
மொத்தம் 27 நட்சத்திரங்கள் இருக்கின்றன என்று நம் அனைவருக்குமே தெரியும். நமக்கு தெரியாத மற்றும் ஒரு அற்புதமான நட்சத்திரம் தான் அபிஜித் நட்சத்திரம். இந்த நட்சத்திர நேரத்தில் நாம் இறைவனிடம் என்ன வேண்டுதலை முன்வைத்தாலும் அந்த வேண்டுதல் நிறைவேறும் என்ற காரணத்தினால் இது தீயவர்களுக்கு மிகப்பெரிய வரமாக அமைந்துவிடும் என்பதாலும் கிருஷ்ண பகவான் இந்த அஜத் நட்சத்திரத்தை தன்னுடைய மயிலிறகில் ஒழித்து வைத்து விட்டார் என்றும் புராணங்கள் கூறுகின்றன. இவை அனைத்தும் நாம் அறிந்ததே. அப்படிப்பட்ட அபிஜித் நட்சத்திரம் ஒரு குறிப்பிட்ட நேரம் மட்டுமே இருக்கும் அந்த நேரத்தில் பெருமாளுக்கு நாம் இந்த ஒரு பொருளை நெய்வேத்தியமாக வைத்து வழிபாடு செய்ய செல்வ செழிப்புடன் நம்மால் வாழ முடியும். அந்த நெய்வேத்தியம் என்ன என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பெருமாளுக்குரிய திருவோண நட்சத்திரம் வருவதற்கு முன்பாக அபிஜித் நட்சத்திரம் என்பது வரும். அது இந்த மே மாதத்தில் 18ம் தேதி மாலை 6:40 மணியிலிருந்து 7:04 மணி வரை இருக்கிறது. இந்த நேரத்தில் நாம் பெருமாளின் ஆலயத்திற்கு சென்று பெருமாளை வழிபாடு செய்யலாம். அதே சமயம் வீட்டிலேயும் பெருமாள் வழிபாட்டில் ஈடுபடலாம். அப்படி பெருமாள் வழிபாட்டில் ஈடுபடும் பொழுது பெருமாளுக்கு என்று பிரத்தியேகமாக ஒரு நெய்வேத்தியத்தை வைத்து வழிபாடு செய்தோம் என்றால் செல்வ செழிப்பிற்கு எந்தவித குறையும் இருக்காது என்று கூறப்படுகிறது.
வறுமை நிலையில் வாடிய குசேலன் தன்னுடைய நண்பனான கிருஷ்ணரை பார்த்து உதவி கேட்பதற்காக வருவார். அப்படி வரும்பொழுது வெறும் கையுடன் வரக்கூடாது என்பதற்காக அவரால் இயன்ற பொருளான அவலை வாங்கி வருவார். அதை முழு மனதோடு கிருஷ்ண பகவானும் ஏற்றுக் கொள்வார். திரும்பி வந்து பார்க்கும் பொழுது அவர் வீட்டில் செல்வங்கள் குவிந்து கிடந்தன என்று புராணங்கள் கூறுகின்றன. அதனாலேயே கிருஷ்ணருக்கு அவல் என்பது மிகவும் பிடித்தமான நெய்வேத்தியமாக மாறிவிட்டது. அப்படிப்பட்ட அவலை கிருஷ்ணர் குரிய நட்சத்திரமான அபிஜித் நட்சத்திர நேரத்தில் கிருஷ்ணருக்கோ அல்லது பெருமாளுக்கோ நெய்வேத்தியமாக வைத்து நாம் வழிப்பட்டோம் என்றால் நம்முடைய வீட்டிலும் செல்வம் குவியும் என்று கூறப்படுகிறது.
அபிஜித் நட்சத்திர நேரத்தில் பத்து ரூபாய்க்காவது அவலை வாங்கி வந்து வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய பெருமாள் அல்லது கிருஷ்ணரின் படத்திற்கு முன்பாக ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்து இந்த அவலை நெய்வேத்தியமாக வைத்துவிட வேண்டும். பெருமாளுக்கு துளசி மாலையை சாற்றி முழுமனதோடு பெருமாளை வழிபட வேண்டும். நமக்கு தெரிந்த பெருமாளின் மந்திரங்களை கூறியும் வழிபாடு செய்யலாம். இது வேண்டும் அது வேண்டும் என்று எதுவுமே கேட்காமல் பெருமாளின் மந்திரத்தை மட்டும் கூறி வழிபாடு செய்தாலே போதும் பெருமாளின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைப்பதோடு நாம் கேட்காத செல்வத்தையும் வாரி வாரி வழங்குவார்.
இதையும் படிக்கலாமே:18/05/2025 தேய்பிறை சஷ்டி விரதம்
மிகவும் எளிமையான இந்த நெய்வேத்தியத்தை பெருமாளுக்கு அபிஷேத் நட்சத்திர நேரத்தில் வைத்து வழிபாடு செய்ய செல்வங்கள் பெருகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.