இன்று தை மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை. இந்த நாளில் உங்களுடைய பண கஷ்டத்தை தீர்க்க வந்திருக்கும் ஒரு சக்தி வாய்ந்த பரிகாரம் இது. அந்த அம்பாளே வந்து உங்களிடம் இந்த வழிபாட்டை சொன்னதாக நினைத்துக் கொண்டு, ஒவ்வொருவரும் இன்று இரவு தூங்க செல்வதற்கு முன்பு இந்த 3 பொருளை கொண்டு போய் காமாட்சியம்மன் விளக்குக்கு அடியில் வைத்து விடுங்கள் போதும். வீட்டில் இருக்கும் பெண்களும் நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்தால் உங்கள் குடும்பத்தில் இருக்கும் கஷ்டங்கள் தீரும் என்பது அந்த மகாலட்சுமியின் வாக்கு.
காமாட்சி அம்மன் விளக்கு பரிகாரம்
ஒரு குடும்பத்திற்கு குலதெய்வம் எது என்று தெரியாமல் இருந்தால் கூட பரவாயில்லை. அந்த குடும்பம், இந்த காமாட்சியம்மனை குலதெய்வமாக ஏற்று வழிபாடு செய்யலாம் என்பது பெரியோர்களின் கூற்று. அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த தாய் தான் காமாட்சி அம்மன். ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் காமாட்சியம்மன் விளக்கு இருக்கும். வெள்ளியில் இருந்தாலும் சரி, பித்தளையில் இருந்தாலும் சரி, எந்த விளக்குக்கு அடியிலும் வேண்டும் என்றாலும் இந்த 3 பொருட்களை இன்று நீங்கள் வைக்கலாம்.
கொஞ்சம் பழைய நாணயமாக இருந்தால் ரொம்ப ரொம்ப நல்லது. ஒரு ரூபாய் நாணயம் அல்லது ஐந்து ரூபாய் நாணயம் எது இருந்தாலும் சரிதான். உங்கள் வீட்டு பூஜை அறையில் ஒரு தட்டின் மேலே அல்லது மனப்பலகையின் மேலே தான் காமாட்சியம்மன் விளக்கு இருக்கும். அந்த காமாட்சி அம்மன் விளக்குக்கு அடியில், அந்தத் தட்டிற்கு மேலே ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து, அந்த நாணயத்திற்கு மேலே 1 ஏலக்காய், ஒரு துண்டு பச்சை கற்பூரம் வைக்க வேண்டும் அவ்வளவுதான்.
அந்த நாணயத்தில் இருக்கும் சிங்கம் மேலே பார்த்தபடி இருக்க வேண்டும். அவ்வளவுதான். இதுபோல ஒரு ரூபாய் நாணயத்தை தயார் செய்து வைத்து, அதன் மேலே காமாட்சி அம்மன் விளக்கை வைத்து விடுங்கள். வாரத்தில் ஒரு முறை பூஜை பொருட்கள் சுத்தம் செய்யும் போது விளக்குக்கு அடியில் இருக்கும் பொருட்களை எடுத்து தனியாக வைத்துவிட்டு, விளக்கை கழுவி சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து, மீண்டும் அதேப்போல பூஜையறையில் வைக்கும் போது காமாட்சியம்மன் விளக்குக்கு அடியில், ஒரு ரூபாய் நாணயம், ஏலக்காய், பச்சை கற்பூரம் இந்த மூன்று பொருட்களையும் வைத்து அலங்கரித்து நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி விட வேண்டும்.
இதுபோல காமாட்சி அம்மன் விளக்குக்கு அடியில் இந்த 3 பொருட்களை வைத்து, தீபம் ஏற்றும் போது உங்கள் குடும்பத்தில் இருக்கும் வறுமை முழுமையாக நீங்கும். எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் அந்த கடனை சீக்கிரம் திருப்பி தருவதற்கு வருமானம் ஆனது பெருகும் என்பது நம்பிக்கை.
இன்று இரவு தூங்க செல்வதற்கு முன்பு, இந்த பொருட்களை காமாட்சி அம்மன் விளக்குக்கு அடியில் வைத்து விடுங்கள். பூஜையறையில் விளக்கு ஏற்றும் போது காமாட்சியம்மனை மனம் உருகி வேண்டி, பிறகு விளக்கு ஏற்றி வழிபாட்டை மேற்கொள்ளவும். தை மாதம் முழுவதும் தினமும் விளக்கேற்றி வழிபாடு செய்யலாம். இந்த தை மாதம் முடிவதற்குள், நிச்சயம் உங்களுடைய பணக்கஷ்டம் தீர்ந்திருக்கும்.
அதற்கு உண்டான வழியை இந்த பிரபஞ்சம் காட்டிக் கொடுத்திருக்கும். நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்தால். இடையே ஏலக்காய் ஒரு ரூபாயை மாற்ற வேண்டிய அவசியம் இருக்காது. பச்சை கற்பூரம் கரைந்து விட்டால், மீண்டும் புதுசாக ஒரு துண்டு பச்சை கற்பூரத்தை வைக்கலாம். தை மாதம் முடிந்தவுடன் அந்த ஒரு ரூபாய் நாணயத்தை கொண்டு போய் வீட்டு பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவில் உண்டியலில் செலுத்துங்கள்.
இதையும் படிக்கலாமே: இன்று மாலை விநாயகர் கோவிலில் அமர்ந்து இந்த 1 வார்த்தையை சொன்னால், அடுத்த 1 மணி நேரத்தில், நீங்கள் நினைத்து பார்க்காத நல்லது உங்கள் வாழ்வில் நடக்கும்.
இந்த பச்சை கற்பூரத்தையும் ஏலக்காயையும் நன்றாக தூள் செய்து வீட்டிற்கு உள்ளே மண் பாங்கான இடத்தில் தூவி விட வேண்டும் இவ்வளவுதான் பரிகாரம். நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த தை மாதம் நிச்சயம் நல்ல காலம் பிறக்கும் இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.