண்ணீரை குழந்தைகளுக்கு தரலாம் அல்லது அவர்களும் அருந்தலாம். முழுமனதோடு இந்த மந்திரத்தை கூறி சரஸ்வதி தேவியை வழிபாடு செய்யும்பொழுது சரஸ்வதி தேவியின் அருள் படிக்கும் பிள்ளைகளுக்கு கண்டிப்பான முறையில் கிடைக்கும்.
“ஓம் சரஸ்வதி தேவியே வசி வசி”
இதையும் படிக்கலாமே:பணம் தரும் தை வெள்ளி பரிகாரம்
சரஸ்வதி தேவியின் பரிபூரணமான அருளை பெற்று குழந்தைகள் சிறப்பாக படிப்பதற்கு முழு மனதோடு இந்த மந்திரத்தை கூறி தினமும் சரஸ்வதி தேவியை வழிபாடு செய்தால் போதும். குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.